பரப்பிரம்ம உபநிடதம்
பரப்பிரம்ம உபநிடதம் (Parabrahma Upanishad) ( சமக்கிருதம்: परब्रह्म उपनिषत्) சமசுகிருதத்தில் இயற்றப்பட்ட இந்து மதத்தின் இடைக்கால சிறு உபநிடதங்களில் ஒன்றாகும்.[4][5] இந்த உரை அதர்வண வேதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[2] மேலும், 20 சந்நியாச (துறவு) உபநிடதங்களில் இதுவும் ஒன்றாகும்.[1]
பரப்பிரம்ம உபநிடதம் | |
---|---|
சன்னியாசியின் ஆடை முக்கியமல்ல, அறிவுதான் முக்கியம் என்று உரை கூறுகிறது | |
தேவநாகரி | परब्रह्म |
சமக்கிருத ஒலிப்பெயர்ப்பு | பரப்பிரம்மம் |
உபநிடத வகை | சந்நியாசம்[1] |
தொடர்பான வேதம் | அதர்வண வேதம்[2] |
அத்தியாயங்கள் | 3[3] |
பரப்பிரம்ம உபநிடதம் முதன்மையாக இல்லறத்தில் ஈடுபடுபடுபவர்கள் அணியும் புனித நூல், முடி, முடியின் பாரம்பரியத்தை விவரிக்கிறது. இந்து ஆசிரம அமைப்பில் துறவற வாழ்க்கை முறையைத் துறந்த பிறகு இருவரும் ஏன் சந்நியாசியால் கைவிடப்படுகின்றனர் என்பதைப் பேசுகிறது. [6] துறப்பவர்களுக்கு ஆடை முக்கியமல்ல என்றும், அறிவே அவர்களின் உண்மையான தலைமுடி என்றும் உரை வலியுறுத்துகிறது. [6] இவ்வாறு அலைந்து திரியும் துறவிகள், பிரம்மத்தை "முழு பிரபஞ்சமும் ஒரு சரத்தில் முத்துக்கள் போல கட்டப்பட்டிருக்கும் உச்ச சரம்" என்று கருதுகின்றனர் என பேட்ரிக் ஆலிவெல் கூறுகிறார். [7] [8] இந்த இடைக்கால உரையில் உள்ள ஆன்மா-பிரம்மத்துக்கு ஈடாக, அறிவு மற்றும் வெளிப்புற ஆடை மற்றும் சடங்குகளை கைவிடுதல் ஆகியவை பண்டைய உபநிடதங்களில் உள்ளதைப் போலவே மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.[9]
உள்ளடக்கம்
தொகுஇல்லறத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சந்நியாசிகளாக மாறும்போது தலைக் குடுமி மற்றும், முப்புரி நூலை ஏன் துறக்கிறார்கள் என்பது பற்றிய தொடர்ச்சியான மற்றும் நீண்ட விவாதத்திற்கு இந்த உரை குறிப்பிடத்தக்கது. [10] அவர்களின் முடியும் முப்புரி நூலும் வெளிப்புறமாகத் தெரிவதில்லை. ஆனால் உட்புறம் உணர்வார்கள் என உரை கூறுகிறது. அறிவின் வடிவத்தில் மற்றும் ஆத்மா-பிரம்மன் பற்றிய அவர்களின் விழிப்புணர்வு பிரபஞ்சத்தை ஒருமைப்படுத்தப்பட்ட ஒருமைக்குள் இழைக்கிறது. [10]
பரப்பிரம்ம உபநிடதம் பிரம்மாவை மனிதன் விழித்திருக்கும்போது உணர்வோடும், விஷ்ணுவை கனவு நிலையில் உள்ள அவனது உணர்வோடும், சிவனை ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள அவனது உணர்வோடும், பிரம்மத்தை துரியமாக, நான்காவது உணர்வோடும் இணைக்கிறது. [11] உச்சிக் குடுமி மற்றும் முப்புரிநூல் அணிபவர்களை, ஆன்மீக சுய அறிவைப் பெறாத வெற்று சின்னங்களைக் கொண்ட "போலி-பிராமணர்கள்" என்று உபநிடதம் அழைக்கிறது. [12] [8]
உண்மையான நம்பிக்கையாளர், உண்மையான விடுதலை தேடுபவர், உரையை வலியுறுத்துகிறார், இந்த வெளிப்புற அடையாளங்களை விட்டுவிட்டு, தனது ஆன்மாவின் தன்மை, இறுதி யதார்த்தம் மற்றும் இதயத்தில் உள்ள உணர்வு ஆகியவற்றை தியானிப்பதிலும் புரிந்துகொள்வதிலும் கவனம் செலுத்துகிறார். [13] அவர் வேதத்தை அறிந்தவர், நல்ல நடத்தை உடையவர், அவருடைய சரத்தின் இழைகள் உண்மையான கொள்கைகள், மேலும் அவர் அறிவை உள்ளுக்குள் அணிந்துள்ளார். [8] அவர் வெளிப்புற சடங்குகளுக்கு கவனம் செலுத்துவதில்லை, அவர் ஓம் மற்றும் ஆன்மா மூலம் விடுதலைக்காக உள் அறிவை அர்ப்பணிக்கிறார்.[8] [13]
பரப்பிரம்ம உபநிடதத்தின் முதல் அத்தியாயம் மிகவும் பழமையான பிரம்ம உபநிடதத்தின் முதல் அத்தியாயத்தைப் போன்றது.[14] [15] இந்த உரை கதாசுருதி உபநிடதத்துடன் பல பிரிவுகளையும் பகிர்ந்து கொள்கிறது.[16] [13] சாந்தோக்கிய உபநிடதம் பகுதி 6.1, மற்றும் அருணேய உபநிடதம் அத்தியாயம் 7 ஆகியவற்றிலிருந்து சமசுகிருத உரையின் துண்டுகளையும் உரை குறிப்பிடுகிறது.
