ஆர்யா 2 (தெலுங்கு: ఆర్య 2) என்பது 2009 ஆம் ஆண்டில் வெளியான தெலுங்கு மொழித் திரைப்படம். காதல், நட்பு ஆகியனவற்றை முதன்மைப்படுத்திய கதைக்களத்தைக் கொண்டது. ஆர்யா என்ற திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இயக்குனரான சுகுமார் (இயக்குனர்), இத்திரைப்படத்தையும் இயக்கினார். அல்லு அர்ஜுன், காஜல் அகர்வால் ஆகியோர் கதாநாயகர்களாகவும், நவ்தீப், சாரதா தாஸ் ஆகியோர் துணை வேடங்களிலும் நடித்துள்ளனர்.[3] திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஆதித்யா பாபு, போகவல்லி பிரசாத் ஆகியோர் தயாரித்துள்ளனர். இதே பெயரிலேயே மலையாளத்திலும் டப் செய்யப்பட்டு வெளியானது. சில காட்சிகள் மலையாள சூழலுக்கேற்ப திரையாக்கப்பட்டன.

ஆர்யா 2
இயக்கம்சுகுமார்
தயாரிப்புஆதித்யா பாபு
கதைசுகுமார்
வாமா ரெட்டி
இசைதேவி ஸ்ரீ பிரசாத்
நடிப்புஅல்லு அர்ஜுன்
காஜல் அகர்வால்
நவதீப்
சாரதா தாசு
பிரம்மானந்தம்
முகேசு ரிசி
ஒளிப்பதிவுபி. ராஜசேகர்
படத்தொகுப்புமார்த்தாண்டு கே. வெங்கடேஷ்
வெளியீடுநவம்பர் 27, 2009 (2009-11-27)(தெலுங்கு)
பெப்ரவரி 5, 2010 (மலையாளம்)
ஓட்டம்165 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு
ஆக்கச்செலவு21 கோடி[1]
மொத்த வருவாய்38 கோடி (மொத்த பங்குகள்)[2]

கதைதொகு

கதையின் தொடக்கத்தில், கதாநாயகன் ஆர்யா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறான். அவன் நண்பன் அஜய், ஆர்யா தன் வாழ்வை மேம்படுத்திய நிகழ்வுகளை நினைவுகூர்கிறான். இளவயதில், ஆர்யாவும் அஜயும் அனாதை இல்லத்தில் வளர்கின்றனர். இருவரும் நண்பர்களாகின்றனர். பணக்காரத் தம்பதியினர் இருவரில் ஒருவரைத் தத்தெடுத்துச் செல்ல விரும்புவதாக இல்லத்தின் நிறுவனர் கூறுகிறார். ஆர்யா, தன் வாய்ப்பை விட்டுக் கொடுத்து, அஜயை அவர்களுடன் அனுப்புகிறான். பின்னாளில், அஜய் பெரும் வர்த்தகன் ஆகி, தன் சொந்த மென்பொருள் நிறுவனத்தை நடத்துகிறான். ஆர்யா, குடிகாரனாகி, தன் நண்பனுக்காக எதையும் செய்வதில் குறியாக இருக்கிறான். அஜய்யுடன் இருக்க விரும்புவதாக ஆர்யா கூற, அஜய் மறுக்கிறான். அஜய் நிறுவனத்தில் நல்ல ஊழியனாக வேலை செய்வதாகவும், கெட்ட பெயர் எடுத்தால் தானே நிறுவனத்தைவிட்டு நீங்குவதாகவும் ஆர்யா கூறுகிறான். அஜய் அவன் கோரிக்கையை ஏற்கிறான். ஆர்யா, தன்னை ”மிஸ்டர். பெர்பக்ட்” என்னும் அளவிற்கு மாற்றிக்கொண்டு, நிறுவனத்தில் எல்லோரது அன்பையும் பெறுகிறான். குறையே இல்லாமல் பணிபுரிகிறான். சக ஊழியரான சாந்தி, ஆர்யாவைக் காதலிக்கிறாள். கீதா, அதே நிறுவனத்தில் புதிதாக பணிக்குச் சேர்கிறாள். ஏதோவொரு விதத்தில் நாளும் தன் காதலை, கீதாவிடம் வெளிப்படுத்துகிறான் ஆர்யா. கீதா இதை மற்றவர்களிடம் சொல்ல, ஆர்யாவின் மீதிருந்த நம்பிக்கையில், மற்றையோர் நம்பவில்லை. ஆர்யாவின் பெருமையால் தனக்கு தீங்கு நேரும் எனக் கருதி அவனைவிட்டு விலகத் தீர்மானித்து, ஆர்யா தன்னை விபத்துக்குள்ளாக்கியதாகக் கூறுகிறான் அஜய். அஜயை கீதா விரும்புகிறாள். ஆர்யா, தன்னிடம் செய்தவற்றை அனைவரிடமும் ஒப்புகொள்ளச் செய்கிறாள். அஜய்க்கும், கீதாவிற்கும் திருமண ஏற்பாடுகள் செய்கின்றான் ஆர்யா. அதற்குள், கீதாவை அவளின் சொந்த ஊருக்கு கடத்திச் செல்கின்றனர். ஆர்யா அவள் ஊருக்குச் சென்று, திருமண வீட்டாரைக் குழப்ப, இறுதியில் ஆர்யாவைத் திருமணம் செய்கிறாள் கீதா. கீதாவை அஜய்யுடன் சேர்த்துவைக்கவே, அவளைத் திருமணம் செய்ததாக நடித்தேன் என்று கூறி அவளை அஜய்யிடம் சேர்க்கிறான். அஜய், கீதா இருவரையும் வெளிநாட்டுக்குப் பயணப்படும்படி அறிவுறுத்துகிறான் ஆர்யா. பின்னர், அவள் தந்தைக்கு இது தெரிய வரவே, அவளையும், அஜய்யையும் கொல்ல வர, ஆர்யா தடுத்து, கத்தியால் காயப்படுகிறான். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறான். இதுவே கதையின் தொடக்கத்தில் காட்டப்படுகிறது. கீதாவின் மீதான தன் காதலாலும், தன் நண்பன் மீதான நட்பினாலும் ஈர்க்கப்பட்டு, கீதா, ஆர்யாவை விரும்புகிறாள். உண்மையான நட்பும், நாயகனின் புத்திக்கூர்மையும் திரைக்கதையின் அம்சமாக உள்ளது.

