இந்தியாவில் குருதிக் கொடை
இந்தியாவில் இரத்த தானம் (Blood donations in India) பெரும்பாலும் மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்களால் இரத்ததான முகாம்கள் மூலம் நடத்தப்படுகின்றன. நன்கொடையாளர்கள் மருத்துவமனைகளில் உள்ள இரத்த வங்கிகளுக்கும் சென்று இரத்த தானம் செய்கிறார்கள். தானமாகப் பெறப்படுகிற இரத்தம் பற்றாக்குறையாக இருந்தபோதிலும், பல ஆண்டுகளாக அரசாங்கம் மற்றும் தொடர்புள்ள தன்னார்வ குழுக்களின் முயற்சிகள் தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையிலான இடைவெளியை குறைக்க உதவியுள்ளன. 2006-2007 ஆம் ஆண்டில் 54.4% ஆக இருந்த தன்னார்வ இரத்த தானம் அளிப்பவர்களின் எண்ணிக்கை 2011-2012 ஆம் ஆண்டில் 83.1% ஆக அதிகரித்தது. 2006-2007 ஆம் ஆண்டில் 4.4 மில்லியன் அலகுகளாக இருந்த தானம் பெறப்பட்ட இரத்த அலகுகளின் எண்ணிக்கை 2012-2013 இல் 9.3 மில்லியன் அலகுகளாக அதிகரித்தது.[1] 2016 ஆம் ஆண்டில் 12 மில்லியன் அலகுகள் இரத்தம் தேவைக்கு எதிராக 10.9 மில்லியன் அலகுகள் இரத்தம் நன்கொடையாகப் பெறப்பட்டதாக சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவித்தது.[2] 2020 ஆம் ஆண்டில் 12.7 மில்லியன் அலகுகள் இரத்தம் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது. கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக கணிக்கப்பட்ட இரத்ததான அளவை விட இந்த பெறப்பட்ட அளவு குறைவாகும்.[3] இரத்த தானம் மற்றும் இரத்த வங்கி மேலாண்மைக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பானது மத்திய மருந்துகள் தரநிலை கட்டுப்பாட்டு அமைப்பிடம் உள்ளது. தேசிய இரத்த மாற்று கழகம் மற்றும் தேசிய எய்ட்சு கட்டுப்பாட்டு அமைப்பு போன்ற தொழில்நுட்ப அமைப்புகள் இரத்தமாற்று மருந்து மற்றும் இரத்த வங்கி மேலாண்மைக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகளை உருவாக்குகின்றன.
ஆரோக்கியமான மனிதர்கள் சுமார் 350 மில்லி லிட்டர் இரத்தத்தை தானம் செய்யலாம்.[4] இரத்த நன்கொடையாளர்களுக்கு வழக்கமாக குளுக்கோசு, பானங்கள், மாச்சில்லுகள், பழங்கள் போன்றவற்றை தானச் செயல்முறைக்குப் பிறகு புத்துணர்ச்சிக்காக வழங்கப்படுகின்றன. சில நிறுவனங்கள் போக்குவரத்து வசதிகளையும், சான்றிதழ்கள் அல்லது பட்டயங்களையும் நன்றியுணர்வுடன் வழங்குகின்றன.[5]
வரலாறு
தொகுஇந்தியாவில் தன்னார்வ இரத்த தானத்தின் வரலாறு 1942 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின் போது காயமடைந்த வீரர்களுக்கு இரத்த தானம் செய்ய வேண்டிய காலத்திலிருந்து தொடங்கியது. முதல் இரத்த வங்கி மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தாவில் 1942 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் அகில இந்திய சுகாதாரம் மற்றும் பொது சுகாதார நிறுவனத்தில் நிறுவப்பட்டது. செஞ்சிலுவை சங்கத்தால் இந்த இரத்தவங்கி நிர்வகிக்கப்பட்டது. நன்கொடையாளர்கள் பெரும்பாலும் அரசு ஊழியர்களாகவும் மனிதாபிமான காரணத்திற்காக இரத்த தானம் செய்த ஆங்கிலோ-இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தனர். போருக்குப் பிறகு தன்னார்வ நன்கொடையாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இரத்தத்தை நன்கொடையளிக்கும் நபர்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய நிலை உருவானது. ஒரு சமூக சீர்திருத்தவாதியான லீலா மூல்கோகர் 1954 ஆம் ஆண்டு முதல் மும்பையில் தன்னார்வ இரத்த தான முகாம்களை நடத்தத் தொடங்கினார். 