ஆர்த்தி திகூ சிங்

ஆர்த்தி திகூ சிங் (Aarti Tikoo Singh) என்பவர் ஓர் இந்தியப் பத்திரிகையாளர் மற்றும் காஷ்மீர் பிரச்சனை குறித்து குரல் கொடுத்தவர் ஆவார். இவர் தன்னை வலுவான மதச்சார்பற்றவராகக் கூறுகின்றார். இவர் முன்னாள் ஜம்மு பல்கலைக்கழக முன்னாள் மாணவி ஆவார். நியூயார்க்கு நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு விவகாரங்களில் முதுநிலை படிப்பினை முடித்துள்ளார்.

ஆர்த்தி திகூ சிங்
பிறப்புஅனந்தநாக் மாவட்டம், சம்மு காசுமீர், இந்தியா
கல்விமுதுகலை அரசியல் அறிவியல்
முதுகலை ஆங்கிலம்
முதுகலை பன்னாட்டு செயல்பாடுகள்[1]
படித்த கல்வி நிறுவனங்கள்சம்மு பல்கலைக்கழகம்
கொலம்பியா பல்கலைக்கழகம்
பணிஊட்கவியலாளர்
பணியகம்தி நியூ இந்தியன்

இளமை

தொகு

சிங் பிறந்தார் இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் காஷ்மீர பண்டிதர் குடும்பத்தில் பிறந்தார்.[2] காஷ்மீரி இந்துக்கள் வெளியேற்றத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து 1990களின் முற்பகுதியில் வெளிச் செல்ல வேண்டியிருந்தது. சம்முவிற்கு குடும்பத்துடன் சென்று ஜம்மு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார். நியூயார்க்கில் பன்னாட்டு விவகாரங்களில் முதுநிலைப் பட்டத்தினை கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பெற்றார்.[1] மேலும் இவர் தனது புது தில்லியில் தொடங்கினார்.

ஆர்த்தி திகு, ஹர்பீர் சிங்கை திருமணம் செய்து கொண்டார்.[3] இவர் ஆம் ஆத்மி கட்சி அரசியல்வாதி ஆவார்.

தொழில்

தொகு

சிங் ஒரு நிருபராக, சத்தீசுகர், சார்க்கண்டு மற்றும் அசாம் போன்ற இந்திய மாநிலங்கள் முழுவதும் உள்ள மோதல்கள் குறித்துப் பணியாற்றியுள்ளார்.[4][5]

இந்தியாவில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் தி டைம்ஸ் ஆப் இந்தியா ஆகிய நாளிதழ்களில் பணியாற்றிய பின் வெளிநாடு மற்றும் பாதுகாப்பு விவகார ஆசிரியராக இந்தோ-ஆசிய செய்தி சேவை நிறுவனத்தில் பணியாற்றினார். ஆகத்து 2021இல், இவர் நிறுவினார் நியூ இந்தியன் பத்திரிக்கையினை நிறுவினார்.[6] பத்திரிகைத் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட சிங் வர், பன்னாட்டு உறவுகள் மற்றும் பிரச்சனைகளில் கவனம் செலுத்துகிறார்.[7][8] சுமார் ஏழு ஆண்டுகளாக மோதல் நிறைந்த மாநிலமான ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலிருந்து இவர் அரசியல், வன்முறை, ஆட்சி மற்றும் மனித வாழ்வு உள்ளடக்கிய செய்திகளை வழங்கி வந்தார்.[9] காஷ்மீர் குறித்த அமெரிக்காவின் விசாரணையில் சிங் கலந்துகொண்டார்.[10]

விருதுகள்

தொகு

சிங் டைம்ஸ் ஆஸ்பியர் விருதினை வென்றவர் விசுகாம்ப் (பெண்கள் பாதுகாப்பு, மோதல் அமைதி நிர்வாகம்) நிதியுதவி விருதினைப் பெற்றவர்.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Aarti Tikoo Singh Blog - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 16 Jun 2020.
  2. "Aarti Tikoo Remembers & Shares Story of Hindus Of Kashmir Valley". Youtube (in இந்தி). Archived from the original on 2021-01-29. பார்க்கப்பட்ட நாள் 2021-01-26.
  3. "Ilhan Omar faces abuse after challenging Indian reporter at US Congress". TRT World. 24 October 2019. Archived from the original on 2019-10-26. பார்க்கப்பட்ட நாள் 2021-07-09.
  4. "Times of India editor Aarti Tikoo claims tp counter false reporting on Kashmir at Washington's National Press Club". Hindu American Foundation (in அமெரிக்க ஆங்கிலம்). 23 October 2019. Archived from the original on 2020-06-14. பார்க்கப்பட்ட நாள் 2020-06-14.
  5. "A Conversation With Aarti Tikoo Singh". Global Governance Futures (in அமெரிக்க ஆங்கிலம்). September 2018. Archived from the original on 2018-11-04. பார்க்கப்பட்ட நாள் 2020-06-14.
  6. "About". THE NEW INDIAN (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-27.
  7. 7.0 7.1 "Discussion with Aarti Tikoo Singh". Harrison House - University of Penn. 28 October 2019. Archived from the original on 2020-06-14. பார்க்கப்பட்ட நாள் 2020-06-14.
  8. "Aarti Tikoo Singh, Author at South Asian Voices". South Asian Voices (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-14.
  9. "Aarti Tikoo Singh author on Huffington Post" (in English). Huffington Post. பார்க்கப்பட்ட நாள் 16 Jun 2020.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  10. "On J&K, Indian Journalist's Face-Off With Ilhan Omar In US Congress". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2021-03-20.

மேலும் வாசிக்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்த்தி_திகூ_சிங்&oldid=3920425" இலிருந்து மீள்விக்கப்பட்டது