ஆனையிறங்கல் அணை

ஆனையிறங்கல் அணை (Anayirangal Dam) என்பது இந்தியாவின் கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் மூணாரிலிருந்து 22 கிமீ (14 மைல்) தொலைவில் உள்ள சின்னக்கனல் மற்றும் சாந்தன்பரா ஊராட்சியில் ஓடும் பன்னியார் ஆற்றின் மீது கட்டப்பட்ட ஒரு மண் அணை ஆகும்.[1] இந்த அணையின் ஒருபுறம் காடுகளாலும் மறுபுறம் டாட்டா தேயிலைத் தோட்டத்தாலும் சூழப்பட்டுள்ளது. இந்த அணை மூணாறு-குமிளி சாலை அருகில் அமைந்துள்ளது. அணையிலிருந்து பாயும் நீர் பன்னியார் ஆற்றின் மூலம் குத்துங்கல் மற்றும் பொன்முடி அணைகளை அடைகிறது. குத்துங்கல் மற்றும் பன்னியாறு மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பீளிராமிலிருந்து பாயும் சிறிய நீரோடைகளும் தமிழ்நாடு எல்லையில் உள்ள மலைகளிலிருந்து பாயும் மழைநீர் இந்த அணையில் சேமித்து வைக்கப்படுகிறது. அணையின் உயரம் 34.14 மீட்டர்கள். அணையின் நீளம் 326.13 மீட்டர்கள். வழக்கமாகச் சூன் மற்றும் சூலை மாதங்களில் பருவமழை காரணமாக நீர்த்தேக்கம் நிரம்பும்.[2]

ஆனையிறங்கல் அணை
ஆனையிறங்கல் அணை is located in கேரளம்
ஆனையிறங்கல் அணை
Location of ஆனையிறங்கல் அணை in கேரளம்
ஆனையிறங்கல் அணை is located in இந்தியா
ஆனையிறங்கல் அணை
ஆனையிறங்கல் அணை (இந்தியா)
அதிகாரபூர்வ பெயர்ஆனையிறங்கல் அணை
நாடுஇந்தியா
அமைவிடம்இடுக்கி, கேரளம்
புவியியல் ஆள்கூற்று10°00′34″N 77°12′27″E / 10.00944°N 77.20750°E / 10.00944; 77.20750
நோக்கம்நீர்த்தேக்கம்
நிலைசெயல்பாட்டில் உள்ளது
திறந்தது1965 (60 ஆண்டுகளுக்கு முன்னர்) (1965)
உரிமையாளர்(கள்)கேரள மாநில மின்சார வாரியம்
அணையும் வழிகாலும்
வகைமண் அணை
தடுக்கப்படும் ஆறுபன்னியர் ஆறு
உயரம் (அடித்தளம்)34.13 மீ (112.0 அடி)
நீளம்326.13 மீ (1,070.0 அடி)
உயரம் (உச்சி)1,207.02 m (3,960.0 அடி)
வழிகால்கள்3, கதவில்லாதது (9.35 × 4.75 மீ)
வழிகால் வகைOgee type
வழிகால் அளவு348 மீ³/விநாடி
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்ஆணையிறங்கல் நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு50,680,000 m3 (1.790×109 cu ft)
நீர்ப்பிடிப்பு பகுதி64.92 km2 (25.07 sq mi)
அதிகபட்சம் நீர் ஆழம்1,210.07 மீ (3,970.0 அடி)
இயல்பான ஏற்றம்1,207.02 மீ (3,960.0 அடி)
பன்னியாறு மின் உற்பத்தி நிலையம்
ஆள்கூறுகள்9°58′23″N 77°01′41″E / 9.97306°N 77.02806°E / 9.97306; 77.02806
இயக்குனர்(கள்)கேரள மாநில மின்சார வாரியம்
பணியமர்த்தம்1963 (62 ஆண்டுகளுக்கு முன்னர்) (1963)
சுழலிகள்2 × 16.2 வாட்டு (அலகு) (பிரான்சிசு வகை)
நிறுவப்பட்ட திறன்32.4 MW
Annual உற்பத்தி158 மெ.அ.
இணையதளம்
Official website

