ஆராச்சார் நிலம்

ஆராச்சார் நிலம், பிரித்தானிய இந்தியாவில் 1948 வரை சுதேச சமஸ்தான இருந்த திருவிதாங்கூர் இராச்சியத்தில் மரண தண்டனை கைதிகளை, தூக்கில் இடும் பணியைச் செய்த நாஞ்சில் நாட்டைச் சேர்ந்த அகத்தீஸ்வரம் வட்டத்தில் வாழ்ந்த குடும்பத்தினருக்கு (தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது) 1901ஆம் ஆண்டில் திருவாங்கூர் மன்னரால் இனாமாக வழங்கப்பட்ட வேளாண்மை நிலம் ஆகும்.

இந்திய விடுதலைக்குப் பின் 1956 மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் கேரளா மாநிலம் உருவானபின் கேரள மாநிலத்தில் ஆராச்சார் (தூக்கிலிடுபவர்) சேவை 1970 ஆம் ஆண்டு திரும்பப் பெறப்பட்டு, தீர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வரை ஆராச்சார் நில வகைப்பாடு 1979ஆம் ஆண்டு முடிய நடைமுறையில் இருந்தது. மேலும் கன்னியாகுமரி இணைப்புப் போராட்டத்தின் விளைவாக 1 நவம்பர் 956 அன்று தமிழ் மொழி]] அதிகம் பேசப்படும் தோவாளை வட்டம், அகத்தீஸ்வரம் வட்டம், கல்குளம் வட்டம் மற்றும் விளவங்கோடு வட்டங்கள் தமிழ்நாட்டின் புதிய கன்னியாகுமரி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

இதற்கிடையே 1963ஆம் ஆண்டின் தமிழ்நாடு இனாம் (ஒழிப்பு & ரயத்துவாரி மாற்றம்) சட்டத்தின்[1] [2][3][4]கீழ் ஆராச்சார் நில மானிய முறை ஒழிக்கப்பட்டதால், தூக்கிலிடுபவர்களுக்கு வழங்கப்பட்ட நிலம் தமிழ்நாடு அரசின் நிலமாக வகைப்படுத்தப்பட்டது.

வழக்கு

தொகு

ஆராச்சார் நிலங்களை அனுபவித்த சட்டப்பூர்வ வாரிசுகளில் உயிருடன் இருந்த சிலரில், வேலாயுத பெருமாள் பிள்ளைக்கு என்பவருக்கு 1969ஆம் ஆண்டில் ரயத்வாரி பட்டா வழங்கப்பட்ட போது திருவிதாங்கூர் இராச்சியத்தில் ஆராச்சார் (தூக்கிலிடும் சேவை) இருந்தது. 1970ஆம் ஆண்டு கேரள மாநிலத்தால் ஆராச்சார் சேவை திரும்பப் பெறப்பட்டது.

பின் ஆராச்சார் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் சமரசம் செய்து கொண்டு, குறிப்பிட்ட ஆராச்சார் நிலங்களை பிச்சைக்காரப் பிள்ளை என்பவரின் ஒரு கிளைக்கும், மீதமுள்ள ஆராச்சார் நிலங்களை வேலாயுதப் பெருமாள் பிள்ளை என்ற மற்றொரு கிளைக்கும் விற்றதனர்.

1967ஆம் ஆண்டு ரயோத்வாரி கணக்கெடுப்பின் போது, நாகர்கோவில் உதவி தீர்வாய அலுவலர், சிறு இனாம் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் ஆராச்சர் நிலங்களை அரசு நிலமாக வகைப்படுத்தினர்.. ஆனால் நாகர்கோவில் துணை ஆட்சியர் ஆராச்சர் நிலங்கள், ஆராச்சார் சேவைக்கு சம்பந்தமில்லாத நபர்களிடம் இருப்பதைக் கண்டறிந்து, அந்நிலங்களை ஆராச்சார் சேவை நிலங்கள் என வகைப்படுத்தினார்..

இனாம் ஒழிப்புச் சட்டத்தின் பிரிவு 2(9) (iv) இன் படி சிறு இனாம்கள் மற்றும் ஆராச்சார் நிலங்களுக்கு ஆதரவாக வழங்கப்பட்ட வருவாய் பட்டாக்களை ரத்து செய்து 12.மே 2014 அன்று உத்தரவு இடப்பட்டது. எனவே ஆராச்சார் நிலங்களை வாங்குபவர்களுக்கு நில உரிமை பட்டா வழங்கப்படவில்லை..[5]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆராச்சார்_நிலம்&oldid=4130760" இலிருந்து மீள்விக்கப்பட்டது