இசுக்காட்லாந்து தேசிய காற்பந்து அணி

இசுக்காட்லாந்து ஆண்கள் தேசிய காற்பந்து அணி (Scotland men's national football team) என்பது ஆண்கள் பன்னாட்டுக் காற்பந்தில் இசுக்காட்லாந்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இது இசுக்காட்டியக் காற்பந்துச் சங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. இவ்வணி உலகக்கோப்பை காற்பந்து, யூஈஎஃப்ஏ தேசிய லீக், ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி ஆகிய மூன்று பெரிய தொழில்முறைப் போட்டிகளில் போட்டியிடுகிறது. இசுக்காட்லாந்து ஐக்கிய இராச்சியத்தின் ஒரு நாடாக இருக்கிறது, இதற்கு பன்னாட்டு ஒலிம்பிக் குழுவில் உறுப்புரிமை இல்லை, எனவே தேசிய அணி ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதில்லை. இசுக்காட்லாந்தின் பெரும்பாலான உள்ளூர்ப் போட்டிகள் தேசிய விளையாட்டுத் திடலான ஹாம்ப்டென் பூங்காவில் விளையாடப்படுகின்றன.

இசுக்காட்லாந்து
அடைபெயர்தர்த்தான் இராணுவம் (ஆதரவாளர்கள்)
கூட்டமைப்புஇசுக்கொட்லாந்து கால்பந்துச் சங்கம்
கண்ட கூட்டமைப்புஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம் (ஐரோப்பா)
தலைமைப் பயிற்சியாளர்இசுட்டீவ் கிளார்க்
அணித் தலைவர்அன்ட்ரூ இராபர்ட்சன்
Most capsகென்னி டால்கிளிசு (102)
அதிகபட்ச கோல் அடித்தவர்கென்னி டால்கிளிசு, டெனிசு லோ (30)
தன்னக விளையாட்டரங்கம்ஹாம்ப்டென் பூங்கா
பீஃபா குறியீடுSCO
பீஃபா தரவரிசை 40 5 (6 அக்டோபர் 2022)[1]
அதிகபட்ச பிஃபா தரவரிசை13[2] (அக்டோபர் 2007)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை88[3] (மார்ச் 2005)
எலோ தரவரிசை 31 13 (26 அக்டோபர் 2022)[4]
அதிகபட்ச எலோ1[4] (1876–92, 1904)
குறைந்தபட்ச எலோ64[4] (மே 2005)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
 இசுக்காட்லாந்து 0–0 இங்கிலாந்து 
(பாட்ரிக், இசுக்காட்லாந்து; 30 நவம்பர் 1872)
(உலக வரலாற்றில் முதலாவது பன்னாட்டுக் காற்பந்துப் போட்டி)
பெரும் வெற்றி
 இசுக்காட்லாந்து 11–0 அயர்லாந்து 
(கிளாஸ்கோ; 23 பெப்ரவரி 1901)
பெரும் தோல்வி
 உருகுவை 7–0 இசுக்காட்லாந்து 
(பேசெல், சுவிட்சர்லாந்து; 19 சூன் 1954)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்8 (முதற்தடவையாக 1954 இல்)
சிறந்த முடிவுகுழு நிலை (1954, 1958, 1974, 1978, 1982, 1986, 1990, 1998)
ஐரோப்பிய வாகை
பங்கேற்புகள்4 (முதற்தடவையாக 1992 இல்)
சிறந்த முடிவுகுழு நிலை (1992, 1996, 2020)
இணையதளம்scottishfa.co.uk

இசுக்காட்லாந்து அணி 1872 இல் உலகின் முதல் பன்னாட்டு காற்பந்து போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடியது. இசுக்காட்லாந்து இங்கிலாந்துடன் நீண்டகாலப் போட்டியைக் கொண்டுள்ளது,[5] இவ்வணிகள் 1872 முதல் 1989 வரை ஆண்டுதோறும் தமக்கிடையே விளையாடினர். அதன்பிறகு அணிகள் ஒன்பது முறை மட்டுமே சந்தித்துள்ளன, செப்டெம்பர் 2023 இல் நடந்த நட்பு ஆட்டத்தில் கடைசியாக தமக்கிடையே விளையாடின.

இசுக்காட்லாந்து பீஃபா உலகக்கிண்ணத்திற்கு எட்டு முறையும், யூஈஎஃப்ஏ ஐரோப்பிய வாகைக்கு நான்கு முறையும் தகுதி பெற்றது, ஆனால் இறுதிச் சுற்றின் முதல் குழு நிலைக்கு அப்பால் முன்னேறியதில்லை.[6] 1967 இல் வெம்பிளி திடலில் 1966 உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது போன்ற சில குறிப்பிடத்தக்க முடிவுகளை அந்த அணி அடைந்துள்ளது. நெதர்லாந்துக்கு எதிரான 1978 உலகக்கிண்ணப் போட்டியின் போது இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற நெதர்லாந்து அணியை குழு நிலைப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் வென்றிருந்தது.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. "The FIFA/Coca-Cola World Ranking". FIFA. 6 அக்டோபர் 2022. பார்க்கப்பட்ட நாள் 6 அக்டோபர் 2022.
  2. "Scots close in on England ranking". BBC Sport. 24 October 2007. Archived from the original on 1 June 2013. பார்க்கப்பட்ட நாள் 14 October 2015.
  3. "Wales fall in Fifa world rankings". BBC Sport. 24 March 2005. Archived from the original on 27 June 2018. பார்க்கப்பட்ட நாள் 13 May 2007.
  4. 4.0 4.1 4.2 Elo rankings change compared to one year ago. "World Football Elo Ratings". eloratings.net. 26 அக்டோபர் 2022. பார்க்கப்பட்ட நாள் 26 அக்டோபர் 2022.
  5. "A history of fierce football rivalry". BBC. 13 October 1999. Archived from the original on 15 September 2007. பார்க்கப்பட்ட நாள் 25 October 2007.
  6. "Modric magic ensures Croatia prolong Scotland's tournament woes". ESPN.com (in ஆங்கிலம்). 2021-06-22. Archived from the original on 7 May 2022. பார்க்கப்பட்ட நாள் 2021-06-23.
  7. "1978 World Cup". BBC. Archived from the original on 29 January 2006. பார்க்கப்பட்ட நாள் 15 May 2007.

வெளி இணைப்புகள்

தொகு