இதய கீதம்

ஜோசப் தளியத் இயக்கத்தில் 1950 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

இதய கீதம் 1950 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ் திரைப்படமாகும். ஜோசப் தளியத் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், டி. ஆர். ராஜகுமாரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[2]

இதய கீதம்
இயக்கம்ஜோசப் தளியத்
தயாரிப்புஜோசப் தளியத்
கதைஜோசப் தளியத்
திரைக்கதைநாஞ்சில் டி. என். ராஜப்பா
இசைஎஸ். வி. வெங்கட்ராமன்
நடிப்பு
ஒளிப்பதிவுஜித்தேன் பானர்ஜி
படத்தொகுப்புஎஸ். ஏ. முருகேசன்
கலையகம்சிட்டாடல்
வெளியீடுசூலை 29, 1950 (1950-07-29)(இந்தியா)[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திரைக்கதைச் சுருக்கம்

தொகு

ஒரு அரசன் தான் சாகும் தறுவாயில் தன் மனைவியான அரசியையும், மகளையும் நன்றாகக் கவனித்துக்கொள்ளுமாறு தன் நண்பனிடம் தெரிவிக்கிறான். அந்த நண்பனுக்கு இரண்டு மகன்கள். பெரியவன் ஒரு யுத்தத்தில் போரிடச் செல்கிறான். அச்சமயம் இளையவனுக்கும் இளவரசிக்குமிடையே காதல் மலர்கிறது. பெரியவன் சண்டையில் வெற்றி பெற்றுத் திரும்பி வருகிறான். இளவரசியைத் தனக்குத் திருமணம் செய்து வைக்கும்படி தந்தையிடம் கேட்கிறான். இளவரசி குழப்பமடைகிறாள். அவளால் ஒரு தீர்மானத்துக்கு வரமுடியவில்லை. இதைக் கண்ட இளையவன் தானும் போருக்குப் புறப்பட்டுச் செல்கிறான். ஆனால் அவன் காயத்துடன் திரும்பி வருகிறான். அவன் தன்னால் தான் போருக்குப் போனான் என உணர்ந்த இளவரசி அவனது காயம் ஆறுவதற்கு அளிக்கப்படும் சிகிச்சையில் தானும் பணிவிடை செய்கிறாள். இளவரசியை யார் மணப்பது என்பதைத் தீர்மானிக்க அண்ணனும் தம்பியும் சண்டை போடுகிறார்கள். சண்டையில் தம்பி வெற்றி பெறுகிறான். அவனே இளவரசியைத் திருமணம் செய்கிறான்.[2]

நடிகர்கள்

தொகு

இந்தப் பட்டியல் தி இந்து நாளிதழில் வெளியான இத்திரைப்படம் பற்றிய விமர்சனக் கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது.[2]

நடனம்:

தயாரிப்புக் குழு

தொகு

பின்வரும் பட்டியல் தமிழ்த் திரைப்பட வரலாற்றாசிரியர் பிலிம் நியூஸ் ஆனந்தனின் தரவுத் தளத்திலிருந்து தொகுக்கப்பட்டது.[1]

 • தயாரிப்பு, கதை, இயக்கம்: ஜோசப் தளியத்
 • வசனம்: நாஞ்சில் டி. என். ராஜப்பா
 • ஒளிப்பதிவு இயக்குநர்: ஜித்தேன் பானர்ஜி
 • படப்பிடிப்பாளர்கள்: ஆர். ஆர். சந்திரன், ஆர். என். பிள்ளை
 • கலை இயக்குநர்: ஜோசப் தளியத்
 • தொகுப்பு: எஸ். ஏ. முருகேசன்
 • நட்டுவாங்கம்: ஹீராலால், சின்ஹா
 • ஒளிப்படம்: எம். எஸ். ஞானம்

தயாரிப்பு விபரம்

தொகு

இத்திரைப்படம் பின்னர் ஜீவன் தாரா என்ற தலைப்புடன் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
திரைப்பட வரலாற்றாசிரியர் ராண்டார் கை இத்திரைப்படம் வசூலில் எதிர்பார்த்த அளவு வெற்றியைக் கொடுக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.[2]

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்துக்கு எஸ். வி. வெங்கட்ராமன் இசையமைத்தார். கம்பதாசன், கே. பி. காமாட்சி ஆகியோர் பாடல்களை இயற்றினர். வானுலாவும் தாரை நீ என் இதய கீதமே, ஓடி வா வெண்முகில் போலே ஆகிய இரண்டு பாடல்கள் பிரபலமாயின. இரண்டு பாடல்களையும் டி. ஆர். மகாலிங்கம், டி. ஆர். ராஜகுமாரி, ஆகியோர் பாடியிருந்தனர்.[2]

சான்றாதாரங்கள்

தொகு
 1. 1.0 1.1 சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2016-11-29. பார்க்கப்பட்ட நாள் 2016-11-29.
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Ithaya Geetham (1950)". தி இந்து. 17 ஜூன் 2010. Archived from the original on 2014-08-12. பார்க்கப்பட்ட நாள் 29 நவம்பர் 2016. {{cite web}}: Check date values in: |date= (help)
 3. இதய கீதம் பாட்டுப் புத்தகம்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இதய_கீதம்&oldid=3949894" இலிருந்து மீள்விக்கப்பட்டது