ஆர். வெங்கட ராவ்

திருவாங்கூர் திவான்

இராய் இராய இராய் வெங்கட ராவ் (Rai Raya Rai Venkata Rao) (இறப்பு:1843 இவர் ஓர் இந்திய நிர்வாகியும் மற்றும் அரசியல்வாதியுமாவார். இவர் 1821 – 1829 மற்றும் 1838 – 1839 ஆகிய ஆண்டுகளில் திருவிதாங்கூர் திவானாகப் பணியாற்றினார். இவர் திவான்களாக இருந்த ஆர். ரகுநாத ராவின் தந்தையும் மற்றும் சர் டி. மாதவ ராவின் தந்தைவழி மாமாவும் ஆவார்.

இராய் இராய
இராய் வெங்கட ராவ்
திருவிதாங்கூரின் திவான்
பதவியில்
1821–1829
முன்னையவர்ரெட்டி ராவ்தஞ்சா
பின்னவர்தஞ்சாவூர் சுப்பாராவ்
பதவியில்
1838–1839
ஆட்சியாளர்சுவாதித் திருநாள் ராம வர்மா
முன்னையவர்ஆர். இரங்காராவ்
பின்னவர்தஞ்சாவூர் சுப்பாராவ்
தனிப்பட்ட விவரங்கள்
இறப்பு1843

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

இவர் சென்னை மாகணத்திலிருந்த கும்பகோணம் என்ற ஊரில் தஞ்சாவூர் மராத்தி குடும்பத்தைச் சேர்ந்த குண்டப்பநாத் கும்பகோணி என்பவருக்கு பிறந்தார். கல்வியைக் கற்றதும், ஆங்கிலேயர்களின் சேவையில் சேர்ந்தார்.

பொது வாழ்க்கை தொகு

1834 – 38 மைசூர் தலைமை ஆணையருக்கு தலைமை சிரஸ்தாராகவும், மைசூர் 1840 – 42 உதவி தலைமை ஆணையராகவும் வெங்கட ராவ் பணியாற்றினார். 1842 ஆம் ஆண்டில், ஐதராபாத்தின் திவானாக நியமிக்கப்பட்டஇவர் 1843 ஆம் ஆண்டு வரை உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருக்கு திரும்பினார்.

திருவிதாங்கூரின் திவான் தொகு

1819 ஆம் ஆண்டில், வெங்கட்ட ராவ் திருவிதாங்கூர் மாநிலச் சேவையில் பிரிட்டிசு அரசப் பிரதிநிதியான கர்னல் மெக்டோவலின் உதவியாளராக சேர்ந்தார். திருவிதாங்கூரை ஆண்டுவந்த இராணியை தனது திறன்களால் கவர்ந்தார். பின்னர், திருவிதாங்கூர் இராச்சியத்தின் ஒரு பிரிவின் ஆளுநராக (திவான் பேசுகர்) நியமிக்கப்பட்டார். திவான் பேசுகராக இருந்த காலத்தில், வெங்கட ராவ் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோயிலை பழுதுபார்த்து புதுப்பித்து, காவலர்களின் ஆடை வடிவமைப்பை மாற்றியமைத்தார்.

1821 ஆம் ஆண்டில், திவானாக இருந்த, ரெட்டி ராவ் என்பவர் ராணியிடமிருந்து இரண்டு கிராமங்களின் வரி வசூலிக்கும் உரிமையைப் பெற்றிருந்தார். இதன் விளைவாக ஏற்பட்ட ஊழல் அவரை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தியது. அவருக்கு பதிலாக வெங்கட ராவ் பிரிட்டிசு அரசப் பிரநிதியின் ஆதரவுடன் திவானாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திவானாகப் பதவியேற்றதும், வெங்கட ராவ் உடனடியாக வரிகளைத் தள்ளுபடி செய்தார். கொல்லத்தில் தனது தளத்தை அமைத்து ஏராளமான நீர்ப்பாசனப் பணிகளை ஏற்பாடு செய்தார். இவரது ஆட்சிக் காலத்தில் கடினங்குளம் உப்பங்கழிகள் உருவாக்கப்பட்டன.

இறப்பு தொகு

வெங்கட ராவ் நோய்வாய்ப்பட்டு 1843 சூலையில் பெங்களூரில் இறந்தார்.

மரியாதை தொகு

பிரிட்டிசுப் பேரரசுக்கு இவர் செய்த சேவையை அங்கீகரிக்கும் விதமாக 1838 ஆம் ஆண்டில் வெங்கட ராவிற்கு "ராய் ராய ராய்" என்ற தலைப்பு வழங்கப்பட்டது.

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._வெங்கட_ராவ்&oldid=2996338" இலிருந்து மீள்விக்கப்பட்டது