1960 ஆம் ஆண்டுகளில் பல்வேறு நகரங்களில் பல இரத்த வங்கிகள் திறக்கப்பட்டன. 1975 ஆம் ஆண்டில், ஜே. ஜி. ஜாலி தலைமையிலான இந்திய இரத்த மாற்று மற்றும் நோய் எதிர்ப்பியல் சங்கம் அக்டோபர் 1 ஆம் தேதியை தேசிய தன்னார்வ இரத்த தான நாளாக அறிவித்தது.[6]
1980 ஆம் ஆண்டுகளில் பரவிய எச்.ஐ.வி தொற்று நிலை, எய்ட்சு பரவுவதைத் தடுப்பதில் கொள்கைகளை மேற்பார்வையிட 1992 ஆம் ஆண்டில் தேசிய எய்ட்சு கட்டுப்பாட்டு அமைப்பை அரசாங்கம் அமைக்க வழிவகுத்தது. பின்னர், இதைத் தொடஎந்து தேசிய எய்ட்சு கட்டுப்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. இதனால் நோயாளி பரிசோதனை மற்றும் சுகாதாரமான மாற்று நடைமுறைகளின் மேம்பாடுகளுக்கு வழிபிறந்தது. இரத்தத்தை விற்கும் நடைமுறையை இரத்து செய்யக் கோரி 1996 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்டது. 1998 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல்தேதி முதல் இரத்தம் விற்பனை செய்வதை தடை செய்யும் நடைமுறை அமுலுக்கு வந்தது.[5] பணத்திற்கு ஈடாக இரத்த விற்பனை அல்லது தானம் செய்வது தேசிய இரத்த மாற்று சேவைகள் சட்டம் 2007 இன் கீழ் சட்டவிரோதமானது என்றும் தண்டிக்கப்பட்டவர்கள் அபராதத்துடன் மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனையை எதிர்கொள்ளக்கூடும் என்பதும் சட்டமானது.[7] திருநங்கைகள், ஓரினச்சேர்க்கை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பாலியல் தொழிலாளர்கள் இரத்த தானம் செய்வதைத் தடை செய்யும் இரத்த தான வழிகாட்டுதல்களை எதிர்த்து 2021 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.[8]
இரத்த தானம் செய்வதற்கான நிபந்தனைகள்
தொகுஇரத்த தானம் செய்வதற்குரிய தனிநபரின் தகுதியை தீர்மானிக்கும் பல அளவுருக்கள் உள்ளன. மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் வகுத்துள்ள இவ்வழிகாட்டுதல்களை இரத்த வங்கிகள் பின்பற்ற வேண்டும்.[5]
ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் முக்கிய அறிகுறிகள்:[9]
- இரத்த தானம் அளிப்பவர் ஆரோக்கியமானவராக இருக்க வேண்டும். மேலும் பரவக்கூடிய நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடாது.
- 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் 65 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 50 கிலோ எடை கொண்டவராக இருக்க வேண்டும்.
- நாடித்துடிப்பு முறைகேடுகள் ஏதுமில்லாமல் நிமிடத்திற்கு 50 முதல் 100 வரை இருத்தல் வேண்டும்.
- ஈமோகுளோபின் எனப்படும் இரத்தச் சிவப்பணுக்கள் நிலை- குறைந்தபட்சம் 12.5 கிராம் / டெசிலிட்டர் அவசியமாகும்.
- இரத்த அழுத்தம் தாழ்நிலையில் 50-100 மி.மீட்டரும் உயர்நிலையில் 100-180 மி.மீட்டர் பாதரசம் அளவுக்கு இருக்க வேண்டும்.
