இந்தியாவில் உள்ள குறிப்பிடத்தக்க ஆலமரங்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இந்தியாவில் உள்ள குறிப்பிடத்தக்க ஆலமரங்களின் பட்டியல் (List of banyan trees in India) என்பது இந்தியாவின் பல பகுதிகளில் பல ஆண்டு காலமாக உள்ள பழமையான ஆல மரங்களின் பட்டியல் ஆகும். ஆலமரம் இந்தியாவின் பல மத மரபுகளில் புனிதமாகக் கருதப்படுகிறது. பிசுகசு பெங்காலியன்சிசு (Ficus benghalensis) எனப்படும் ஆல மரம் இந்தியாவின் தேசிய மரமாகும்,[1] மேலும் இது மத்தியப் பிரதேசத்தின் மாநில மரமாகும் .

திம்மம்மா மரிமானு - இந்து மதம், புத்த மதம், சமணம் மற்றும் சீக்கியம் போன்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்களால் மதிக்கப்படும் பெரிய ஆலமரம்.

இந்தியாவில் உள்ள குறிப்பிடத்தக்க ஆலமரங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இங்குப் பட்டியலிடப்பட்டுள்ள மரங்கள் இதன் வரலாற்று, தேசிய, இருப்பிட, இயற்கை அல்லது புராண சூழலால் முக்கியமானதாக அல்லது குறிப்பிட்டதாகக் கருதப்படுகின்றன. பட்டியலில் இந்தியா முழுவதும் உள்ள உண்மையான ஆலமரங்கள் அடங்கும்.

  • திம்மம்மா மரிமானு ஆலமரம்: இந்த ஆலமரம் ஆந்திரப் பிரதேசம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள கத்ரி லக்ஷ்மி நரசிம்மர் கோயிலிலிருந்து 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதன் கிளைகள் 4 ஏக்கர் பரப்பளவில்,[2][3] 19,107 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட விதானத்துடன் 1989-ல் கின்னசு புத்தகத்தில் உலகிலேயே மிகப்பெரிய மர மாதிரியாகப் பதிவு செய்யப்பட்டது.
  • கபீர்வாத்: குசராத்தில் உள்ள இந்த ஆலமரம் மிகப்பெரிய ஆலமரங்களில் ஒன்றாகும். தற்போது இதன் விதானத்தின் பரப்பளவு 17,520 மீ 2 (4.33 ஏக்கர்). சுற்றளவு 641 மீட்டர் ஆகும்.(2,103 அடி). துறவி கபீரின் பெயரால் பெயரிடப்பட்ட இது, பருச் நகருக்கு அருகிலுள்ள குசராத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிரபலமான இடமாகும்.
  • கொல்கத்தாவிற்கு அருகிலுள்ள தாவரவியல் பூங்காவில் உள்ள கொல்கத்தா பெரிய ஆலமரம், 330 மீட்டருக்கும் அதிகமான கிரீட சுற்றளவு கொண்ட இந்திய ஆலமரம் ஆகும். இந்த மரத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பரப்பளவு சுமார் 18,918 சதுர மீட்டர் (சுமார் 1.89 ஹெக்டேர் அல்லது 4.67 ஏக்கர்) ஆகும். மரத்தின் தற்போதைய மேற்பரப்பு 486 மீ சுற்றளவு கொண்டது. இதன் மிக உயர்ந்த கிளை 24.5 மீட்டருடையது. இது தற்போது 3772 வான்வழி வேர்களை முட்டு வேராகக் கொண்டுள்ளது.
  • பில்லாமரி:, 800 ஆண்டுகள் பழமையான ஆலமரம், தெலங்காணா மகபூப்நகரில் அமைந்துள்ளது. இந்த மரம் 4 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது. இந்தியாவின் தொல்பொருள் ஆய்வின்படி, இது இந்தியாவில் மூன்றாவது பெரிய மரமாகும்.
  • பிரம்மஞான சபை, அடையாறு ஆலமரம்: இந்தியாவின் தமிழ்நாடு, சென்னையில் அடையாற்றில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான ஆலமரம். இதன் கீழ் ஜே. கிருஷ்ணமூர்த்தி, அன்னி பெசன்ட் மற்றும் மரியா மாண்டிசோரி உள்ளிட்ட அறிவுஜீவிகளின் சொற்பொழிவுகளை மக்கள் கேட்டுள்ளனர்.[4]
  • தொட்டா ஆலத மரா: 400 ஆண்டுகள் பழமையான மரம், கருநாடகாவின் பெங்களூரு, ராமோஹல்லியில் உள்ளது. பெரிய ஆலமரம் என்றும் அழைக்கப்படுகிறது. இது 95 அடி உயரம் மற்றும் 3 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது. இந்த மரம் பெங்களூரிலிருந்து 28 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
  • சோசத் யோகினி கோயில்: மத்தியப் பிரதேசத்தில் (இந்தியா) மகாராஜ்பூரில் உள்ள சாகர் என்ற இடத்தில் அமைந்துள்ள 1000 ஆண்டுகள் பழமையான ஆலமரம், 50000 சதுர அடியில் பரவியுள்ளது, இது மத்திய இந்தியாவின் மிகப்பெரிய ஆலமரமாகும்.
  • மகாராட்டிராவின் அமராவதி மாவட்டத்தில் அமைந்துள்ள பீர்பாபாவின் தரோடா புனித தோப்புக்குள் 2.5 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு பெரிய ஆலமரம் பரவியுள்ளது. இந்த ஆலமரம் புனிதமாகக் கருதப்படுகிறது.
  • பஞ்சாபின் பதேகாட் சாகிப் மாவட்டத்தில் உள்ள சோல்டி கெரி புனித மரம்.
  • பெம்கிரி, 3.5 ஏக்கர் பரப்பளவில், மகாராட்டிராவின் மிகப்பெரிய ஆலமரம், புனே-நாசிக் நெடுஞ்சாலையில் சங்கம்னரிலிருந்து மேற்கே 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "National Tree". இந்திய அரசு Official website. பார்க்கப்பட்ட நாள் 2012-01-16.
  2. "Backpacker Backgammon Boards - Banyan Trees". Archived from the original on 2012-07-10. பார்க்கப்பட்ட நாள் 2015-01-18.
  3. "Thimmamma Marrimanu - Anantapur". Anantapur.com. பார்க்கப்பட்ட நாள் 19 March 2019.
  4. Theosophist Magazine; October-December 1927.