ஆர். நடராஜ்
இராமச்சந்திரன் நடராஜ் (Ramachandran Nataraj, இகாப, பிறப்பு: 31 மார்ச், 1951) ஓய்வு பெற்ற இந்தியக் காவல் பணி அலுவலர் ஆவார். தமிழ்நாடு அரசுத் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் (2012 – 2013).[1] தன்னுடைய நாற்பது ஆண்டுகாலத்திற்கும் மேலான பொதுச் செவை மூலம் அனைவராலும் அறியப்பட்டவர். இவர் தன் பணி ஓய்வுக்குப்பின் 2011ஆம் ஆண்டு காவல்துறையின் தலைமை இயக்குனராகப் பணியில் சேர்ந்தார். இவர் 1975ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட அலுவலர்கள் குழுவைச் சேர்ந்தவர். இவர் பல்வேறு மத்திய மற்றும் மாநிலப் பணிகளில் பல்வேறு நிலைகளில் சேவை புரிந்துள்ளார்.
ஆர். நடராஜ் | |
---|---|
பிறப்பு | 31 மார்ச்சு 1951 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | சென்னைப் பல்கலைக்கழகம் |
பணி | காவல்துறை தலைமை இயக்குநர், வழக்கறிஞர், அரசியல்வாதி |
பணியகம் | இந்தியக் காவல் பணி |
மேலும் இவர் மத்திய சேமக் காவல் படையின் ஓர் அங்கமாக மிகவும் சிக்கலான இந்தியப்பகுதிகளன ஏழு சகோதரி மாநிலங்கள் மற்றும் சம்மு காசுமீர் போன்ற இடங்களில் சேவை புரிந்துள்ளார். 1986 முதல் 1990 வரை காட்மாண்டுவில் இந்திய உயர்மட்டக்குழுவின் முதல் செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.
இளமைப்பருவமும் கல்வியும்
தொகுதிருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் எனும் ஊரைச் சேர்ந்த இவர் 1951ஆம் ஆண்டு சென்னையில் பூர்ணம் ராமச்சந்திரன் (எழுத்தாளர் உமாராமச்சந்திரன்), கமலா ராமச்சந்திரன் ஆகியோருக்குப் பிறந்தார். திருவல்லிக்கேணி இந்து மேல் நிலைப் பள்ளியில் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தார். பள்ளிப் படிப்பின் போது துணை மாணவர் படையில் சேர்ந்து பயிற்சி பெற்றார். பின்னர் இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் சேர்ந்து இயற்பியல் பாடப்பிரிவில் பட்டம் பெற்றார். தன் கல்லூரி நாட்களில் தேசிய மாணவர் படையில் தீவிரமாக ஈடுபட்டார். சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்து இயற்பியலில் முதுகலைப்பட்டம் பெற்றார். மேலும் சென்னைப் பல்கலைக்கழகம் மூலம் பொது நிர்வாகம், சட்டம் ஆகிய துறைகளில் முதுகலைப்பட்டம் பெற்றார். பட்டப்படிப்புக்குப்பின் இந்திய ஆட்சிப்பணித் தேர்வுகள் எழுதி 1975ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட அலுவலர்கள் குழுவில் அங்கத்தினர் ஆனார்.[2]
அரசு சேவை
தொகுநடராஜ் 1975ஆம் ஆண்டு இந்தியக் காவல் பணியில் சேர்ந்தார். தன்னுடைய பணிக்காலத்தில் பல்வேறு விதமான எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய மாநில அளவிலான பிரச்சினைகளில் தன்னுடைய பாதுகாப்புப்படை நடவடிக்கைகளால் அரசாங்கம் நீடித்துச் செயல்படும் வகையில் திறன் மற்றும் தொடர் முன்னேற்ற அமைப்புகளைச் செயல்படுத்தி வந்தார். 1986 முதல் 1990 வரை நேபாளத்தில் இந்திய தூதரகத்தில் முதல் செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.[3] பின்னர் 1994ஆம் ஆண்டு மத்திய சேமக் காவல் படையில் காவல்துறையின் தலைமை இயக்குனராகப் பதவி ஏற்றார். அப்பதவியிலிருந்து ஏழு சகோதரி மாநிலங்கள் மற்றும் சம்மு காசுமீர் போன்ற இந்திய மாநிலங்களில் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தனிக்குழுக்கள் அமைத்துத் தன்னேற்புத் திட்டங்கள் தயாரித்து பாதுகாப்புப்பணிகளில் ஈடுபட்டார். 2003 நவம்பர் முதல் 2006 ஏப்ரல் வரை சென்னை காவல்துறை ஆணையராகப் பணியாற்றினார். மாநில மனித உரிமை ஆணையம், பொருளாதாரக் குற்றச் செயல் பிரிவு மற்றும் சிறைத்துறை ஆகியவற்றின் கூடுதல் காவல்துறை தலைமை இயக்குனராகவும் பணியாற்றினார். பின்னர் பதவி உயர்வின் மூலம் சிறைத்துறையின் தலைமை இயக்குனராகப் பதவி ஏற்றார். 2009 சூன் 12ஆம் நாள் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறையின் தலைமை அதிகாரியாகப் பதவி ஏற்றார். 2011 மார்ச்சு 31ஆம் நாள் பணி ஓய்வு பெற்றார். 2012ஆம் ஆண்டு இவர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
கைதிகள் மறுவாழ்வு மையங்கள், கல்வி, சுகாதாரம், லஞ்ச ஒழிப்பு, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இவருடைய ஈடுபாடு, நிர்வாக சீர்திருத்தப்பணிகள், புதுமைத் திட்டங்கள் போன்றவை எல்லோராலும் நன்கு அறியப்பட்டுள்ளன.