- உடல் வெப்பநிலை சாதாரணமாக வாய்வழி வெப்பநிலை 37.5 பாகை செல்சியசுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- முன்னதாக இரத்த தானம் செய்யப்பட்டிருந்தால் கண்டிப்பாக 3 மாதங்கள் முடிந்திருக்க வேண்டும்.
சில நிபந்தனைகளின் கீழ் உள்ள நபர்கள் இரத்த தானம் செய்ய தகுதியற்றவர்களாகக் கருதப்படுகிறார்கள்:[9][10]
- எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர்கள்
- இதய நோய், உயர் இரத்த அழுத்தம், இரத்த அழுத்தம், புற்றுநோய், வலிப்பு, சிறுநீரக நோய்கள் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்.
- கடந்த 6 மாதங்களில் காது / உடல் துளையிடுதலுக்கு உட்பட்டவர்கள் அல்லது பச்சை குத்திக் கொண்டவர்கள்
- கடந்த 1 மாதத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள்.
- கடந்த 6 மாதங்களில் வெறிநாய்க் கடி அல்லது மஞ்சள் காமலை நோய்க்கு தடுப்பூசி பெற்றவர்கள்.
- கடந்த 24 மணி நேரத்தில் மது உட்கொண்டவர்கள்.
- கடந்த 1 மாதத்தில் பெரிய பல் சிகிச்சைகள் அல்லது பொது அறுவை சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டவர்கள்.
- கடந்த காலத்தில் வலிப்பு , காசநோய் அல்லது ஒவ்வாமை கோளாறுகள் இருந்தவர்கள்.
- ஆத்துமா போன்ற மூச்சு சிக்கல் உள்ளவர்கள்
- கர்ப்பிணி அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்.
- கடந்த 6 மாதங்களில் கருச்சிதைவு ஏற்பட்ட பெண்கள்.
ஒழுங்குமுறை வழிமுறைகள்
தொகுமருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940 இன் கீழ் மனித இரத்தம் மருந்து என்ற வரையறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் இரத்த வங்கி நடவடிக்கைகள் ஒழுங்குபடுத்தப்படுகின்றன. மேலும் இந்நடவடிக்கைகள் மருந்து கட்டுப்பாட்டு தலைமை அலுவலரிடம் உரிமத்தை சரியான நேரத்தில் புதுப்பிக்க வேண்டும். உரிமத்தில் வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கும் இணங்க வேண்டும். இந்திய இரத்த மாற்று சேவைகளில் பின்பற்றப்பட வேண்டிய தங்குமிடம், மனித சக்தி, உபகரணங்கள், பொருட்கள் மற்றும் வினையாக்கிகள், நல்ல உற்பத்தி நடைமுறைகள் மற்றும் செயல்முறை கட்டுப்பாடு ஆகியவற்றை இவ்விதிமுறைகள் குறிப்பிடுகின்றன.[11] மத்திய மற்றும் மாநில ஒழுங்குமுறை அமைப்புகளால் இரத்த வங்கிகளுக்கு இரட்டை உரிமம் வழங்குதல் 1993 ஆம் ஆண்டு கட்டாயமாக்கப்பட்டது. இதன்படி ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒரு புதுப்பித்தல் தேவைப்படுகிறது.[12] மருத்துவமனைகள் மற்றும் சுகாதார வழங்குநர்களுக்கான தேசிய அங்கீகார வாரியம் இந்நாட்டின் மருத்துவமனைகள் மற்றும் இரத்த வங்கிகளுக்கான முக்கிய அங்கீகார அமைப்பாக உள்ளது.[13][14]
