ஆர்தர் பெர்சிவல்
ஆர்தர் பெர்சிவல் அல்லது ஆர்தர் எர்னஸ்ட் பெர்சிவல் (ஆங்கிலம்; மலாய்: Arthur Ernest Percival; சீனம்: 白思华); (26 டிசம்பர் 1887 – 31 சனவரி 1966) என்பவர் மூத்த பிரித்தானிய இராணுவ அதிகாரி ஆவார். இரண்டாம் உலகப் போரின் போது, மலாயா பிரித்தானிய இராணுவத்தின் தளபதி;[1][2] மற்றும் சிங்கப்பூரில் தலைமையகத்தைக் கொண்டிருந்த மலாயா பிரித்தானிய இராணுவத்தின் 85,000 நேச நாட்டுப் போர் வீரர்களுக்கும் தளபதியாகப் பொறுப்பு வகித்தவர்.
ஆர்தர் எர்னஸ்ட் பெர்சிவல் Arthur Ernest Percival | |
---|---|
ஆர்தர் பெர்சிவல், மலாயா இராணுவத் தளபதி, மலாயா இராணுவம், டிசம்பர் 1941 | |
பிறப்பு | ஆசுபென்டன், ஆர்ட்போர்ட்சயர், இங்கிலாந்து | 26 திசம்பர் 1887
இறப்பு | 31 சனவரி 1966 வெஸ்ட்மின்ஸ்டர், இலண்டன் இங்கிலாந்து | (அகவை 78)
சார்பு | ஐக்கிய இராச்சியம் |
சேவை/ | பிரித்தானிய இராணுவம் |
சேவைக்காலம் | 1914–1946 |
தரம் | தலைமை லெப்டினன்ட் |
தொடரிலக்கம் | 8785 |
படைப்பிரிவு | எசெக்ஸ் படையணி; செசயர் படையணி |
கட்டளை | மலாயா இராணுவம் (1941–1942) |
போர்கள்/யுத்தங்கள் | முதலாம் உலகப் போர் |
துணை(கள்) | மார்கரெட் எலிசபெத் (தி. 1927; இற. 1953) |
பிள்ளைகள் |
|
மலாயாவில் நடந்த போர்களான கோத்தா பாரு போர்; ஜித்ரா போர்; குரூண் போர்; கம்பார் போர்; சிலிம் ரிவர் போர்; கிம்மாஸ் போர்; மூவார் போர்; எண்டாவ் போர் ஆகிய போர்களில் நேச நாட்டுப் படைகளின் தளபதியாகப் பணியாற்றினார். அத்துடன் சிங்கப்பூரில் நடந்த சிங்கப்பூர் போருக்கும் பொறுப்பு வகித்தவர் ஆவார்.
இராணுவ வாழ்க்கை
தொகுமுதல் உலகப் போருக்கு பின்னர் அவர் ஒரு வெற்றிகரமான இராணுவ வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டார். ஆனாலும் அவரின் இரண்டாம் உலகப் போரின் தோல்வி மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். மலாயா போர்கள்; சிங்கப்பூர் போர் ஆகிய போர்களில் அவர் பிரித்தானிய பேரரசின் படைகளுக்குத் தலைமை தாங்கியவர் ஆகும்.
