ஆம்ஹர்ஸ்ட் பிரபு

பிரித்தானிய இராசதந்திரி (1773-1857)

வில்லியம் பிட் ஆம்ஹர்ஸ்ட், 1வது ஏர்ல் ஆம்ஹெர்ஸ்ட், (William Amherst, 1st Earl Amherst, 14 சனவரி 1773 – 13 மார்ச் 1857) என்பவர் ஒரு பிரித்தானிய இராசதந்திரி மற்றும் காலனித்துவ நிர்வாகி ஆவார். இவர் 1823 மற்றும் 1828 க்கு இடையில் இந்தியாவின் தலைமை ஆளுநராக இருந்தார்.

The Earl Amherst
Standing portrait of Lord Amherst, oil on canvas
செயின்ட் ஜேம்ஸ் [வெஸ்ட்மின்ஸ்டர்] விசுவாசமான தன்னார்வப் படைப்பிரிவின் சீருடையில் ஆம்ஹெர்ஸ்ட் பிரபு. ஆர்தர் வில்லியம் தேவிஸ், 1803.
வில்லியம் கோட்டை இராசதானியின் தலைமை ஆளுநர்
பதவியில்
1 ஆகத்து 1823 – 13 மார்ச் 1828
ஆட்சியாளர்நான்காம் ஜார்ஜ்
பிரதமர்
முன்னையவர்John Adam
(Acting Governor-General)
பின்னவர்William Butterworth Bayley
(Acting Governor-General)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1773-01-14)14 சனவரி 1773
Bath, Somerset
இறப்பு13 மார்ச்சு 1857(1857-03-13) (அகவை 84)
Knole House, Kent
தேசியம்பிரித்தானியர்
துணைவர்s
  • Sarah Archer
    (தி. 1800; இற. 1838)
  • Lady Mary Sackville (தி. 1839)
பிள்ளைகள்3, including Sarah and William
பெற்றோர்(கள்)
முன்னாள் கல்லூரிChrist Church, Oxford

பின்னணி மற்றும் கல்வி தொகு

இவர் பாத், சோமர்செட்டில் பிறந்தார். இவர் வில்லியம் ஆம்ஹர்ஸ்ட் மற்றும் தாமஸ் பேட்டர்சனின் மகள் எலிசபெத்தின் மகனாவார். இவர் ஜெஃப்ரி ஆம்ஹெர்ஸ்ட், முதலாவது பரோன் ஆம்ஹெர்ஸ்டின் மருமகன். இவர் வெஸ்ட்மின்ஸ்டர் பள்ளி மற்றும் ஆக்ஸ்போர்டில் உள்ள கிறிஸ்ட் சர்ச்சில் பயின்றார்.

சீனாவுக்கான தூதராக தொகு

 
பார்லிமென்ட் உடையை அணிந்துள்ள ஆம்ஹர்ஸ்ட் பிரபு.
தாமஸ் லாரன்ஸ் வரைந்த ஓவியம், 1821.

சீனம் மற்றும் பிரித்தானிய பேரரசுக்கு இடையே மிகவும் சுமூகமான வணிக உறவை உருவாக்கும் நோக்கில், 1816 ஆம் ஆண்டில், இவர் சீனாவின் சின் அரசின் அரசவைக்கு தூதராக அனுப்பப்பட்டார். பெய் ஹோ (பைஹே, இன்றைய ஹைஹே) வந்தடைந்தார். மன்னரை சந்திக்கும்போது அங்கு உள்ள வழக்கப்படி மன்னரின் முன் மண்டியிட்டு வணங்கவேண்டும். அவ்வாறு வணங்குவதாக இருந்தால் மட்டுமே பேரரசர் ஜியாகிங்கை சந்திக்க முடியும் என்பதை இவர் புரிந்துகொண்டார். ஆனால் ஆம்ஹெர்ஸ்ட், தன்னுடன் இரண்டாவது தூதராக இருந்த சர் ஜார்ஜ் தாமஸ் ஸ்டாண்டனின் ஆலோசனையைப் பின்பற்றி, 1793 இல் மக்கார்ட்னி மண்டியிட மறுத்ததைப்போல அதற்கு, சம்மதிக்க மறுத்துவிட்டார். இதன் விளைவாக, இவர் பீக்கிங்கிற்குள் (பெய்ஜிங்) நுழைய மறுக்கப்பட்டார். இதனால் இவரது பயணத்தின் நோக்கம் கைகூடவில்லை. [1]