எய்ட்சு பரவியதைத் தொடர்ந்து தேசிய எய்ட்சு கட்டுப்பாட்டு அமைப்பு 1992 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பல்வேறு பொதுநல வழக்குகளைத் தொடர்ந்து 1992 ஆம் ஆண்டு சனவரி மாதம் நடைபெற்ற பொதுநல வழக்கு எதிர் இந்திய ஒன்றியம் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி கூட்டாட்சி மட்டத்திலும் மாநில இரத்த மாற்று கவுன்சில்களிலும் தேசிய இரத்தமாற்றக் குழு நிறுவப்பட்டது. அனைத்து மாநிலங்களும் நாட்டிலுள்ள இரத்தமாற்ற சேவைகளின் நிலையை மறுபரிசீலனை செய்யவும், இரத்த வங்கிகளுக்கு வருடாந்திர கண்காணிப்பு வருகைகளை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டன.[15] மருந்துகளை ஒழுங்குபடுத்தும் பணியை ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்படைத்தாலும், தேசிய எய்ட்சு கட்டுப்பாட்டு அமைப்பும் தேசிய இரத்தமாற்ற மன்றமும் இரத்தமாற்ற மருந்து நடைமுறைக்கான வழிகாட்டுதல்களை உருவாக்கும் முக்கிய தொழில்நுட்ப அமைப்புகளாக செயல்படுகின்றன. 2018 ஆம் ஆண்டு தேசிய இரத்தமாற்ற மன்றத்தின் நிபுணர் பணிக்குழு இரத்த வங்கிகளுக்கான மனிதவளத் தேவைகள் குறித்த பரிந்துரைகளை முன்மொழிந்தது. மேலும் இது இரத்த வங்கிகளில் உள்ள குறைந்தபட்ச ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் தகுதிகளையும் கோடிட்டுக் காட்டியது.[16][17]
2002 ஆம் ஆண்டு இந்திய அரசு தேசிய இரத்தக் கொள்கையை வெளியிட்டது. பாதுகாப்பான இரத்தம் மற்றும் இரத்தக் கூறுகளுக்கான உறுதிப்பாடு மீண்டும் வலியுறுத்தப்பட்டது. நன்கொடையாளர் உந்துதல் மற்றும் மருத்துவர்களால் இரத்தத்தின் பொருத்தமான மருத்துவப் பயன்பாடு ஆகியவற்றைக் கோடிட்டுக் காட்டுவதைத் தவிர, இரத்தமாற்றச் சேவைகளை மேம்படுத்துவதற்கான போதுமான ஆதாரங்கள், தொழில்நுட்பம் மற்றும் பயிற்சி ஆகியவற்றைக் கிடைக்கச் செய்வதற்கான உத்திகளை இக்கொள்கை ஆவணப்படுத்துகிறது.[15] இரத்தமாற்ற மருத்துவத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளையும் எடுத்தது. இரத்தத்தின் விலை வெளிப்படைத்தன்மை மற்றும் விலையைக் கட்டுப்படுத்த அத்தியாவசிய மருந்துகளின் தேசியப் பட்டியலின் கீழ் இரத்தத்தைச் சேர்க்க பரிந்துரைகள் வைக்கப்பட்டன.[18] இரத்தமாற்ற அறிவியலின் முன்னேற்றங்கள் மற்றும் இரத்த வங்கி மேலாண்மை தொழில்நுட்பத்தில் புதிய நடைமுறைகள் ஆகியவற்றுடன் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தை அவ்வப்போது மதிப்பாய்வு செய்து திருத்தம் செய்ய தனித்தனியாக இரத்த தானங்களை நடத்தும் நிறுவனங்களின் கல்வியாளர்களைத் தூண்டியது.[12][19]
நிறுவனங்கள்
தொகுஇந்தியாவில் அரசு நிதியுதவி பெறும் அமைப்புகளும் தனியார் இரத்த தான அமைப்புகளும் உள்ளன. சில பெரிய நிறுவனங்கள் நாடு முழுவதும் பல பிராந்தியங்களில் செயல்படுகின்றன. மற்றவை பிராந்திய மற்றும் உள்ளூர் ஆதரவுடன் ஆங்காங்கே செயல்படுகின்றன. இரத்த தான முகாம்கள் நடத்துவதுடன், தன்னார்வ ரத்த தானம் மற்றும் பொது சுகாதாரம் குறித்த விழிப்புணர்வையும் இவர்கள் ஏற்படுத்துகிறார்கள். பெரும்பாலான நிறுவனங்கள் நிகழ்நேர இணையதளங்கள் அல்லது பதிவேடுகளை பராமரிக்கின்றன. நன்கொடையாளர்கள் தங்கள் விவரங்களை இங்கு உள்ளிடுகின்றனர். இரத்த தான இயக்கங்கள் நடத்தப்படும் போது இவர்களுக்குத் தகவல்கள் புதுப்பிக்கப்படுகின்றன. இதனால் இரத்த தானம் செய்பவர்கள் மற்றும் நிறுவனங்கள்/மருத்துவமனைகளுக்கு இடையே உள்ள பிணைப்பு எளிதாக்கப்படுகிறது.