இரண்டாம் உலகப் போரில் சப்பானிய இராணுவப் படையிடம் பெர்சிவல் சரணடைந்த நிகழ்வு; பிரித்தானிய இராணுவ வரலாற்றில் மிகப்பெரிய சரணடைதல் நிகழ்வாக அறியப்படுகிறது. மேலும் அந்த நிகழ்வு, கிழக்கு ஆசியாவில் ஒரு தனியரசாட்சியாக (Imperial Power) விளங்கிய பிரித்தானிய பேரரசின் மதிப்பை ஒரு குறைமதிப்பிற்கு உட்படுத்திய நிகழ்வாகவும் கருதப்படுகிறது.[3][4]
இரண்டாம் உலகப் போர்
தொகுஇரண்டாம் உலகப் போரில் சப்பானிய இராணுவப் படையிடம் பிரித்தானியப் பேரரசு சரண் அடைந்ததற்கு ஆர்தர் பெர்சிவல் மட்டும் காரணம் அல்ல என்று சர் ஜோன் ஸ்மித் போன்ற வரலாற்று ஆசிரியர்கள் கருத்துகள் தெரிவிக்கின்றனர்.[5]
மலாயாவின் பாதுகாப்புக்கு பிரித்தானியப் பேரரசு குறைவான நிதியை ஒதுக்கீடு செய்தது; சிங்கப்பூரில் இருந்த பிரித்தானிய இராணுவத் தலைமைத்துவம், போர் முனைகளுக்கு குறைவான ஆயுதங்களை வழங்கியது போன்றவை முக்கியமான காரணங்கள் என்றும்; ஆர்தர் பெர்சிவலின் தலைமைத்துவத்தைக் குற்றம் சாட்டுவது சரியன்று என்றும் வரலாற்று ஆசிரியர்கள் சிலர் கருத்துகள் தெரிவிக்கின்றனர்.
வாழ்க்கை
தொகுஆர்தர் பெர்சிவல் 1887-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி இங்கிலாந்து, ஆசுபென்டன், ஆர்ட்போர்ட்சயர் எனும் இடத்தில் பிறந்தார். தந்தையார் பெயர் ஆல்பிரட் ரெஜினால்ட்; தாயார் பெயர் எடித் பெர்சிவல்; குடும்பத்தில் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.[6]
பள்ளியில் இவர் ஒரு மிதமான மாணவர்; கிரேக்கம் மற்றும் லத்தீன் மொழிகளைப் படித்தவர். ஆனால் பள்ளிப்படிப்பில் சிறந்த மாணவர் அல்ல என்று அறியப்படுகிறார்.[7] 1906-இல் உயர்நிலைப்படிப்பை முடித்த போது, அவர் சிறந்த ஒரு விளையாட்டு வீரராக இருந்தார்.[8]
பெர்சிவல் 26 வயதில் இராணுவத்தில் சேர்ந்தார். 1915-ஆம் ஆண்டில் கேப்டனாக பதவி உயர்வு பெற்றார்.[6][9]}} 1920-ஆம் ஆண்டில், அயர்லாந்து சுதந்திரப் போரின் போது அயர்லாந்து குடியரசு இராணுவத்திற்கு எதிராகப் போராடினார். மார்ச் 1936-இல் பெர்சிவல் கர்னல் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.[10][11]
மலாயா போர்கள்
தொகுஏப்ரல் 1941-இல் மலாயாவில் பிரித்தானிய இராணுவத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டார்.[12][13] சிங்கப்பூரில் தலைமையகத்தைக் கொண்டிருந்த மலாயா பிரித்தானிய இராணுவத்தின் 85,000 நேச நாட்டுப் படைகளுக்குத் தலைமை தாங்கினார்.
மலாயாவில் நடந்த போர்களான கோத்தா பாரு போர்; ஜித்ரா போர்; குரூண் போர்; கம்பார் போர்; சிலிம் ரிவர் போர்; கிம்மாஸ் போர்; மூவார் போர்; எண்டாவ் போர் ஆகிய போர்களில் நேச நாட்டுப் படைகளின் தளபதியாகப் பணியாற்றினார். அத்துடன் சிங்கப்பூரில் நடந்த சிங்கப்பூர் போருக்கும் தலைமை தாங்கினார்.
சிங்கப்பூர் போர்
தொகுசிங்கப்பூர் போர் தொடங்கியதில் இருந்து, ஆர்தர் பெர்சிவலிடம் சப்பானிய தளபதி தோமோயுகி யமாசிதா நிபந்தனையற்ற சரணடைதலைக் கோரி வந்தார். இறுதியில், 1942 பிப்ரவரி 15-ஆம் தேதி பிற்பகலில், பெர்சிவல் சரண் அடைந்தார். சுமார் 80,000 பிரித்தானிய, இந்திய, ஆஸ்திரேலிய மற்றும் உள்ளூர் வீரர்கள் போர்க் கைதிகளாக ஆனார்கள்.