இந்த திட்டம் பெரியாற்றின் துணை வடிநிலமான முத்திரப்புழா வடிநிலத்தில் அமைந்துள்ளது. ஆனையிறங்கலில் அணை கட்டுவதன் மூலம் இந்த நீர்த்தேக்கம் உருவாக்கப்படுகிறது. கேரள மாநில மின்சார வாரியத்தின் கண்காணிப்பு பொறியாளரான ஈ. யு. பிலிபோசு கட்டுமானத்திற்குத் தலைமை தாங்கினார். இந்த அணையில் கட்டப்படாத கசிவு வழி அமைப்பு உள்ளது. நீர்த்தேக்கத்தில் சேமிக்கப்பட்டுள்ள நீர் ஒரு வெளியேறும் வழியாக ஆற்றின் கீழ்நிலைக்கு வெளியேற்றப்படுகிறது. இந்த நீர் குத்துங்கலில் உள்ள ஒரு மேல்நிலை தடுப்பணை மூலம் குத்துங்கல் மின் நிலையத்திற்குத் திருப்பி விடப்படுகிறது. மின் உற்பத்திக்குப் பிறகு, கீழ்நிலையில் உள்ள பொன்முடி நீர்த்தேக்கத்திற்கு நீர் விடுவிக்கப்படுகிறது. இந்த நீர் பின்னர் முத்திரப்புழாவின் இடது கரையில் அமைந்துள்ள பன்னியார் மின் நிலையத்திற்கு திரும்பி, மீண்டும் முத்திரப்புழா ஆற்றுக்குள் விடுவிக்கப்பட்டு, கீழ்நிலையில் உள்ள கள்ளார்குட்டி நீர்த்தேக்கத்தினைச் சென்றடைகிறது. இங்கிருந்து, நீர் உடும்பன்சோலை, தேவிகுளம், கோதமங்கலம், மூவாற்றுபுழா, குன்னத்துநாடு, ஆலுவா, கொடுங்கல்லூர், பறவூர் ஆகிய வட்டங்கள் வழியாகப் பாய்கிறது.

விவரக்குறிப்புகள்

தொகு
  • அணையின் வகை: மண் அணை
  • வகைப்பாடு: அதிக பட்ச உயரம்
  • ஊராட்சி: சாந்தன்பரா
  • கிராமம்: பூப்பாரா, சின்னகனல், ராஜகுமாரி
  • மாவட்டம்: இடுக்கி
  • ஆறு: பன்னியார்
  • ஆழமான அடித்தளத்திலிருந்து உயரம்: 34.14 மீ
  • நீளம்: 326.13மீ
  • முழு நீர்த்தேக்க நிலை: 1207.02 மீ
  • சேமிப்பு: 50.68 Mm3இல் சேமிப்பு

நீர்த்தேக்கம்

தொகு
 
ஆனையிறங்கல் நீர்த்தேக்கம்

பன்னியாறு ஆற்றில் நீரை அடைத்து வைப்பதன் மூலம் நீர்த்தேக்கம் உருவாகிறது. பன்னியாறு திட்டத்தின் ஒரு பகுதியாக பொன்முடி அணையால் உருவாக்கப்பட்ட இரண்டாவது நீர்த்தேக்கமும் உள்ளது.

  • முழு நீர்த்தேக்க நிலை = 1207.01 மீ
  • குறைந்தபட்ச இழுவை நிலை = 1188.1 மீ
  • திறன் சேமிப்பு= 49.87 MCM இல் பயனுள்ள சேமிப்பு
  • தேக்கப் அளவு= 65.62 MU இல் உற்பத்தி திறன்

மின் உற்பத்தி

தொகு

முத்திரப்புழாவின் இடது கரையில் உள்ள கொன்னத்தடி கிராம ஊராட்சியின் வெள்ளத்தூவல் கிராமத்தில் உள்ள பன்னியாறு மின் நிலையம், தலா 15 மெகாவாட் திறன் கொண்ட 2 விசையாழிகளைப் பயன்படுத்தி 30 மெகாவாட்டு மின்சாரம் உற்பத்தி செய்கிறது. வருடாந்திர உற்பத்தி 158 மெகா அலகு ஆகும். 2003ஆம் ஆண்டில், இந்தத் திட்டம் 30 மெகாவாட்டிலிருந்து 32 மெகாவாட்டாக உயர்த்தப்பட்டது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Anayirankal Dam – KSEB Limited Dam Safety Organisation" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-07.
  2. "പ്രളയത്തിലും നിറയാതെ ഇടുക്കിയിലെ ആനയിറങ്കൽ ഡാം". Asianet News Network Pvt Ltd (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-07.
  3. "PANNIYAR POWER STATION". Kerala State Electricity Board.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனையிறங்கல்_அணை&oldid=4137268" இலிருந்து மீள்விக்கப்பட்டது