[20] இத்தகைய அமைப்புகளைத் தவிர, நாட்டில் உள்ள பெரிய மருத்துவமனைகள் தங்களுடைய சொந்த இரத்த வங்கிகளைக் கொண்டுள்ளன. அங்கு இரத்த தானம் அவர்கள் வசதிக்கேற்ப நடத்தப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு நிலவரப்படி நாட்டில் ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு 2.2 இரத்த வங்கிகள் இருந்தன.[21] 2016 ஆம் ஆண்டின் ஆய்வின்படி, நாடு முழுவதும் கணக்கெடுக்கப்பட்ட 2493 இரத்த வங்கிகளில் சுமார் 51% வங்கிகள் மேம்பட்ட வசதிகளைக் கொண்டிருந்தன.[22]
இரத்த தானம் செய்வதில் உள்ள சிக்கல்கள்
தொகுபெரிய மக்கள்தொகை இருந்தபோதிலும், நம் நாட்டில் உள்ள பல சுகாதார வசதிகளுக்கு தேவையான இரத்த அலகுகளுக்கான தேவை-விநியோக இடைவெளி நீடிக்கிறது. உலக சுகாதார அமைப்பின் 2012 அறிக்கையின்படி, ஆண்டுக்கு 12 மில்லியன் அலகுகள் இரத்தம் தேவைப்படும் நிலையில் 9 மில்லியன் இரத்த அலகுகள் மட்டுமே கிடைக்கின்றன.[23]
இரத்த வங்கிகள்
தொகு2009 மற்றும் 2013 ஆண்டுக்கு இடையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், இரத்தமாற்றச் சேவைகளின் தரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் இரத்த வங்கிகள் அதிக அளவு இணங்கவில்லை என்று முடிவு கிடைத்தது.[24] இரத்த வங்கிகளில் தரமற்ற மருத்துவ வசதிகள் மற்றும் நடைமுறைகள் காரணமாக எய்ட்சு போன்ற தொற்று நோய்கள் பரவும் வாய்ப்புகள் ஒப்பீட்டளவில் அதிகமாகவே தொடர்ந்தன. [25] தேசிய இரத்தக் கொள்கையானது ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24/7 நேரமும் இரத்தமேற்றும் சேவையைப் பெறுவதற்கான தேவையை கோடிட்டுக் காட்டுகிறது. ஆனால் அவற்றில் 80% எண்ணிக்கைக்கும் அதிகமான நிலையங்களில் இரத்த சேமிப்பு வசதி இல்லை. [26] இத்துறை பெரும்பாலும் ஒழுங்கமைக்கப்படாத காரணத்தாலும் தனித்தனியாக துண்டுபட்டு இருப்பதாலும் மருத்துவமனைகளுக்கிடையேயான தகவல் தொடர்பு இல்லாமல் போகிறது. அவற்றுக்கிடையே இரத்த அலகுகள் கிடைப்பது குறித்த நிகழ்நேர மையப்படுத்தப்பட்ட தரவுகள் இல்லை. மருத்துவமனைகளில் காணப்படும் இரத்த பற்றாக்குறையால் விபத்து போன்ற முக்கியமான நிகழ்வுகளால் ஏற்படும் இறப்புகளுக்கு இதுவே முக்கிய காரணியாகவும் உள்ளது.[27][28]
நன்கொடையாளர்கள்
தொகுபிராந்தியங்களில் நன்கொடையாளர்களை அணுகுவதில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் நாட்டின் சில பகுதிகளில் இரத்த கையிருப்பை வீணடிக்கவும் அதே நேரத்தில் வேறு சில பகுதிகளில் இரத்தப் பற்றாக்குறையை உருவாக்கவும் செய்தது.[29] தன்னார்வ இரத்த தானம் இரத்தத்தின் தேவையில் 70% ஆகும். மீதமுள்ளவை மாற்று நன்கொடையாளர்களிடமிருந்து கிடைக்கின்றன. அதேசமயம் உலகில் 62 நாடுகள் தன்னார்வ நன்கொடைகள் மூலம் தங்கள் இரத்த தேவைகளை பூர்த்தி செய்துகொள்கின்றன.