இந்தியத் தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடம்

இந்தியத் தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடம் (National Physical Laboratory of India) என்பது புது தில்லியில் அமைந்துள்ள இயற்பியல் ஆய்வுக்கூடம் ஆகும். இது இந்தியாவின் அளவீட்டு தர ஆய்வுக்கூடமாக் திகழ்கிறது. இது இந்தியாவில் அனைத்துலக முறை அலகுகள் தரங்களைப் பராமரித்தலுடன் எடைகள் மற்றும் நடவடிக்கைகளின் தேசிய தரங்களைக் கணக்கிடுகிறது.[1]

இந்தியத் தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடம்
துறை மேலோட்டம்
அமைப்புசனவரி 4, 1947
தலைமையகம்புது தில்லி
அமைப்பு தலைமை
  • வேணுகோபால் அச்சந்தா, இயக்குநர்
மூல அமைப்புஅறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் புது தில்லி
வலைத்தளம்nplindia.org

வரலாறு தொகு

இந்தியத் தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடம், 1900ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் கீழ் அமைக்கப்பட்ட, ஆரம்பகால தேசிய ஆய்வகங்களில் ஒன்றாகும். 1947ஆம் ஆண்டு ச்னவரி 4 ஆம் தேதி ஜவஹர்லால் நேரு தேசிய இயற்பியல் ஆய்வகத்திற்கு அடிக்கல் நாட்டினார். க. சீ. கிருட்டிணன் ஆய்வகத்தின் முதல் இயக்குநராக நியமிக்கப்பட்டார். ஆய்வகத்தின் பிரதான கட்டிடடத்தை 1950 சனவரி 21 அன்று முன்னாள் துணைப்பிரதமர் சர்தார் வல்லபாய் பட்டேல் திறந்து வைத்தார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, திசம்பர் 23, 1975-ல் ஆய்வகத்தின் வெள்ளி விழா கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார்.

ஆராய்ச்சி திட்டங்கள் தொகு

இந்தியத் தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடம் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளது. தேசிய இயற்பியல் ஆய்வகம் மேற்கொண்டுள்ள முக்கியமான ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஒன்று, இந்தியத் தேர்தல்களில் மோசடியான வாக்களிப்பைத் தடுக்க பயன்படுத்தப்படும் அழியாத மையுக்கான இரசாயன கலவையினை உருவாக்கியதாகும். மைசூர் பெயிண்ட்ஸ் மற்றும் வார்னிஷ் லிமிடெட் தயாரித்துள்ள இந்த மை, வாக்காளர் ஏற்கனவே வாக்களித்ததற்கான அடையாளமாக, வாக்காளரின் விரல் நகத்தில் தடவப்படுகிறது.[2]

இந்தியத் தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடம் உயிர் உணர்வி மேம்பாட்டில் பணிபுரியும் பிரிவையும் கொண்டுள்ளது. தற்போது இந்தப் பிரிவு முனைவர் சி. சர்மா தலைமையில் செயல்படுகிறது. இந்தப் பிரிவு முதன்மையாக கொலஸ்டிரால், அளவீடு மற்றும் நுண்ணீர்மம் அடிப்படையிலான உயிர் உணர்விகள் உருவாக்கத்தில் கவனம் செலுத்துகிறது. யூரிக் அமிலத்தைக் கண்டறிவதற்கான உயிர் உணர்விகளையும் உருவாக்குகிறது.

தலைசிறந்த பணியாளர்கள் தொகு

இந்தியத் தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடத்தில் பணிபுரியும்/பணிபுரிந்த ஊழியர்கள் பெற்ற சிறப்புகளும் விருதுகளும்:

பத்ம பூசண் தொகு

  • க. சீ. கிருட்டிணன் - 1954
  • ஏ. ஆர். வர்மா – 1982
  • ஏ. பி. மித்ரா - 1989
  • எஸ். கே. ஜோஷி - 2003

பத்மசிறீ தொகு

  • எஸ். கே. ஜோஷி – 1991

சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது தொகு

  • க. சீ. கிருட்டிணன் - 1958
  • ஏ. பி. மித்ரா - 1968
  • வினய் குப்தா - 2017

பிற தொகு

காலநிலை மாற்றம் தொடர்பான பருவநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழுவில் ஏ. பி. மித்ரா மற்றும் செம்மேந்திர சர்மா - 2007-ல் அரசுகளுக்கிடையேயான குழுவிற்கான நோபல் அமைதி பரிசு பெற்ற குழுவின் பங்களிப்பாளர்களாகச் செயல்பட்டனர்.

மேற்கோள்கள் தொகு