ஆலகிராமம்
விழுப்புரம் மாவட்ட சிற்றூர்
ஆலகிராமம் (Alagramam) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும்.
ஆலகிராமம் | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | விழுப்புரம் |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 604302 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான விழுப்புரத்திலிருந்து 29 கிலோமீட்டர் தொலைவிலும், மயிலத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 144 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]
வரலாறு
தொகுஆலகிராமமானது பல்லவர் காலத்தில் ஆலக்கூரை என்றும், சோழர் காலத்தில் ஆர்காமூர் என்றும் அழைக்கப்பட்டது. தமிழகத்தின் மிகப்பழமையான பிள்ளையார் சிலைகளில் ஒன்று இங்கு உள்ளது. மேலும் இந்த ஊரில்தான் தமிழ்நாட்டின் மிகப்பெரிய தவ்வை சிலை உள்ளிட்ட இரு தவ்வைகள் உள்ளன. வேரொங்கும் காண இயலாத தனித்துவமான திருமால், தென்முகக்கடவுள், லகுலீசர் திருவுருவங்கள் உள்ளன. மேலும் இங்கு நாயக்கர் கால சதிகல் உள்ளது.
ஊரில் உள்ள கோயில்கள்
தொகுமேற்கோள்
தொகு- ↑ "Alagramam Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-01-16.