ஆர். எம். கே. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
ஆர். எம். கே பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ( R.M.K. College of Engineering and Technology ) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருவள்ளூர், புதுவயல் கிராமத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். இது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள கல்லூரி ஆகும். இது லட்சுமிகாந்தம்மாள் கல்வி அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இக்கல்லூரியானது, தெலுங்கு சிறுபான்மை நிறுவனம் ஆகும். இது தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஐஎஸ்ஓ 9000-2015 சான்றளிக்கப்பட்ட நிறுவனமாகும்.
உருவாக்கம் | 2008 |
---|---|
தலைவர் | ஆர். எசு. முனிரத்தினம் |
முதல்வர் | முனைவர் டி. ரெங்கராஜா |
அமைவிடம் | திருவள்ளூர், புதுவயல் , , 13°19′24″N 80°09′10″E / 13.323407°N 80.152771°E |
சேர்ப்பு | அண்ணா பல்கலைக்கழகம் |
இணையதளம் | www.rmkcet.ac.in |
இந்தக் கல்லூரியானது கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (சிஎஸ்இ), மின் மற்றும் மின்னணு பொறியியல் (இஇஇ), மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல் (இசிஇ), இயந்திரப் பொறியியல் (மெக்) ஆகிய நான்கு துறைகளுடன் 2008 இல் திறக்கப்பட்டது. இது தற்போது இஇஇ, இசிஇ, சிஎஸ்இ, இயந்திரப் பொறியியல் போன்ற பல்வேறு துறைகளுடன் 1700 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டுள்ளது. இக்கல்லூரி வளாகமானது சுமார் 100 ஏக்கர்கள் (0.40 km2) பரப்பளவைக் கொண்டுள்ளது . சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களின் போக்குவரத்து வசதிக்காக இந்த கல்லூரியில் 32 பேருந்துகள் உள்ளன.
வழங்கப்படும் பாடங்கள்
தொகு- பி.இ. கணினி அறிவியல் மற்றும் பொறியியலில்
- பி.இ. மின் மற்றும் மின்னணுப் பொறியியல்
- பி.இ. மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல்
- பி.இ. இயந்திரப் பொறியியல்
இக்கல்லூரி வளாகமானது சென்னை-விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து சுமார் 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புதுவயல் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த கல்லூரிக்கு சென்னை, கும்மிடிபூண்டி / சூலூர்பேட்டை / நெல்லூர் / நாயுடுபேட்டை / ஸ்ரீ கலாஹஸ்தி / திருப்பதி ஆகிய இடல்களில் இருந்து பேருந்துகள் மூலம் எளிதில் சென்றடையலாம். சென்னை - கும்மிடிபூண்டி இடையேயான புறநகர் தொடருந்துகள் நிற்கும் காவரைப்பேட்டை தொடருந்து நிலையத்தில் இருந்து கல்லூரி ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது.
இந்த கல்வி நிறுவனமானது வகுப்பு அறைகள், குளிரூட்டப்பட்ட கருத்தரங்கு கூடங்கள், மத்திய நூலகம், துறைசார் நூலகங்கள், இணைய இணைய இணைப்பு வசதி போன்றவற்றுடன் ஒரு பெரிய வளாகத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி விடுதிகள் உள்ளன.
ஆர்.எம்.கே குழும நிறுவனங்கள்
தொகு- ஆர். எம். கே பொறியியல் கல்லூரி
- ஆர். எம். டி. பொறியியல் கல்லூரி
- ஆர்.எம்.கே பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி
- ஆர். எம். கே. மெட்ரிகுலேஷன் பள்ளி
- ஸ்ரீ துர்கா தேவி பாலிடெக்னிக்
- ஆர். எம். கே. உள்ளுரை பள்ளி