வச்ரசூசி உபநிடதம்

சமூகப் பிளவுகளை விமர்சிக்கும் இந்து சமய உரை

வச்ரசூசி உபநிடதம் (Vajrasuchi Upanishad) (சமக்கிருதம்: वज्रसूची उपनिषत्, IAST: Vajrasūcī Upaniṣad) ஒரு முக்கியமான சமசுகிருத நூலும் இந்து மதத்தின் உபநிடதமும் ஆகும். இது 22 சமய (பொது) உபநிடதங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இது வேதாந்த உரையாக அடையாளம் காணப்பட்டுள்ளது.[2][1] இது சாமவேதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[3][2]

வச்ரசூசி உபநிடதம்
உரை சாதி, வர்ணங்கள் (சாதி அமைப்பு) பற்றி விவாதிக்கிறது
தேவநாகரிवज्रसूची
சமக்கிருத ஒலிப்பெயர்ப்புவச்ரசூசி
உபநிடத வகைசாமான்யம்[1]
தொடர்பான வேதம்சாம வேதம்[2]
அத்தியாயங்கள்1
பாடல்களின் எண்ணிக்கை9
அடிப்படைத் தத்துவம்வேதாந்தம்[2]

உரை நான்கு வர்ணங்கள் ( சாதி அமைப்பு) பற்றி விவாதிக்கிறது.[4][5] இது மனிதர்களின் பிரிவினைக்கு எதிரான ஒரு நீடித்த தத்துவ தாக்குதலாக இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், எந்தவொரு மனிதனும் மிக உயர்ந்த ஆன்மீக நிலையை அடைய முடியும் என்று வலியுறுத்துகிறது.[4][6]

சொற்பிறப்பியல் தொகு

வச்ரசூசி என்ற சமசுகிருத வார்த்தையின் பொருள் "வைரம் போன்ற கூர்மையான ஊசி" என்பதாகும்.[3] உபநிடதம் என்பது இந்து மதத்தின் தத்துவக் கருத்துக்களை முன்வைக்கும் வேதாந்த இலக்கியத் தொகுப்பிற்குச் சொந்தமான அறிவு நூல். மேலும் அதன் வேதமான வேதங்களின் உயர்ந்த நோக்கமாகக் கருதப்படுகிறது.[7]

வரலாறு தொகு

வச்ரசூசி உபநிடதம் நவீன யுகத்தில் பல பதிப்புகளில் வாழ்கிறது. உரையின் கையெழுத்துப் பிரதிகள் குடியேற்ற காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு சேகரிக்கப்பட்டன. மேலும் 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வட இந்தியாவிலிருந்து கையெழுத்துப் பிரதிகளின் எட்டு பிரதிகளும் தென்னிந்தியாவிலிருந்து ஐந்து பிரதிகளும் கண்டறியப்பட்டன.[8]பெரும்பாலான பதிப்புகள் சமசுகிருதத்தில் தேவநாகரி எழுத்திலும், இரண்டு தெலுங்கு மொழியிலும், பனை ஓலை கையெழுத்துப் பிரதி வடிவத்தில் இருந்தன. சில சேதமடைந்த நிலையில் இருந்தன.[8][9][10] இந்த கையெழுத்துப் பிரதிகளுக்கு இடையே உரையில் வேறுபாடுகள் உள்ளன.[8][11] ஆனால் கவனம் மற்றும் மைய செய்தி ஒன்றுதான்.[11][8]

 
வச்ரசூசி உபநிடதத்தின் ஆரம்ப வரிகள் (சமசுகிருதம், தேவநாகரி எழுத்து).

