இசுதானா நெகாரா மலேசியா

மலேசிய மாமன்னரின் அதிகாரப்பூர்வ இல்லம்

இசுதானா நெகாரா (மலாய்: Istana Negara; ஆங்கிலம்: National Palace); என்பது மலேசிய அரசர் (Yang di-Pertuan Agong) அவர்களின் அதிகாரப்பூர்வ இல்லமாகும். இது வடமேற்கு கோலாலம்பூரில் உள்ள டாமன்சாரா துவாங்கு அப்துல் ஆலிம் சாலை (Jalan Tuanku Abdul Halim); எனும் டூத்தா சாலையில் (Jalan Duta) அமைந்துள்ளது.[1]

இசுதானா நெகாரா மலேசியா
Istana Negara Malaysia
National Palace of Malaysia
இசுதானா நெகாரா மலேசியா is located in மலேசியா
இசுதானா நெகாரா மலேசியா
மலேசியாவில் அமைவிடம்
பொதுவான தகவல்கள்
வகைஅரண்மனை
கட்டிடக்கலை பாணிமலாய்
இசுலாமியம்
மேற்கத்திய கலை
நகரம்கோலாலம்பூர்
நாடு மலேசியா
ஆள்கூற்று3°7′47″N 101°33′44″E / 3.12972°N 101.56222°E / 3.12972; 101.56222
தற்போதைய குடியிருப்பாளர்யாங் டி பெர்துவான் அகோங்
அடிக்கல் நாட்டுதல்நவம்பர் 2007
கட்டுமான ஆரம்பம்நவம்பர் 2007
நிறைவுற்றதுசெப்டம்பர் 2011
துவக்கம்15 நவம்பர் 2011
செலவுRM812 மில்லியன்
உரிமையாளர்மலேசிய அரசாங்கம்
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)மலேசிய பொதுப்பணித்துறை
Kumpulan Seni Reka Sdn. Bhd.
முதன்மை ஒப்பந்தகாரர்மலேசிய பொதுப்பணித்துறை
Maya Maju Sdn. Bhd.
மலேசிய தேசிய அரண்மனை
துறை மேலோட்டம்
அமைப்பு31 ஆகத்து 1957; 67 ஆண்டுகள் முன்னர் (1957-08-31)
ஆட்சி எல்லைமலேசியா
தலைமையகம்கோலாலம்பூர், மலேசியா
ஆண்டு நிதிRM13.53 மில்லியன் (2016)
அமைப்பு தலைமை
  • டத்தோஸ்ரீ அகமட் பாதில் பின் சம்சுதீன், (அரச குடும்பத்தின் கட்டுப்பாட்டாளர்)
    (Datuk Pengelola Bijaya Diraja)
மூல நிறுவனம்மலேசியப் பிரதமர் துறை
வலைத்தளம்www.istananegara.gov.my

மத்திய கோலாலம்பூரில் வேறு வளாகத்தில் அமைந்து இருந்த பழைய இசுதானா நெகாராவிற்குப் பதிலாக இந்த அரண்மனை 2011-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.[2]

அரண்மனை வளாகம் 97.65 எக்டர் பரப்பளவைக் கொண்டு உள்ளது. இந்த வளாகத்தில் 22 குவிமாடங்கள் உள்ளன. மற்றும் சாதாரண பகுதி (Formal Component); அரச பகுதி (Royal Component); மற்றும் நிர்வாகப் பகுதி (Administration Component) என மூன்று முக்கியப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.[3]

பொது

தொகு

இஸ்தானா நெகாராவின் முழு அரண்மனை வளாகமும்; டூத்தா சாலை (Jalan Duta), சங்காட் செமாந்தன் சாலை (Changkat Semantan), மற்றும் ஸ்ரீ ஹர்த்தாமாஸ் 1 சாலை (Jalan Sri Hartamas 1) ஆகிய சாலைகளில் இருந்து 3 முக்கிய நுழைவு வாயில்களைக் கொண்டுள்ளது.[1]

அவற்றுக்கு ”நுழைவாயில் 1 இஸ்தானா நெகாரா” (Gate 1 of Istana Negara); ”நுழைவாயில் 2 இஸ்தானா நெகாரா” (Gate 2 of Istana Negara); மற்றும் ”நுழைவாயில் 3 இஸ்தானா நெகாரா” (Gate 3 of Istana Negara) என பெயரிடப்பட்டு உள்ளன.

வரலாறு

தொகு

இப்போது அரண்மனை அமைந்துள்ள இடம் 1976-ஆம் ஆண்டில், புதிய அரண்மனை கட்டப்படும் நோக்கத்திற்காக அரசிதழில் வெளியிடப்பட்டது. பழைய அரண்மனையில் இட நெருக்கடியின் காரணமாக புதிய அரண்மனை தேவை எனும் கோரிக்கை வலுத்து வருவதாக அப்போதைய பணித்துறை அமைச்சர் துன் சாமிவேலு கூறினார்.

