இசபெலின் கீச்சான்
இசபெலின் கீச்சான் (Isabelline shrike) அல்லது தவுரியன் கீச்சான் (லானியசு இசபெல்லினசு) என்பது கீச்சான் குடும்பத்தைச் சேர்ந்த சிற்றினம் ஆகும். இது முன்பு சிவப்பு முதுகு கொண்ட கீச்சான் மற்றும் செவ்வால் கீச்சான் ஆகியவற்றின் இணை இனமாகக் கருதப்பட்டது. இது காசுபியன் கடல் மற்றும் வடக்கு மற்றும் மத்திய சீனாவின் தென்கிழக்கே கைதாம் படுகையில் உள்ள ஒரு பரந்த பகுதியில் காணப்படுகிறது. ஆப்பிரிக்கா மற்றும் அரேபியாவில் குளிர்காலத்தில் காணப்படும்.
இசபெலின் கீச்சான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | உலானியசு
|
இனம்: | L. isabellinus
|
இருசொற் பெயரீடு | |
Lanius isabellinus கெம்பிரிச் & எக்ரென்பெர்க், 1833 |
சொற்பிறப்பியல்
தொகுஇதன் பேரினப் பெயர், லானியசு, இலத்தீன் வார்த்தையான " கசாப்பு" என்பதிலிருந்து பெறப்பட்டது. மேலும் சில கீச்சான்களின் உணவுப் பழக்கத்தின் காரணமாக "கசாப்பு பறவைகள்" என்றும் அழைக்கப்படுகின்றன. பொதுவான பெயர் குறிப்பிட்ட இசபெலினசு என்பதிலிருந்து, "சாம்பல்-மஞ்சள்" என்பதன் புதிய இலத்தீன் பெயரானது முதலாம் காசுடிலின் இசபெல்லா நினைவாகப் பெயரிடப்பட்டது. இவர் இசுபெயின் மூர்சிலிருந்து விடுதலை பெறும் வரை தனது உள்ளாடைகளை மாற்றமாட்டேன் என்று உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. பொதுவான ஆங்கிலப் பெயர் "ஷ்ரைக்" என்பது பண்டைய ஆங்கில ஸ்க்ரிக், "ஷ்ரைக்" என்பதிலிருந்து வந்தது. இது ஷிரில் அழைப்பைக் குறிக்கிறது.[2]
பழக்கவழக்கங்கள்
தொகுஇந்த இடம்பெயரக்கூட்டிய நடுத்தர அளவிலான பாசரின் பெரிய பூச்சிகள், சிறிய பறவைகள், கொறித்துண்ணிகள் மற்றும் பல்லிகளைச் சாப்பிடுகிறது. மற்ற கீச்சான்களைப் போலவே இது முக்கிய இடங்களிலிருந்து வேட்டையாடுகிறது. இது திறந்த பயிரிடப்பட்ட இடங்களில் இனப்பெருக்கம் செய்கிறது.
விளக்கம்
தொகுஇசபெலின் கீச்சான் இறகுகள், மணல் நிறம்த்தில் உள்ளன. சிவப்பு நிற வாலினைக் கொண்டது. இளம் பறவைகளை இளம் சிவப்பு-முதுகு கீச்சான்களிலிருந்து, அடிப்பகுதியில் உள்ள மிகவும் அரிதான புழுபோன்ற கோடுடைய தோற்றங்களால் வேறுபடுத்தலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Lanius isabellinus". IUCN Red List of Threatened Species 2016: e.T103718693A93995010. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103718693A93995010.en. https://www.iucnredlist.org/species/103718693/93995010. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ "Shrike". (Online). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். (Subscription or participating institution membership required.)
மேலும் படிக்க
தொகுஅடையாளம் காண
தொகு- Worfolk, Tim (2000) Identification of red-backed, isabelline and brown shrikes Dutch Birding 22 (6): 323-362
வெளி இணைப்புகள்
தொகு- படங்கள் - Oiseaux