பிரியா ஹிமேஷ்

பிரியா ஹிமேஷ் அல்லது பிரியா ஹேமேஷ் என்றும் அழைக்கப்படும் இவர், இந்தியாவின் தமிழ்நாட்டில் பிறந்த திரைப்பட பின்னணிப் பாடகியாவார். கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் ஒடியா திரைப்படங்களில் பிரபல முன்னணித் திரைப்பட இசையமைப்பாளர்களான, ஏ. ஆர். ரகுமான், இளையராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், இமான், விஜய் ஆண்டனி, தேவி ஸ்ரீ பிரசாத், யுவன் ஷங்கர் ராஜா, மணி சர்மா, கார்த்திக் போன்றோர்களுடன் இணைந்து இருநூறுக்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார்.[1]

பிரியா ஹிமேஷ்
பிரியா ஹிமேஷ்
பிறப்பு10 பிப்ரவரி 1985
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இசை வடிவங்கள்பின்னணிப் பாடகி
தொழில்(கள்)திரைப்படப் பாடகி
இசைக்கருவி(கள்)குரலிசை
இசைத்துறையில்2006 ஆம் ஆண்டு முதல்
இணையதளம்https://priyahemesh.com/

பிரியா, 1982 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி தமிழ்நாட்டின் சென்னையின் புறநகரில் பிறந்துள்ளார். சிறு வயதிலிருந்தே, பாடுவதில் ஆர்வம் கொண்டிருந்த இவர் பல உள்ளூர் பாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று, மெல்லிசைப் பாடல்களைப் பாடத் தொடங்கி, உள்ளூர் மக்களின் கவனத்தைப் பெற்றுள்ளார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் படிப்பை முடித்த பிறகு, பாடகியாகத் திரையுலகில் 2006 ஆம் ஆண்டு முதல் பாடத்தொடங்கியுள்ளார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல முன்னணி இசைக்குழுக்களுடன் இதுவரை ஐயாயிரத்திற்கும்  மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார்.

தெலுங்குப் படமான, ஆர்யா 2 இல் இடம்பெற்ற "ரிங்கா ரிங்கா" பாடலுக்காக பிரியா தென்னிந்திய பிலிம்பேர் விருதினைப் பெற்றுள்ளார். [2] [3]

ஆண்டு பாடல் பெயர் படத்தின் பெயர் மொழி இசையமைப்பாளர் இணைப் பாடகர்
2006 "ரங்கு ரபா ரபா" ராக்கி தெலுங்கு தேவி ஸ்ரீ பிரசாத்
2006 "ஒன்தே ஒண்டு சாரி" முங்காரு ஆண் கன்னடம் மனோ மூர்த்தி
2006 "நிம்பிய பனாடா மியாகல" செவந்தி செவந்தி கன்னடம் எஸ். ஏ. ராஜ்குமார்
2007 "கண் விழித்தல் வெண்ணிலவு" குரு தமிழ் ஏ.ஆர். ரஹ்மான்
2007 "ஹுடுகி மாலேபில்லு" கெலேயா கன்னடம் மனோ மூர்த்தி
2007 "கோழி வேத கோழி" சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் தமிழ் தேவி ஸ்ரீ பிரசாத்
2008 "கெலேயா பெகு" மோகினா மனசு கன்னடம் மனோ மூர்த்தி
2009 "A To Z"

"யெந்தபானி செஸ்டிவிரோ"
ராஜா தெலுங்கு தேவி ஸ்ரீ பிரசாத்
"செஹெரி" ஓய்! தெலுங்கு யுவன் சங்கர் ராஜா
"ரிங்கா ரிங்கா" ஆர்யா 2 தெலுங்கு தேவி ஸ்ரீ பிரசாத்
"மியாவ் மியாவ்" கந்தசாமி தமிழ் தேவி ஸ்ரீ பிரசாத்
"மியாவ் மியாவ்" மல்லண்ணா தெலுங்கு தேவி ஸ்ரீ பிரசாத்
"யாரே நின்னா மம்மி" மலேயாளி ஜோதேயலி கன்னடம் வி. ஹரிகிருஷ்ணா
"அஸ்ஸலாம் வாங்கும்" அதுர்ஸ் தெலுங்கு தேவி ஸ்ரீ பிரசாத்
"என் ஜன்னல் வந்தா" தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்) தமிழ் யுவன் சங்கர் ராஜா
"நீனெந்தரே" ராம் கன்னடம் வி. ஹரிகிருஷ்ணா
"அம்பும் கொம்பும்" பழசி ராஜா தமிழ் இளையராஜா
2010 "ஊரெல்லா நன்னா பொர்க்கி"

"டேனே தானே"
பொர்க்கி கன்னடம் வி. ஹரிகிருஷ்ணா
"எடவட் ஆய்து" ஜாக்கி கன்னடம் வி. ஹரிகிருஷ்ணா புனீத் ராஜ்குமார்
"டிங் டாங்"