[30][31] வெறும் 6% பெண்களே இரத்த தானம் செய்தனர் என்று 2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வொன்று தெரிவித்தது. பெரும்பாலும் உடலியல் பிரச்சினைகள் மற்றும் குறைந்த ஈமோமோகுளோபின் எண்ணிக்கை போன்றவை இதற்கான காரணமாக இருந்தன. இரத்த தானம் செய்வதில் தயக்கம் ஏற்படுவதற்கு இரத்த சோகை ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பெண்களில் 77.9% மற்றும் ஆண்களில் 37% வரை இந்த காரணத்திற்காக ஒத்திவைக்கப்படுகிறது. தன்னார்வ இரத்த தானத்தை அதிகரிப்பதற்காக உள்ள மற்ற தடைகள், தானச் செயல்முறைக்குப் பிறகு வலி, பலவீனம் மற்றும் கல்வியறிவின்மை ஆகியவையும் அடங்கும்.[32]
இதர சிக்கல்கள்
தொகுஇரத்த விநியோகத்தின் விகிதாசாரமற்ற விகிதம் மற்றும் அதிக வறுமை விகிதம் காரணமாக இந்தியாவில் கட்டாய இரத்தம் பிரித்தெடுக்கப்பட்ட ஆவணப்படுத்தப்பட்ட நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. 2008 ஆம் ஆண்டில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் நகருக்கு அருகில் நடந்த ஒரு நிகழ்வு தேசிய கவனத்தைப் பெற்றது.[33][34] கோவிட்-19 தொற்றுநோய் காலத்தின் போது பயணத்தின் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார மையங்களில் நோய் தாக்கும் அச்சம் காரணமாக இரத்ததானம் வெகுவாக குறைந்தது.[35][36][37]
இரத்த தானத்தை ஊக்குவிக்கும் முயற்சிகள்
தொகுஅக்டோபர் 1 தேசிய தன்னார்வ இரத்த தான தினமாக கொண்டாடப்படுகிறது.[38] இரத்த தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி மக்களுக்குக் கற்பிக்க இரத்த தான முகவர்கள் பெரும்பாலும் பட்டறைகளை ஏற்பாடு செய்கிறார்கள்.[39] இளைஞர்கள் அதிக அளவில் இருக்கும் கல்லூரி வளாகங்களில் மருத்துவமனைகள் மற்றும் தொண்டு அமைப்புகளால் இரத்த தான இயக்கங்கள் நடத்தப்படுகின்றன.[40][41] இரத்த தானம் செய்பவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு அவசரகால அல்லது விபத்துகளின் போது முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தொலைதூரப் பகுதிகளில் நன்கொடை அளிப்பதற்காக 32 நடமாடும் இரத்த வங்கிகள் 2010 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன.[42][43] 2016 ஆம் ஆண்டில், அரசாங்கம் இ-இராத்கோசு என்ற ஒரு முன்முயற்சியைத் தொடங்கியது. இது நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில், மாநிலத்தில் உள்ள அனைத்து இரத்த வங்கிகளையும் ஒரே வலைப்பின்னலில் ஒருங்கிணைத்து, இரத்த முகாம்கள் மற்றும் இரத்தத்தின் இருப்பு பற்றிய தகவல்களை வழங்கும் இணைய அடிப்படையிலான பொறிமுறையாகும்.[44] இ-இராத்கோசுக்கான இணைய முகப்பு செல்பேசி பயன்பாடு 2020 ஆம் ஆண்டு அணுகலை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்டது[45]
மேற்கோள்கள்
தொகு- ↑ Marwaha, Neelam (2020). "Voluntary blood donation in India: Achievements, expectations and challenges". Asian Journal of Transfusion Science 9 (Suppl 1): S1–S2. doi:10.4103/0973-6247.157011. பப்மெட்:26097329.
