ஆரி பாட்டர் அண்டு த காப் பிளட்டு பிரின்சு (திரைப்படம்)
ஆரி பாட்டர் அண்டு த காப் பிளட்டு பிரின்சு (Harry Potter and the Half-Blood Prince) என்பது 2009 ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய இராச்சிய- அமெரிக்க நாட்டு கனவுருப்புனைவுத் திரைப்படம் ஆகும். இது புதின எழுத்தாளர் ஜே. கே. ரௌலிங் என்பவர் எழுத்தில் 2005 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளியான நாவலை மையமாக வைத்து 'டேவிட் யேட்ஸ்'[3] என்பர் இயக்க, வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து மற்றும் விநியோகம் செய்தது. இந்த திரைப்படத்தில் டேனியல் ராட்க்ளிஃப், ரூபர்ட் கிரின்ட் மற்றும் எம்மா வாட்சன் ஆகியோர் முதன்மை கதாபத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
ஆரி பாட்டர் அண்டு த காப் பிளட்டு பிரின்சு | |
---|---|
இயக்கம் | டேவிட் யேட்ஸ் |
தயாரிப்பு |
|
மூலக்கதை | ஆரி பாட்டர் அண்டு த காப் பிளட்டு பிரின்சு படைத்தவர் ஜே. கே. ரௌலிங் |
திரைக்கதை | ஸ்டீவ் குலவ்ஸ் |
இசை | நிக்கலசு கூப்பர் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | புரூனோ டெல்பொன்னெல் |
படத்தொகுப்பு | மார்க் டே |
கலையகம் | கேய்டே பிலிம்சு |
விநியோகம் | வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் |
வெளியீடு | 6 சூலை 2009(தோக்கியோ premiere) 7 சூலை 2009 (இலண்டன்) 15 சூலை 2009 (ஐக்கிய இராச்சியம்) 15 சூலை 2009 (அமெரிக்கா) |
ஓட்டம் | 153 நிமிடங்கள்[1] |
நாடு | |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $250 மில்லியன்[2] |
மொத்த வருவாய் | $934.4 மில்லியன் |
இத்திரைப்படம் ஆரி பாட்டர் ஹாக்வார்ட்சு மந்திரவாதப் பள்ளியில் படிகின்றமையும், விசித்திரமான மாயராஜ குமாரனின் புத்தகம் கிடைத்தல், காதலில் விழுதல் போன்றன இத்திரைப்படத்தில் இடம்பெறுகின்றன. மற்றும் இத்திரைப்படத்திலே ஹாக்வார்ட்சு மந்திரவாதப் பள்ளியின் தலைமை ஆசிரியரான அல்பசு டம்பில்டோர் செவரசு சிநேப்பால் கொல்லப்படுகிறார்.
ஆரி பாட்டர் அண்டு த காப் பிளட்டு பிரின்சு என்ற படம் 7 ஜூலை 2009 இல் இலண்டனில் திரையிடப்பட்டது.[4] மற்றும் ஜூலை 15 அன்று உலகளவில் வெளியிடப்பட்டது.[5] இந்த படம் ஒரு பெரிய வணிக வெற்றியைப் பெற்றது, இது உலகளவில் 934 மில்லியன் டாலர்களை வசூலித்தது. இது எல்லா நேரத்திலும் அதிக வருமானம் ஈட்டிய எட்டாவது படமாகவும். மற்றும் 2009 ஆம் ஆண்டின் இரண்டாவது அதிக வசூல் செய்த படம் ஆகும்.[6]
இதன் ஆறாவது படமான ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு - பாகம் 1 என்ற படம் இரண்டு பாகமாக 2010 ஆம் ஆண்டு வெளியானது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Dargis, Manohla (15 சூலை 2009). "Movie Review-ஆரி பாட்டர் அண்டு த காப் பிளட்டு பிரின்சு". The New York Times. http://movies.nytimes.com/2009/07/15/movies/15harry.html. பார்த்த நாள்: 15 சூலை 2009.
- ↑ "Half-Blood Prince Production Budget". Los Angeles Times. 22 சூன் 2009. http://latimesblogs.latimes.com/herocomplex/2009/06/harry-potter-countdown-are-dvd-fans-still-under-the-wizards-spell-.html. பார்த்த நாள்: 23 சூன் 2009.
- ↑ "Alfonso Cuaron To Return To Harry Potter?". JewReview.net. 18 November 2006. Archived from the original on 14 December 2007. பார்க்கப்பட்ட நாள் 18 November 2006.
- ↑ "Harry Potter And The Half-Blood Prince premiere: Daniel Radcliffe soaked by rain". The Daily Telegraph. 7 July 2009. பார்க்கப்பட்ட நாள் 19 July 2018.
- ↑ Barnes, Brooks (6 August 2009). "Tight Battle at the Holiday Box Office". The New York Times. https://www.nytimes.com/2009/07/06/movies/06box.html.
- ↑ Strowbridge, C.S. (19 September 2009). "International Details – Dusk for Ice Age". The Numbers. பார்க்கப்பட்ட நாள் 13 August 2010.
Since last week it has overtaken The Two Towers for eighth place on the worldwide chart