முக்கிய சாதனைகள்
தொகுநடராஜ் தேர்வுமுறைகளில் ஏற்படுத்திய சீர்திருத்தங்கள் மற்றும் ஒளிவுமறைவற்ற வெளிப்படைத்தன்மை ஆகியவை சிறப்பு வாய்ந்தவை, அவற்றுள் ஒரு சில:
- ஒளிப்படமிகளால் கண்கானிக்கப்படும் தேர்வு அறைகள்
- கணினி இணைப்பு வழியாக தேர்வுக்குப் பதிவு செய்யும் முறை
- கணினி இணைப்பு வழியாக மதிப்பெண் பட்டியல் வழங்குதல்
- கணினி இணைப்பு வழியாக கலந்தாய்வு செய்து நிரந்தர பதிவெண்களை அடிப்படையாகக் கொண்டு விண்ணப்பதாரர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அருகில் வேற்றுப் பணிக்கனுப்புதல் போன்றவை.[4]
இவரது காலத்தில் வட இந்தியாவில் போராளிகளால் பாதிப்பு ஏற்படும் என்று அச்சமேற்படுத்தக்கூடிய மிகவும் சிக்கலான பகுதிகளில் இவர் மேற்கொண்ட கண்கானிப்புப் பணிகளை மத்திய சேமக் காவல் படை குழுவினர் கூர்ந்து கவனித்துள்ளனர்.
பதக்கங்களும் அங்கீகரித்தல்களும்
தொகுநடராஜ் தன்னுடைய பணிக்காலத்தில் பின்வரும் பதக்கங்களைப் பெற்றார்
ஆண்டு | விருது |
---|---|
2004 | சிறப்புப் படைக்கான வீரப்பதக்கம் |
1999 | ஜனாதிபதியின் தங்கப் பதக்கம் |
1993 | காவல்துறையின் சிறப்புத் தகுதி பெறு பணிக்கான ஜனாதிபதியின் பதக்கம் |
அரசியல் வாழ்க்கை
தொகு2014ல் முதல்வர் ஜெ. ஜெயலலிதா முன்னிலையில் அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் நடராஜ் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார்.[5]
இவர் 2016 சட்டமன்றத் தேர்தலில், மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று, தமிழ்நாட்டின் 15ஆவது சட்டமன்றத்தின் உறுப்பினர் ஆனார்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Tamil Nadu Public Service Commission- Role and Functions". Tnpsc.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2016-05-05.
- ↑ "Reform in Uniform – Interview with R Nataraj, IPS | cityinterviews - city360". ChennaiOnline. பார்க்கப்பட்ட நாள் 2016-05-05.
- ↑ "Former DGP Nataraj is new TNPSC chief". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. http://www.newindianexpress.com/states/tamil_nadu/article334275.ece. பார்த்த நாள்: 2016-05-05.
- ↑ "Retirement of TNPSC Chairman Mr. Natraj | TNPSC Exam Application Dates, Syllabus Study Materials Prep Books Results Previous Question Papers". 2013-03-12. பார்க்கப்பட்ட நாள் 2016-05-05.
- ↑ "Retd. IPS officer Natraj is AIADMK candidate from Mylapore". The News Minute. 2016-04-04. பார்க்கப்பட்ட நாள் 2016-05-05.
- ↑ "15th Assembly Members". Government of Tamil Nadu. Archived from the original on 2016-08-22. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.