மலாயா போர்களில் கைது செய்யப் பட்டவர்களுடன், அவர்கள் மீதான முறை தவறிய பயன்பாடுகள் அல்லது கட்டாய உழைப்புகள் போன்றவற்றினால், ஏறக்குறைய 50,000 நேச நாடுகளின் போர் வீரர்கள் இறந்தனர். சிங்கப்பூரின் வீழ்ச்சி, பிரித்தானிய இராணுவ வரலாற்றில் மிக மோசமான பேரழிவு என்று கணிக்கப்படுகிறது.
31 சனவரி 1966 அன்று, தம் 78-ஆவது வயதில் இங்கிலாந்து இலண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாநகரின் கிங் எட்வர்ட் VII மருத்துவமனையில் ஆர்தர் பெர்சிவல் காலமானார்.[14]
சிறைவாசம்
தொகுமலாயா, சிங்கப்பூரில் இருந்த பிரித்தானிய கூட்டுப் படைகள், சப்பானியர்களிடம் சரண் அடைந்த பின்னர், சாங்கி சிறைச்சாலையில், ஆர்தர் பெர்சிவல் சிறிதுகாலம் சிறை வைக்கப்பட்டார்.[15] ஆகஸ்டு 1942-இல் மற்ற மூத்த பிரித்தானிய அதிகாரிகளுடன் சிங்கப்பூரில் இருந்து பாமோசா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.[16] பின்னர் மஞ்சூரியாவில் உள்ள முக்டென் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார்.[17]
இரண்டாம் உலகப் போரின் முடிவில் சப்பானியர்கள் சரண் அடைந்தார்கள். 1945 செப்டம்பர் 2-ஆம் தேதி, சப்பான் சரணடைவு நிகழ்வைக் காண பெர்சிவல், தோக்கியோ வளைகுடாவிற்குச் சென்றார். அந்த நிகழ்வு இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகளின் பசிபிக் மண்டலத் தளபதி டக்ளசு மக்கார்த்தர் தலைமையில் நடைபெற்றது.[18][19]
அந்த நிகழ்வில், முன்னாள் சப்பானியப் படைகளின் தளபதி தோமோயுகி யமாசிதா, பெர்சிவாலைப் பார்த்து, ஆச்சரியப்பட்டார். யமாசிதாவுடன் கைகுலுக்க பெர்சிவல் மறுத்துவிட்டார். சிங்கப்பூரில் தம்முடைய போர்க் கைதிகள் மோசமாக நடத்தப்பட்டதால் பெர்சிவல் கோபத்தில் இருந்தார்.[20]
விருதுகள்
தொகு- Military Cross (MC) - (1916)[21]
- Croix de Guerre - (1918)
- Distinguished Service Order (DSO) - (1918)[22]
- Distinguished Service Order (DSO*) - (1920)[23]
- (OBE (Mil)) - (1921)[24]
- - Order of the Bath (CB (Mil)) - (1941)[25]
- Deputy Lieutenant (DL) - (1951)[26]
- - Order of Saint John (OStJ) (1964)
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Hack and Blackburn, Did Singapore Have to Fall?: Churchill and the Impregnable Fortress, p. 39
- ↑ "No. 34503". இலண்டன் கசெட். 19 April 1938. p. 2594.
- ↑ Taylor, English History 1914–1945, p657
- ↑ Morris, Farewell the Trumpets, p452
- ↑ Smyth, Percival and the Tragedy of Singapore
- ↑ 6.0 6.1 "British Army Officers 1939-1945". www.unithistories.com. பார்க்கப்பட்ட நாள் 23 March 2024.
- ↑ Kinvig, Scapegoat: General Percival of Singapore, p. 5
- ↑ Smith, Singapore Burning: Heroism and Surrender in World War II, p. 23
- ↑ "No. 32371". இலண்டன் கசெட் (Supplement). 24 June 1921. p. 5096.
- ↑ "No. 34264". இலண்டன் கசெட். 13 March 1936. p. 1657.
- ↑ "No. 34557". இலண்டன் கசெட். 30 September 1938. pp. 6139–6140.
- ↑ Hack and Blackburn, Did Singapore Have to Fall?: Churchill and the Impregnable Fortress, p. 39
- ↑ "No. 34503". இலண்டன் கசெட். 19 April 1938. p. 2594.
