ஆரன் யோன்சு

ஆரன் யோன்சு (Aaron Jones, பிறப்பு: 19 அக்டோபர் 1994) ஒரு அமெரிக்கத் துடுப்பாட்ட வீரர் ஆவார், இவர் ஐக்கிய அமெரிக்கத் துடுப்பாட்ட அணிக்காக மட்டையாளராக விளையாடி வருகிறார். வலக்கை உயர்-வரிசை மட்டையாளரான இவர் அவ்வப்போது நேர்ச்சுழல் பந்துவீச்சாளராகவும் விளையாடுகிறார். இவர் மேற்கிந்திய உள்நாட்டுத் துடுப்பாட்டத்தில் பார்படோசு தேசிய அணிக்காகவும், ஒருங்கிணைந்த வளாகங்கள் மற்றும் கல்லூரிகள் அணிக்காகவும் விளையாடுகிறார்.

ஆரன் யோன்சு
Aaron Jones
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு19 அக்டோபர் 1994 (1994-10-19) (அகவை 30)
குயின்சு, ஐக்கிய அமெரிக்கா
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை நேர்ச்சுழல்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 14)27 ஏப்ரல் 2019 எ. பப்புவா நியூ கினி
கடைசி ஒநாப6 சூலை 2023 எ. ஐக்கிய அரபு அமீரகம்
ஒநாப சட்டை எண்85
இ20ப அறிமுகம் (தொப்பி 1)15 மார்ச் 2019 எ. ஐக்கிய அரபு அமீரகம்
கடைசி இ20ப02 யூன் 2024 எ. கனடா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2016–2017கூட்டு வளாகங்கள்
2017–இன்றுபார்படோசு
2023–இன்றுராங்பூர் ரைடர்சு
2023–இன்றுசியாட்டில் ஓர்க்கசு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒநாப இ20ப முத பஅ
ஆட்டங்கள் 43 27 9 65
ஓட்டங்கள் 1,454 478 342 1,866
மட்டையாட்ட சராசரி 36.35 28.11 20.11 31.62
100கள்/50கள் 1/10 0/2 0/1 2/11
அதியுயர் ஓட்டம் 123 94* 52* 123*
வீசிய பந்துகள் 186 127 60 312
வீழ்த்தல்கள் 0 6 2 3
பந்துவீச்சு சராசரி 21.16 29.00 92.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0
சிறந்த பந்துவீச்சு 2/37 2/58 2/46
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
14/– 4/– 3/– 20/–
மூலம்: கிரிக்கின்ஃபோ, 2 சூன் 2024

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

ஆரன் யோன்சு ஐக்கிய அமெரிக்காவில் பார்படோசுப் பெற்றோர்களுக்குப் பிறந்தவர்.

துடுப்பாட்ட வாழ்க்கை

தொகு

யோன்சு தனது முதலாவது பட்டியல் அ போட்டியில் 2016 சனவரியில், லீவார்டு தீவுகள் அணிக்கு எதிராக 2015-16 பிராந்திய சூப்பர்50 தொடரில் விளையாடினார்.[1] தனது முதல்-தர விளையாட்டை 2017 அக்டோபர் 26 இல் பார்படோசு அணியில் விளையாடினார்.[2]

2018 அக்டோபரில், அமெரிக்க அணியில் ஓமானில் நடைபெற்ற 2018 ஐசிசி உலகத் துடுப்பாட்ட அணி மூன்றாம் பிரிவு தொடரில் விளையாட அழைக்கப்பட்டார்.[3] இத்தொடரில் ஐந்து ஆட்டங்களில் 200 ஓட்டங்களைக் எடுத்து அமெரிக்க அணியின் முன்னணி துடுப்பாளராக விளங்கினார்.[4]

மார்ச் 2019 இல், அமெரிக்காவின் பன்னாட்டு இருபது20 (இ20ப) அணியில் அமீரக அணிக்கு எதிராக விளையாடினார்.[5][6] இது அமெரிக்காவின் முதலாவது இ20ப போட்டித் தொடராகும்.[7][8]

மேற்கோள்கள்

தொகு
  1. Nagico Super50, Group B: Leeward Islands v Combined Campuses and Colleges at Basseterre, Jan 7, 2016 – ESPNcricinfo. Retrieved 13 January 2016.
  2. "2nd Match (D/N), WICB Professional Cricket League Regional 4 Day Tournament at Bridgetown, Oct 26–29 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 October 2017.
  3. "Hayden Walsh Jr, Aaron Jones in USA squad for WCL Division Three". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 October 2018.
  4. "ICC World Cricket League Division Three, 2018/19 – United States: Batting and bowling averages". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 November 2018.
  5. "Xavier Marshall recalled for USA's T20I tour of UAE". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 28 February 2019.
  6. "Team USA squad announced for historic Dubai tour". USA Cricket. 28 February 2019. பார்க்கப்பட்ட நாள் 28 February 2019.
  7. "USA name squad for first-ever T20I". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 28 February 2019.
  8. "1st T20I, United States of America tour of United Arab Emirates at Dubai, Mar 15 2019". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 March 2019.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரன்_யோன்சு&oldid=3990603" இலிருந்து மீள்விக்கப்பட்டது