- ↑ "Lok Sabha unstarred question no 2282 to be answered on 29th July, 2016" (PDF). Ministry of Health and Family Welfare. Archived from the original (PDF) on 10 October 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-10-10.
- ↑ "No blood bank in 63 districts of India: Govt data". Financial Express. 2021-02-02.
- ↑ Bhasin, Rama (2004-03-27). "How many units of blood can a healthy person donate at a time?". The Times of India. http://timesofindia.indiatimes.com/home/sunday-times/How-many-units-of-blood-can-a-healthy-person-donate-at-a-time-How-long-does-it-take-to-replenish-the-lost-blood/articleshow/586312.cms.
- ↑ 5.0 5.1 5.2 "Voluntary blood donation program: an operational guideline" (PDF). NACO. Ministry of Health, Government of India.
- ↑ Mittal, Kshitija; Kaur, Ravneet (January–June 2014). "Dr. J. G. Jolly Emeritus Professor, Department of Transfusion Medicine, Post Graduate Institute of Medical Education and Research, Chandigarh". Asian Journal of Transfusion Science 8 (1): 1.
- ↑ Sinha, Kounteya (2007-11-28). "Professional blood donors may soon be jailed". The Times of India. http://timesofindia.indiatimes.com/india/Professional-blood-donors-may-soon-be-jailed/articleshow/2576804.cms.
- ↑ Abraham Thomas (2021-03-05). "Bar on transgender persons, others from donating blood: SC seeks govt's response". Hindustan Times.
- ↑ 9.0 9.1 "Donor Guidelines". www.indianbloodbank.com. Archived from the original on 2016-11-20. பார்க்கப்பட்ட நாள் 2016-12-10.
- ↑ ச.மோகனப்பிரியா. "ரத்த தானம்... அவசியம் பின்பற்றவேண்டிய வழிமுறைகள்! #WorldBloodDonorDay". https://www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2022-01-24.
{{cite web}}
: External link in
(help)|website=
- ↑ Choudhury, Nabajyoti; Desai, Priti (June 2012). "Blood bank regulations in India". Clinics in Laboratory Medicine 32 (2): 293–299. doi:10.1016/j.cll.2012.04.002. பப்மெட்:22727006.
- ↑ 12.0 12.1 "A review of legal, regulatory, and policy aspects of blood transfusion services in India: Issues, challenges, and opportunities". Asian Journal of Transfusion Science 15 (2): 204-211. 2021. doi:10.4103/ajts.AJTS_65_20. https://www.ajts.org/article.asp?issn=0973-6247;year=2021;volume=15;issue=2;spage=204;epage=211;aulast=Mammen.
- ↑ Gupta, Anshu; Gupta, Chhavi (2016). "Role of National Accreditation Board of Hospitals and Healthcare Providers (NABH) core indicators monitoring in quality and safety of blood transfusion". Asian Journal of Transfusion Science 10 (1): 37-41. doi:10.4103/0973-6247.175394. பப்மெட்:27011668. பப்மெட் சென்ட்ரல்:4782491. https://www.ajts.org/article.asp?issn=0973-6247;year=2016;volume=10;issue=1;spage=37;epage=41;aulast=Gupta.
