இசுலாமிய வளர்ச்சி வங்கி
இசுலாமிய வளர்ச்சி வங்கி (ஆங்கிலம்: The Islamic Development Bank (IDB, IsDB), அரபு: البنك الإسلامي للتنمية ) என்பது உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான இசுலாமிய நிதியைக் கருத்தாகக் கொண்ட ஒரு பன்முக வளர்ச்சி நிதி நிறுவனம் ஆகும். இந்த வங்கி சவூதி அரேபியாவில் ஜெட்டா நகரில் அமைந்துள்ளது.[1] 1973 ஆம் ஆண்டில் இசுலாமிய நாடுகளின் நிதி அமைச்சர்கள் கலந்து கொண்ட இசுலாமிய கூட்டமைப்பு மாநாட்டில் சவுதி அரேபிய மன்னர் பைசலின் ஆதரவுடன் தொடங்கப்பட்டது. இவ்வங்கியின் அலுவல் நடவடிக்கைகள் 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி தொடங்கியது.[2] இந்த வங்கியில் ஐம்பத்தேழு (57) நாடுகள் பங்கு முதலீட்டு உறுப்பினர்களாக உள்ளன.[3] இசுலாமிய கூட்டமைப்பு 2011-ஆம் ஆண்டு முதல் இசுலாமிய ஒத்துழைப்பு அமைப்பு என அழைக்கப்படுகிறது.
சுருக்கம் | IDB / IsDB |
---|---|
உருவாக்கம் | 1975 |
வகை | வளர்ச்சி வங்கி |
தலைமையகம் |
|
உறுப்பினர்கள் | 57 நாடுகள் |
முக்கிய நபர்கள் | முகமது அல்-ஜாசர், தலைவர் |
ஊழியர்கள் | 932 |
வலைத்தளம் | www.isdb.org/ |
இசுலாமிய நாடுகளுக்கும் மற்ற உறுப்பினர் அல்லா நாடுகளுக்கும் உதவுவதற்காக 2013 மே மாதம் 22 ஆம் நாள் இந்த வங்கி தனது அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை மும்மடங்காக 150 பில்லியன் என்ற அளவுக்கு உயர்த்தியது.[4] சவூதி அரேபியா நான்கில் ஒரு பங்கு மூலதனத்தை இவ்வங்கியில் வைத்திருக்கிறது, ஐக்கிய நாடுகள் பொது சபையில் இந்த வங்கி பார்வையாளராக உள்ளது.
உறுப்பினர்கள்
தொகு2018-ஆம் ஆண்டினடிப்படையில் இந்த வங்கியின் உறுப்பினர் நாடுகளின் எண்ணிக்கை ஐம்பத்தேழு (57). இவ்வங்கியில் சேருவதற்கான அடிப்படைக் கட்டுப்பாடுகள்: உறுப்பு நாடு இசுலாமிய ஒத்துழைப்பு அமைப்பில் (OIC) உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதும், இந்த வங்கியின் மூலதனத்துக்குப் தனது பங்களிப்பை வழங்கவேண்டும் என்பதும், இந்த வங்கியின் ஆளுநர்கள் குழு முடிவெடுக்கும் விதிமுறைகளையும் வரையறைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுமாகும்.
தரவரிசையில் அடிப்படையில் செலுத்தப்பட்ட மூலதனம் (ஆகஸ்ட் 2015),[5] முதன்மைப் பங்குதாரர் நாடுகளின் பட்டியல்
- சவுதி அரேபியா (26.57%)
- லிபியா (10.66%)
- ஈரான் (9.32%)
- எகிப்து (9.22%)
- துருக்கி(8.41%)
- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (7.54%)
- குவைத் (7.11%)
- பாக்கிஸ்தான்(3.31%)
- அல்ஜீரியா (3.31%)
- இந்தோனேசியா (2.93%)
மேற்கோள்கள்
தொகு- ↑ Taylor & Francis Group; Dean, Lucy (2003), The Middle East and North Africa 2004: 2004 (Illustrated ed.), Routledge, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85743-184-7
- ↑ Epstein, Matthew (September 2003). "Saudi Support for Islamic Extremism in the United States" (PDF). Islam Daily. பார்க்கப்பட்ட நாள் 22 April 2012.
- ↑ "About IDB". Islamic Development Bank. Archived from the original on February 10, 2018. பார்க்கப்பட்ட நாள் May 25, 2018.
- ↑ Islamic Development Bank triples authorised capital பரணிடப்பட்டது 2013-12-19 at the வந்தவழி இயந்திரம்| reuters.com|2013/05/22
- ↑ "IDB Group in Brief". Archived from the original on 18 ஆகஸ்ட் 2015. பார்க்கப்பட்ட நாள் 25 August 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)