இத்தியபுரம் காவு சாஸ்தா துர்க்கை கோயில்

இத்தியபுரம்காவு ஸ்ரீ வன சாஸ்தா மற்றும் ஸ்ரீ வன துர்க்கை கோயில் என்பது நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் , நாகர்கோவிலில் இருந்து 30 கிமீ தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து 52 கி,மீ தொலைவிலும், அமைந்துள்ள சுவாமியார்மடத்திலிருந்து வேர்கிளம்பி செல்லும் சாலையில் கோவிக்கல் பாலத்தினருகில் இத்தியபுரம் காவு அமைந்துள்ளது.

இத்தியபுரம் காவு
சாமியார் மடம்
Ithiyapuramkaavu
Village
அடைபெயர்(கள்): சாஸ்தா கோயில்
இத்தியபுரம் காவு is located in தமிழ் நாடு
இத்தியபுரம் காவு
இத்தியபுரம் காவு
தமிழ்நாட்டில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 8°18′27″N 77°13′18″E / 8.3076°N 77.221785°E / 8.3076; 77.221785
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி
மொழிகள்
 • அலுவலக மொழிதமிழ்
 • பேச்சு மொழிகுமரி தமிழ்,மலையாளம்,ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
629158
வாகனப் பதிவுTN-75
அருகிலுள்ள நகரங்கள்மார்த்தாண்டம் , தக்கலை , திருவட்டார் , நாகர்கோவில் , திருவனந்தபுரம்
மக்களவை தொகுதிகன்னியாகுமரி
சட்டமன்றத் தொகுதிபத்மநாபபுரம்
எழுத்தறிவு100%
இணையதளம்http://ithiyapuramkaavu.in/
இத்தியபுரம் காவு

இவ்விடத்தில் ஸ்ரீ வன சாஸ்தா மற்றும் ஸ்ரீ வன துர்க்கை மூலவர்களாக அருள் பாலித்துக்கொண்டிருக்கிறார்கள். மேலும் பால கணபதி,நாகராஜா, நாகயக்ஷி, நாககன்னி,கிருட்டிணன், ஈஸ்வரக்கால பூதத்தான் ஆகியோரும் உண்டு.

ஸ்ரீ வன சாஸ்தா, ஸ்ரீ வன துர்க்கா, மற்றும் பால கணபதி தெய்வங்கள் சுயம்பு வடிவிலேயே காட்சியளிக்கின்றனர்.

இங்கு பால கணபதி சுயம்பு உருவம் கொண்டுள்ளார் ஸ்ரீ வன துர்க்கா தவக்கோலத்தில் அருள்புரிகிறாள்.

இக்கோவிலின் பின் பகுதியிலுள்ள வனப்பகுதியில் தங்க நிற பாம்பும், வெள்ளை நிற பாம்பும்,ராஜ நாகங்களும் வாழ்வதாக ஐதீகம் உள்ளது. பல பக்தர்களும் பார்த்து உள்ளதாக கூறப்படுகிறது.

இக்கோவிலின் பிரம்மாண்ட மரங்களே இதன் பழமைக்கு மிகப்பெரிய சான்று.

இதன் பின்புறத்திலுள்ள அடர்ந்த மரங்களும், கொடிகளும் நிறைந்த வனப்பகுதிக்குள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.

வரலாறு

தொகு

திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா இந்த பகுதி வழியாக தப்பிச் சென்றதாகவும், பிற்காலத்தில் அவர் மன்னனானதும் இக்கோயிலுக்கு நிறைய சொத்துக்களை செம்பேட்டில் எழுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது.

இக்கோவில் எந்தவித வருமானமுமின்றி, பராமரிப்பற்று பல வருட காலங்களாக இருந்து வந்தது. தற்பொழுது சில வருடங்களாக இக்கோவிலில் பூஜைகள் அப்பகுதிவாழ்  மக்கள் நடவடிக்கை மேற்கொண்டு தினசரி பூஜைகள் நடைபெறுகிறது.

பங்குனி உத்திரத்தின் பொது ஐந்து நாட்கள் தொடர்ந்து திருவிழா நடைபெறுகிறது. கார்த்திகை மாத மண்டல பூஜைகள் 41 நாட்களும், பௌர்ணமி பூஜை, ஆயில்ய பூஜை ஆகியவைகளும் நடைபெறுகின்றன.

நித்ய பூஜையாக மாலை நேர சந்தியா பூஜை நடைபெறுகிறது.

பேச்சிப்பாறை காட்டு பகுதியிலிருந்து வன துர்க்கா இங்கு வந்து இப்பகுதியில் இஷ்டத்துடன் அமர்ந்து அருள்பலிப்பதாகவும், அவருக்கு துணையாக வன சாஸ்தாவும், நாகர் படைகளும் அருள்பாலிப்பதாகவும் ஐதீகம் உள்ளதாக நம்பப்படுகிறது.

எல்லா மாத பௌர்ணமி தினங்களிலும் இங்கு நாகர் தரிசனம் கிடைக்கிறது.

மேற்கோள்கள்

தொகு

www.ithiyapuramkaavu.in

வெளி இணைப்புகள்

தொகு

படங்கள்

தொகு