நடிப்புதொகு

பாடல்கள்தொகு

தேவிஸ்ரீ பிரசாத், பாடல்களுக்கும், திரைக்கதைக்கும், பின்னணி இசையமைத்துள்ளார். பாடல்கள் மலையாளத்திலும், இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டன. ரிங்கா ரிங்கா, உப்பேனந்தா ப்ரேம, மை லவ் இஸ் கான் ஆகிய பாடல்கள் பெருவரவேற்பைப் பெற்றன.

ஆர்யா 2
இசைக்கோவை
தேவிஸ்ரீ பிரசாத்
வெளியீடுநவம்பர் 1, 2009
இசைப் பாணிதிரைப்படப் பாடல்
இசைத்தட்டு நிறுவனம்சோனி மியூசிக்
இசைத் தயாரிப்பாளர்தேவிஸ்ரீ பிரசாத்
தேவிஸ்ரீ பிரசாத் காலவரிசை
கரண்ட்
(2009)
ஆர்யா 2
(2009)
அதுர்ஸ்
(2009)

அனைத்துப் பாடல்களையும் இசையமைத்தவர் தேவிஸ்ரீ பிரசாத்

# பாடல்பாடகர்கள் நீளம்
1. "மிஸ்டர் பர்பெக்ட்"  பாபா சேகல், ரீட்டா, சச்சின் 04:35
2. "உப்பேனந்தா"  கே. கே 05:26
3. "பேபி ஹி லவ்ஸ் யூ"  தேவிஸ்ரீ பிரசாத், சந்திரபோசு 05:20
4. "ரிங்கா ரிங்கா"  பிரியா ஹிமேஷ் 05:32
5. "காரிகே லோகா"  குணால் கஞ்சவாலா, மேகா 06:02
6. "மை லவ் இஸ் கான்"  ரஞ்சித் 04:47
7. "காரிகே லோகா (டி-பிளக்கிடு)"  சாகர் 02:53
8. "மிஸ்டர் பெர்பக்ட் (ரீமிக்சு)"  தேவிஸ்ரீ பிரசாத் 04:15

சான்றுகள்தொகு

  1. "Arya 2 makes profit". Trade. Hyderabad: Idlebrain. 29 December 2009. 24 செப்டம்பர் 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 31 அக்டோபர் 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Arya 2 30 Crores Business". News. Gusa Gusa. 28 Dec 2009. 26 ஆகஸ்ட் 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 31 அக்டோபர் 2013 அன்று பார்க்கப்பட்டது.
  3. "'Arya' sequel rolls at Annapurna Studios". Telugu News. IndiaGlitz. October 6, 2008.

இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்யா_2&oldid=3670804" இருந்து மீள்விக்கப்பட்டது