காலம்
தொகுபரப்பிரம்ம உபநிடதம் இயற்றப்பட்ட தேதியோ அல்லது ஆசிரியர் பற்றியோ தெரியவில்லை. ஆனால் அத்தியாயம் 1 தவிர மற்றவை பிரம்ம உபநிடதத்திலிருந்து கடனாகப் பெறப்பட்டுள்ளது மீதமுள்ள உரை இடைக்காலத்தின் பிற்பகுதியில் எழுதப்பட்டதாக இருக்கலாம்.[17] ஆலிவெல், இசுபுரோகாப் போன்ற இந்தியவியலாளர்கள்f இது 14 அல்லது 15 ஆம் நூற்றாண்டு உரையாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். [18] [19]
இந்த உரையின் கையெழுத்துப் பிரதிகள் சில சமயங்களில் பரப்பிரம்மோபநிடதம் என்று பெயரிடப்பட்டுள்ளன.[8][20] இராமனால் அனுமனுக்கு விவரிக்கப்பட்ட முக்திகா நியதியின் 108 உபநிடதங்களின் தெலுங்கு மொழித் தொகுப்பில், இது 78-வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.
இதனையும் பார்க்கவும்
தொகுசான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 Olivelle 1992, ப. x-xi, 5.
- ↑ 2.0 2.1 Tinoco 1996, ப. 89.
- ↑ Olivelle 1992, ப. 266-272.
- ↑ Deussen 1997, ப. 556-557.
- ↑ Tinoco 1996, ப. 86-89.
- ↑ 6.0 6.1 Olivelle 1992, ப. 92, 270-271.
- ↑ Olivelle 1992, ப. 92, 266-268, 270.
- ↑ 8.0 8.1 8.2 8.3 8.4 Hattangadi 2000.
- ↑ Olivelle 1992, ப. 8-9, 92.
- ↑ 10.0 10.1 Olivelle 1992, ப. 266-267, 271.
- ↑ Olivelle 1992, ப. 267.
- ↑ Olivelle 1992, ப. 269 with footnote 13.
- ↑ 13.0 13.1 13.2 Olivelle 1992.
- ↑ Olivelle 1992, ப. 266.
- ↑ Deussen 1997, ப. 725 with footnote 2.
- ↑ Deussen 1997, ப. 557 with footnote 10.
- ↑ Olivelle 1992, ப. 5, 7-8, 278=280.
- ↑ Olivelle 1992, ப. 8-9.
- ↑ Sprockhoff 1976.
- ↑ Vedic Literature, Volume 1, A Descriptive Catalogue of the Sanskrit Manuscripts, p. PA451, கூகுள் புத்தகங்களில், Government of Tamil Nadu, Madras, India, pages 451-452
உசாத்துணை
தொகு- Deussen, Paul (1 January 1997). Sixty Upanishads of the Veda. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1467-7.
- Deussen, Paul (2010). The Philosophy of the Upanishads. Oxford University Press (Reprinted by Cosimo). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-61640-239-6.
- Hattangadi, Sunder (2000). "परब्रह्मोपनिषत् (Parabrahma Upanishad)" (PDF) (in சமஸ்கிருதம்). பார்க்கப்பட்ட நாள் 19 January 2016.
- Olivelle, Patrick (1992). The Samnyasa Upanisads. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0195070453.
- Olivelle, Patrick (1993). The Asrama System. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0195083279.
- Sprockhoff, Joachim F (1976). Samnyasa: Quellenstudien zur Askese im Hinduismus (in ஜெர்மன்). Wiesbaden: Kommissionsverlag Franz Steiner. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3515019057.
- Tinoco, Carlos Alberto (1996). Upanishads. IBRASA. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-85-348-0040-2.