- ↑ Boey, David. "Senang Diri: Battle for Malaya and Fall of Singapore 75th anniversary: Lieutenant General Arthur Ernest Percival remembered". Senang Diri. பார்க்கப்பட்ட நாள் 23 March 2024.
- ↑ Kinvig, p. 221
- ↑ MacArthur, Surviving the Sword: Prisoners of the Japanese 1942–45, p. 188
- ↑ Mancini, John. "The OSS' Operation Cardinal: Locating General Jonathan Wainwright". Warfare History Network. பார்க்கப்பட்ட நாள் 27 May 2020.
- ↑ Mead 2007, ப. 348.
- ↑ Warren, p. 286
- ↑ Morris, p. 458
- ↑ "No. 29824". இலண்டன் கசெட் (Supplement). 14 November 1916. p. 11063.
- ↑ "No. 30901". இலண்டன் கசெட் (Supplement). 13 September 1918. p. 10871.
- ↑ "No. 31745". இலண்டன் கசெட் (Supplement). 20 January 1920. p. 923.
- ↑ "No. 32231". இலண்டன் கசெட் (Supplement). 15 February 1921. p. 1361.
- ↑ "No. 35204". இலண்டன் கசெட் (Supplement). 1 July 1941. p. 3736.
- ↑ "No. 39412". இலண்டன் கசெட் (Supplement). 18 December 1951. p. 6600.
நூல்கள்
தொகு- Barry, Tom, Guerilla Days in Ireland, Dublin, 1949
- Bose, Romen, "Secrets of the Battlebox: The role and history of Britain's Command HQ during the Malayan Campaign", Marshall Cavendish, Singapore, 2005 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9814328548
- Coogan, Tim Pat. "Michael Collins". பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-09-968580-9
- Cox, Jeffrey (2014). Rising Sun, Falling Skies: The disastrous Java Sea Campaign of World War II. Osprey. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1780967264.
- Dixon, Norman F, On the Psychology of Military Incompetence, London, 1976 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0712658898
- Hack, Karl and Blackburn, Kevin, Did Singapore Have to Fall?: Churchill and the Impregnable Fortress, Routledge Curzon, 2003, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-30803-8
- Keegan, John (editor), Churchill's Generals, Abacus History, 1999, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-349-11317-3
- Kinvig, Clifford, General Percival and the Fall of Singapore, in 60 Years On: the Fall of Singapore Revisited, Eastern University Press, Singapore, 2003 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9812102027
- Kinvig, Clifford, Scapegoat: General Percival of Singapore, London, 1996. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-241-10583-8
- London Gazette
- MacArthur, Brian, Surviving the Sword: Prisoners of the Japanese 1942–45, Abacus, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-349-11937-6
- Oxford Dictionary of National Biography, Volume 43, available at Oxford Dictionary of National Biography website
- Mead, Richard (2007). Churchill's Lions: A Biographical Guide to the Key British Generals of World War II. Stroud: Spellmount. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-86227-431-0.
- Morris, James Farewell the Trumpets, Penguin Books, 1979 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0151304042
- Percival, Arthur Ernest The War in Malaya, London, Eyre & Spottiswoode, 1949. Extracts from the report used as the basis of this book are at [1] accessed 2 February 2006 and the references here are to this report
- Ryan, Meda. Tom Barry: IRA Freedom Fighter, Cork, 2003 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1856354806
- Smith, Colin, Singapore Burning: Heroism and Surrender in World War II, Penguin Books, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-101036-3
- Smyth, John George, Percival and the Tragedy of Singapore, MacDonald and Company, 1971.
- Taylor, A. J. P. English History 1914–1945, Oxford University Press, 1975 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0198217152
- Thompson, Peter (2005). The battle for Singapore : the true story of Britain's greatest military disaster. Portrait. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7499-5068-4. இணையக் கணினி நூலக மைய எண் 61701639.
- Warren, Alan, Singapore 1942: Britain's Greatest Defeat, Hambledon Continuum, 2001, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85285-328-X
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Arthur Ernest Percival தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- British Army Officers 1939–1945
- Generals of World War II