இவரது கப்பலான அல்செஸ்டெ கொரியாவின் கரையோரப் பயணத்திற்குப் பிறகு, இரியூக்கியூ தீவுகளுக்குச் சென்ற பிறகு, காஸ்பர் ஜலசந்தியில் மூழ்கி இருந்த பாறையில் இடித்து முற்றிலும் சிதைந்தது. அம்ஹெர்ஸ்ட்டும் உடைந்த கப்பலில் இருந்த அவரது தோழர்களில் ஒரு பகுதியினரும் படேவியாவுக்கு கப்பலில் இருந்த சிறு படகுகளில் தப்பிச்சென்றனர். மீதமுள்ளவர்கள் மீட்க ஆட்கள் அனுப்பப்பட்டனர். 1817 இல் இவர் இங்கிலாந்து திரும்பிய கப்பல் செயிண்ட் எலனாவைத் தொட்டது. அதன் விளைவாக, இவர் பேரரசர் நெப்போலியனுடன் பல நேர்காணல்களை நடத்தினார். [1] ஒரு நேர்காணலில் நெப்போலியன், "சீனா ஒரு உறங்கும் மாபெரும் நாடு. அது தூங்கட்டும். ஏனெனில் அது விழித்தெழுந்தால் உலகையே உலுக்கிவிடும்." [2]

இந்தியாவின் தலைமை ஆளுநராக தொகு

ஆம்ஹெர்ஸ்ட் 1823 ஆகத்து முதல் 1828 பெப்ரவரி வரை இந்தியாவின் தலைமை ஆளுநராக இருந்தார். இவரது அரசாங்கத்தின் முக்கிய நிகழ்வுகளாக அசாம் பிரித்தானிய இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 1824 ஆம் ஆண்டின் முதல் பர்மியப் போரில் ஈடுபட்டு, அதன் விளைவாக அரக்கான் மற்றும் தெனாசெரிம் ஆகியவை பிரித்தானியப் பேரரசுடன் இணைக்கபட்டது போன்றவை ஆகும். [1] [3]

1823 இல் தலைமை ஆளுநரான மார்குவிஸ் ஹேஸ்டிங்ஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து ஆம்ஹெர்ஸ்டின் அப்பதவிக்கு நியமிக்கபட்டார்.

இருப்பினும், ஆம்ஹெர்ஸ்ட் அனுபவமற்ற ஒரு ஆளுநராக இருந்தார். இவர் தனது பதவிக்காலத்தின் ஆரம்ப காலத்தில், சர் எட்வர்ட் பேஜெட் போன்ற வங்காளத்தில் மூத்த இராணுவ அதிகாரிகளின் செல்வாக்கிற்கு பெரிதும் ஆட்பட்டிருந்தார். இவர் வருவதற்கு முன், செயல் தலைமை ஆளுனராக இருந்த ஜான் ஆடமிடம் காலத்தில் உருவான ஒரு பிராந்தியம் குறித்த தகராறு இருந்தது. இது நாஃப் ஆற்றின் ஆங்கிலோ-பர்மிய எல்லை சிக்கல் ஆகும். இது 1823 செம்டம்பர் 24 அன்று வன்முறையாக பரவியது. பர்மிய பிராந்திய ஆக்கிரமிப்பின் போது மதிப்பிழக்க விரும்பத, ஆம்ஹெர்ஸ்ட் படைகளுக்கு மோத உத்தரவிட்டார்.

இந்தப் போர் இரண்டு ஆண்டுகள் நீடித்தது. போருக்கு 13  மில்லியன் பவுண்டுகள் செலவானது. இதனால் இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ஜார்ஜ் கேனிங், வெலிங்டன் டியூக் போன்ற ஆற்றல் மிக்க நண்பர்களின் முயற்சியால் தான், போரின் முடிவில் ஆம்ஹெர்ஸ்ட் அவமானத்தில் இருந்து தப்பித்தார்.

பர்மா மீதான ஆம்ஹெர்ஸ்டின் நிலைப்பாட்டை போர் பெருமளவில் மாற்றியது. மேலும் இவர் அடுத்து கீழ் பர்மாவை இணைக்கும் செயலில் ஈடுபட பிடிவாதமாக மறுத்துவிட்டார். ஆனால் இவர் இழந்துபோன தனது நற்பெயரை முழுமையாக சரிசெய்வதில் வெற்றிபெறமுடியவில்லை. மேலும் இவர் 1828 இல் இடமாற்றம் செய்யப்பட்டார். இவர் 1826 ஆம் ஆண்டில் கிழக்கிந்தியத் தீவுகளில் உள்ள அர்ரகனின் ஏர்ல் ஆம்ஹெர்ஸ்ட் மற்றும் கென்ட் கவுண்டியில் விஸ்கவுண்ட் ஹோம்ஸ்டேல் ஆகியவற்றை உருவாக்கினார். இங்கிலாந்து திரும்பிய இவர் 1857 மார்ச்சில் இறக்கும் வரை ஓய்வில் வாழ்ந்தார். [1]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 Chisholm 1911.
  2. Reported as "unverified" except for publication in The Mind of Napoleon, ed. and trans. J. Christopher Herold (1955), p. 249. Respectfully Quoted: A Dictionary of Quotations (1989), p. 43.
  3. Karl Marx, "War in Burma—The Russian Question—Curious Diplomatic Correspondence" contained in the Collected Works of Karl Marx and Frederick Engels: Volume 12 (International Publishers: New York, 1979) p. 202.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆம்ஹர்ஸ்ட்_பிரபு&oldid=3677397" இலிருந்து மீள்விக்கப்பட்டது