இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலிய, நியூசிலாந்து சுற்றுப்பயணம் 1876–77
இங்கிலாந்து துடுப்பாட்ட அணி 1876-77 இல் ஆத்திரேலியாவிலும் நியூசிலாந்திலும் துடுப்பாட்டப் போட்டியில் கலந்துகொண்டது. இதன் போது வரலாற்றில் முதலாவது தேர்வுத் துடுப்பாட்டம் விளையாடப்பட்டது. ஆங்கிலேய அணி சில வேளைகளில் ஜேம்ஸ் லிலீவைட்டின் XI அணி என அழைக்கப்பட்டது. மொத்தமாக 23 ஆட்டங்கள் விளையாடிய போதும், இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகள் உட்பட மூன்று போட்டிகளே முதல்-தர ஆட்டங்களாகக் கணிக்கப்பட்டன. முதலாவது போட்டி அடிலெய்டு நீள்வட்ட அரங்கில் 1876 நவம்பர் 16 இலும், கடைசிப் போட்டி அதே அரங்கில் 1877 ஏப்ரல் 14 இலும் நடைபெற்றன. 15 ஆட்டங்கள் ஆத்திரேலியாவிலும், எட்டு நியூசிலாந்திலும் விளையாடப்பட்டன. பில்லி முர்டாக் குச்சக்காப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக ஆத்திரேலியாவின் சிறந்த வேகப்பந்து வீச்சாளரான பிரெட் ஸ்பொட்ஃபோர்த் முதலாவது போட்டியில் சேர்க்கப்படவில்லை. 1877 மார்ச் 15 முதல் இரண்டு அணிகளும் இரண்டு ஆட்டங்களில் விளையாடின. இத்தொடர் 1-1 என்ற கணக்கில் சமனாக முடிந்தது.
1877 ஆத்திரேலியா எ. இங்கிலாந்து துடுப்பாட்டத் தொடர் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||
அணிகள் | |||||||||||||
ஆத்திரேலியா | இங்கிலாந்து | ||||||||||||
தலைவர்கள் | |||||||||||||
டேவ் கிரெகரி | ஜேம்ஸ் லிலீவைட் | ||||||||||||
அதிக ஓட்டங்கள் | |||||||||||||
சார்லசு பான்னர்மான் (209) நாட் தொம்சன் (67) |
ஜார்ஜ் உலைட் (139) அலன் ஹில் (101) | ||||||||||||
அதிக வீழ்த்தல்கள் | |||||||||||||
டொம் கென்டல் (14) பில்லி மிட்வின்டர் (8) |
ஜேம்ஸ் லிலீவைட் (8) அல்பிரட் ஷா (8) |
கிரிக்கெட் வரலாற்றில் முதல் டெஸ்ட் போட்டி 1877 மார்ச் 15 ஆம் திகதி தொடங்கியது. ஆஸ்திரேலிய இங்கிலாந்து அணிகளுக்கிடையில் மெல்பேண் நகரில் தொடங்கிய இப்போட்டியில் நாணயச் சுண்டில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடியது. சார்லசு பான்னர்மன் ஆட்டமிழக்காமல் பெற்ற 165 ஓட்டங்களின் உதவியுடன் ஆஸ்திரேலியா 245 ஓட்டங்களைப் பெற்றது. பதிலளித்து ஆடிய இங்கிலாந்து அணி 196 ஆட்டங்களைப் பெற்றது. ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பகுதி ஆட்டத்தில் (இனிங்ஸில்) பான்னர்மன் நான்கு ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அணி 104 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. 154 என்ற வெற்றி இலக்குடன் தமது இரண்டாவது பகுதி ஆட்டத்தில் ஆடிய இங்கிலாந்து அணி 108 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. உலகின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 45 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
அணிகள்
தொகுஆத்திரேலியா | இங்கிலாந்து |
---|---|
|
ஆட்டங்கள்
தொகு1-வது தேர்வு
தொகு15–19 மார்ச் 1877
ஓட்டப்பலகை |
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
2-வது தேர்வு
தொகு31 மார்ச் – 4 ஏப்ரல் 1877
ஓட்டப்பலகை |
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- CricketArchive – tour itinerary. Retrieved 24 May 2014.