வச்ரசூசி உபநிடதத்தின் தேதி மற்றும் ஆசிரியர் பற்றி தெளிவாக இல்லை. 1800-களின் முற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கையெழுத்துப் பிரதிகளில் சங்கராச்சாரியாருக்கு உபநிடதம் கூறப்பட்டுள்ளது.[9]ஆதி சங்கரர் என்றும் அழைக்கப்படும் சங்கராச்சாரியார் ஒரு அத்வைத வேதாந்த அறிஞர். ஆனால் மரியாதைக்குரிய வரலாற்று அறிஞர்களுக்கு நூல்களை அர்ப்பணித்து கற்பிக்கும் இந்திய பாரம்பரியத்தின் அடிப்படையில், ஆதி சங்கரருக்குக் கூறப்பட்ட நூல்கள் உண்மையில் 8 ஆம் நூற்றாண்டில் அவருக்காக இயற்றப்பட்டதா அல்லது 8 ஆம் நூற்றாண்டில் அவரால் இயற்றப்பட்டதா என்பது நிச்சயமற்றது. ஒருவேளை அவர் அப்போது வாழ்ந்திருக்கலாம்.[12][13][14]

இந்த உரை சில சமயங்களில் வச்ரசூசிக உபநிடதம், வச்ர சூசிக உபநிடதம், வச்ரசூசி உபநிடதம், வச்ரசூசி உபநிடதம் மற்றும் வச்ரசூசிக உபநிடதம் எனப் பெயரிடப்படுகிறது.[11][9] அனுமானுக்கு இராமனால் விவரிக்கப்பட்ட முக்திகா நியதியின் 108 உபநிடதங்களின் தெலுங்கு மொழித் தொகுப்பில், இது 36வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.[15]

இதனையும் பார்க்கவும் தொகு

சான்றுகள் தொகு

உசாத்துணை தொகு

  1. 1.0 1.1 Aiyar 1914, ப. vii.
  2. 2.0 2.1 2.2 2.3 Tinoco 1996, ப. 87.
  3. 3.0 3.1 Aiyar 1914, ப. 110.
  4. 4.0 4.1 Aiyar 1914, ப. 111–112.
  5. Mariola Offredi (1997), The banyan tree: essays on early literature in new Indo-Aryan languages, Volume 2, Manohar Publishers, இணையக் கணினி நூலக மையம் 46731068, ISBN 9788173042775, pages 442–446
  6. Radhakrishnan 1953, ப. 937–938.
  7. Muller 1879, ப. xxxvi.
  8. 8.0 8.1 8.2 8.3 Schrader 1908, ப. 267–269.
  9. 9.0 9.1 9.2 Theodor Aufrecht (1892), Florentine Sanskrit Manuscripts, p. PA2, கூகுள் புத்தகங்களில், University of Bonn, Germany, page 2 see entry 8
  10. Vedic Literature, Volume 1, A Descriptive Catalogue of the Sanskrit Manuscripts, p. PA555, கூகுள் புத்தகங்களில், Government of Tamil Nadu, Madras, India, page 555
  11. 11.0 11.1 11.2 Vedic Literature, Volume 1, A Descriptive Catalogue of the Sanskrit Manuscripts, p. PA553, கூகுள் புத்தகங்களில், Government of Tamil Nadu, Madras, India, pages 553–556
  12. Paul Hacker, Philology and Confrontation: Paul Hacker on Traditional and Modern Vedanta (Editor: Wilhelm Halbfass), State University of New York Press, ISBN 978-0-7914-2582-4, pages 30–31
  13. M Piantelly, Sankara e la Renascita del Brahmanesimo, Indian Philosophical Quarterly, Vol. 4, No. 3 (Apr. 1977), pages 429–435
  14. Pande, G.C. (2011). Life and Thought of Śaṅkarācārya. Motilal Banarsidass. பக். 99–112; Quote (page 104): Different catalogues ascribe nearly four hundred works of different kinds to Sankara and it is generally agreed among modern scholars that most of them are apocryphal. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-208-1104-1. 
  15. Deussen 1997, ப. 556–557.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வச்ரசூசி_உபநிடதம்&oldid=3848799" இலிருந்து மீள்விக்கப்பட்டது