"துட்டாடோயின்"
நமோ வெங்கடேசா தெலுங்கு தேவி ஸ்ரீ பிரசாத்
"சரிகம" ஹூ கன்னடம் வி. ஹரிகிருஷ்ணா
"பேண்ட் பாஜா நோடு மஜா" கிச்சா ஹுச்சா கன்னடம் வி. ஹரிகிருஷ்ணா
"கண்ணு ராண்டும்" குட்டி தமிழ் தேவி ஸ்ரீ பிரசாத்
"புல்லே புல்லே" டார்லிங் தெலுங்கு ஜி.வி. பிரகாஷ்
"நீல வானம்"/"நீலாகாசம்" மன்மதன் அம்பு / மன்மத பாணம் தமிழ்/தெலுங்கு தேவி ஸ்ரீ பிரசாத்
2011 "கெட்டிமேளம்" பேசு தமிழ் யுவன் சங்கர் ராஜா
"தியலோ தியாலா" 100% காதல் தெலுங்கு தேவி ஸ்ரீ பிரசாத்
"காஞ்சனா மாலா" வந்தான் வென்றான் தமிழ் எஸ். தமன்
"தகலகொண்டே நானு" ஜோகய்யா கன்னடம் வி. ஹரிகிருஷ்ணா
"எங்கும் ரோஜாக்கள்" காஸனோவ்வா மலையாளம் கோபி சுந்தர்
"பேட் பாய்ஸ்" பிசினஸ்மேன் தெலுங்கு எஸ். தமன்
"கருப்பண்ண சாமி'" மம்பட்டியான் தமிழ் எஸ். தமன்
"படே படே" ஜராசந்த கன்னடம் அர்ஜுன் ஜன்யா
"கோதவ கோடவா" தாதா தெலுங்கு தேவி ஸ்ரீ பிரசாத்
"அனுகோனேலெதுகா" Panjaa தெலுங்கு யுவன் சங்கர் ராஜா
2012 "ஆத்தாடி மனசுதன்" கழுகு தமிழ் யுவன் சங்கர் ராஜா
"மாண்டியா திண்டா" அதிர்ஷ்டம் கன்னடம் அர்ஜுன் ஜன்யா
"வேகம் வேகம்" ஸ்ரீதர் தமிழ் ராகுல் ராஜ்
"துகோஜி பகோஜி" ஆல் தி பெஸ்ட் தெலுங்கு ஹேமச்சந்திரா
"ஜூலாய்" ஜூலாய் தெலுங்கு தேவி ஸ்ரீ பிரசாத்
"யாரே நீனு" தண்டுபால்யா கன்னடம் அர்ஜுன் ஜன்யா
"வெல்ல பம்பரம்" சகுனி தமிழ் ஜி. வி. பிரகாஷ் குமார்
"மானேதாங்க பாரே மனேதாங்க" ராம்போ கன்னடம் அர்ஜுன் ஜன்யா
"டிபிரி டிபிரி" மேதை தெலுங்கு ஜோசுவா ஸ்ரீதர்
"யே ஜென்ம பந்தமோ" மிஸ்டர். நூக்கையா தெலுங்கு யுவன் சங்கர் ராஜா
2013 "மிசிசிப்பி" பிரியாணி தமிழ் யுவன் சங்கர் ராஜா
"லண்டன் பாபு" 1: நெனோக்கடைன் தெலுங்கு தேவி ஸ்ரீ பிரசாத்
"கண்ணுக்குள்ளே" சிங்கம் 2 தமிழ் தேவி ஸ்ரீ பிரசாத்
2014 "உயிரின் மேலொரு உயிர்வந்து" வடகறி தமிழ் யுவன் சங்கர் ராஜா
"நில்லு நில்லு"

"யெல்லு யெல்லு"
தில் ரங்கீலா கன்னடம் அர்ஜுன் ஜன்யா
"அல்லுடு சீனு" அல்லுடு சீனு தெலுங்கு தேவி ஸ்ரீ பிரசாத்
2015 "கதமா கதாமா" மல்லி மல்லி இடி ராணி ரோஜு தெலுங்கு கோபி சுந்தர்
"திம்மாத்திரிகே" ஸ்ரீமந்துடு தெலுங்கு தேவி ஸ்ரீ பிரசாத்
2016 "தென்றல் வரும் வழியில்" ஓயீ தமிழ் இளையராஜா
"அவல்" மனிதன் தமிழ் சந்தோஷ் நாராயணன்
"போடா போடா பொறம்போக்கு" திரு குரு'! தமிழ் தாமஸ் ரத்தினம்
2017 "அப்பு டான்ஸ்" ராஜகுமார கன்னடம் வி. ஹரிகிருஷ்ணா
"இன்னு காயலாரே" பங்காரா s/o பங்கராடா மனுஷ்யா கன்னடம் வி. ஹரிகிருஷ்ணா
"வாழ்க்கை ஒரு வானவில்" வுன்னாதி ஒகேடே ஜிந்தகி தெலுங்கு தேவி ஸ்ரீ பிரசாத்
"ஓ கொத்தகா கொத்தகா" மிடில் கிலாஸ் அப்பாய் தெலுங்கு தேவி ஸ்ரீ பிரசாத்
2018 "ராமர் சீதாவைக் காதலிக்கிறார்" வினய விதேய ராம தெலுங்கு தேவி ஸ்ரீ பிரசாத்
2020 "யெங்கடா போனா ரோமியோ" யேவனும் புத்தனில்லை தமிழ் மரியா மனோகர்
2021 "மாதவி பொன்மயிலாகா" தியால் தமிழ் சி. சத்யா
2022 "தலபே தூபானை" ரெஜினா தெலுங்கு சதீஷ் நாயர்

மேற்கோள்கள்

தொகு
  1. "பிரியா ஹிமேஷ்".
  2. "Kerala Film News: 57th South Film fare Awards 2010 Winners- Full list". Keralafilmnews. blogspot.com. 2010-08-08. பார்க்கப்பட்ட நாள் 2012-02-21.
  3. "Filmfare Award winners". Timesofindia. Times of India. பார்க்கப்பட்ட நாள் 1 August 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியா_ஹிமேஷ்&oldid=3699967" இலிருந்து மீள்விக்கப்பட்டது