பழைய அரண்மனையின் பாலாய் ரோங் ஸ்ரீ (Balai Rong Seri) எனும் சிம்மாசன அறை; விருந்தினர் சந்திப்பு அறையாகவும், விருந்து அறையாகவும் பயன்படுத்தப்பட்டது. தொடக்கத்தில் பல ஒப்பந்தக்காரர்கள் அரண்மனைக் கட்டும் திட்டத்தில் ஈடுபட்டனர்.[2]

அரண்மனை வளாகம்

தொகு

இந்த அரண்மனை வளாகம் 96.52 எக்டர் பரப்பளவில் ஒரு மலையில் அமைந்துள்ளது. மலேசிய பொதுப்பணித் துறை (Malaysian Public Works Department) இயக்குநர் ஜெனரல் டாக்டர் அமர் ஹம்சா முகமட் யூனுஸ் கருத்துப்படி, அரண்மனை கட்டுமானத்திற்கு 28 எக்டர் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. மீதமுள்ள பகுதி ஒரு காட்டுப் பகுதியாகும். பாதுகாப்பு நோக்கங்களுக்காக அந்தக் காட்டுப் பகுதி ஒரு பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

நவம்பர் 2007-இல் கட்டுமானம் தொடங்கியது. கட்டுவதற்கு RM 812 மில்லியன் செலவானது. இந்த வளாகம் மலேசியாவின் 12-ஆவது மாமன்னர், பெர்லிஸ் ராஜா துவாங்கு சையத் சிராஜுதின் (Tuanku Syed Sirajuddin of Perlis) தலைமையில் கட்டப்பட்டது.

கொடியேற்றும் விழா

தொகு

மாமன்னர் ராஜா துவாங்கு சையத் சிராஜுதின், 13 நவம்பர் 2006-இல் புதிய அரண்மனை வளாகத்தின் கட்டுமானத்திற்கு அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அரண்மனை வளாகம் 2009-இல் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது ஆனால் செப்டம்பர் 2011-இல் தான் கட்டி முடிக்கப்பட்டது.[2]

2011 அக்டோபர் 19-ஆம் தேதி தொடங்கி, 2011 நவம்பர் 15-ஆம் தேதி வரையில் அரச குடும்பத்தினர் புதிய அரண்மனைக்கு இடம் மாறும் செயல்பாடுகளை கட்டம் கட்டமாக நிறைவேற்றினார்கள். 2011 நவம்பர் 15-ஆம் தேதி கொடியேற்றும் விழாவுடன் இடம் மாற்றம் முடிவடைந்தது.

மலேசியாவின் 13-ஆவது மாமன்னர்

தொகு

மலேசியாவின் 13-ஆவது மாமன்னர், துவாங்கு மிசான் ஜைனல் அபிடின் (Mizan Zainal Abidin of Terengganu) (திராங்கானு சுல்தான்) தான் புதிய அரண்மனையைப் பயன்படுத்திய முதல் மாமன்னர் ஆகும்.

மலேசியாவின் 14-ஆவது மாமன்னர், துவாங்கு அப்துல் ஹாலிம் முவாட்சம் ஷா (Tuanku Abdul Halim Mu'adzam Shah of Kedah) (கெடா சுல்தான்) தான் அந்தப் புதிய அரண்மனையில் பதவியேற்பு விழாவை மேற்கொண்ட முதல் மாமன்னர் ஆகும்.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Jalan Tuanku Abdul Halim was known as Jalan Duta. Jalan Duta was renamed after Sultan Abdul Halim Mu'adzam Shah, the Sultan of Kedah, who was the only sultan so far, to be installed twice, being the 14th and 27th Yang di-Pertuan Agong of Malaysia". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 29 November 2022.
  2. 2.0 2.1 2.2 "Istana Negara is the official residence of Her Majesty the Yang di-Pertuan Agong and Her Majesty the King. Located in Jalan Tuanku Abdul Halim, Kuala Lumpur and is a landmark for the Constitutional Monarchy government system in Malaysia". பார்க்கப்பட்ட நாள் 29 November 2022.
  3. Zamzukhairi Noordin (21 November 2011). "Istana Negara : From Jalan Istana To Jalan Duta". mynewshub. Archived from the original on 24 April 2012. பார்க்கப்பட்ட நாள் 12 December 2011.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Istana Negara, Kuala Lumpur
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுதானா_நெகாரா_மலேசியா&oldid=4094579" இலிருந்து மீள்விக்கப்பட்டது