- ↑ Lakshmipriya Nair (2015-08-10). "There is an immediate need to improve services at blood banks". The Financial Express.
- ↑ 15.0 15.1 Chandrashekar, Shivaram; Kantharaj, Ambuja (2014). "Legal and ethical issues in safe blood transfusion". Indian Journal of Anaesthesia 58 (5): 558–564. doi:10.4103/0019-5049.144654. பப்மெட்:25535417. பப்மெட் சென்ட்ரல்:4260301. http://www.ijaweb.org/article.asp?issn=0019-5049;year=2014;volume=58;issue=5;spage=558;epage=564;aulast=Chandrashekar.
- ↑ "Inviting suggestions/comments on the recommendations of Expert Working Group constituted by the NBTC on 'review and recommendations of manpower norms for blood banks'" (PDF). CDSCO. 2019-01-10.
- ↑ Arun Sreenivasan (2019-01-15). "Health Ministry to amend D&C Rules to ensure adequate manpower in all licensed blood banks". Pharmabiz.
- ↑ "Access to safe blood in low-income and middle-income countries: lessons from India". BMJ Global Health (2). 2017. doi:10.1136/bmjgh-2016-000167. பப்மெட்:30206488. பப்மெட் சென்ட்ரல்:5584485. https://gh.bmj.com/content/2/2/bmjgh-2016-000167.
- ↑ Choudhury, Nabajyoti (2011). "Need to change present regulatory framework for blood banks in India". Asian Journal of Transfusion Science 5 (1): 1-2. doi:10.4103/0973-6247.75962.
- ↑ "National Aids Control Organization (NACO) observe "World Blood Donors Day"". Ministry of Health and Family Welfare, GoI. 2015-06-14.
- ↑ "Assessment of Blood Banks in India - 2016" (PDF). NACO. p. 15. பார்க்கப்பட்ட நாள் 2021-11-16.
- ↑ Asirvatham ES, Mammen JJ, Lakshman J, et al. (2021-01-24). "Assessment of Performance of Blood Banks in India: A National Level Cross Sectional Study". Indian Journal of Hematology and Blood Transfusion. p. 640–647. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/s12288-021-01399-9. PMC 8523628.
- ↑ "India facing a blood shortage of 3 million units". The Times of India இம் மூலத்தில் இருந்து 2015-08-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150822193538/http://timesofindia.indiatimes.com/life-style/health-fitness/health-news/India-facing-a-blood-shortage-of-3-million-units/articleshow/36492006.cms.
- ↑ Agarwal, RK; Dhanya, R; Parmar, LG; Vaish, A; Sedai, A; Periyavan, S (2015). "A study of the noncompliance of blood banks on safety and quality parameters in blood donation camps in Bengaluru". Asian Journal of Transfusion Science 9 (1): 23–28. doi:10.4103/0973-6247.150942. பப்மெட்:25722568.
- ↑ Debroy, Sumitra (2019-06-11). "Blood transfusions infected 1,342 with HIV in 2018-19, says NACO". The Times of India.
- ↑ Bhatia, V; Raghuwanshi, B; Sahoo, J (2016). "Current status of blood banks in India". Glob J Transfus Med (1): 72-74. doi:10.4103/2455-8893.189847. https://www.gjtmonline.com/article.asp?issn=2468-8398;year=2016;volume=1;issue=2;spage=72;epage=74;aulast=Bhatia.
- ↑ Gupta, A (Mar-Apr 2000). "The status of blood banking in India". Health Millions 26 (2): 35-38. பப்மெட்:12349668.
- ↑ Suryaprabha Sadasivan (2019-06-14). "Blood transfusion service in India continues to be unorganized and fragmented". The Economic Times.
- ↑ Grocchetti, Silvio (2016-09-03). "Acute shortage: Why India needs 35 tankers of blood". Hindustan Times. http://www.hindustantimes.com/health-and-fitness/acute-shortage-why-india-needs-35-tankers-of-blood/story-N2yE8lIKOY1D15ZywImH1J.html.
- ↑ Prasad, R. (2016-06-14). "Voluntary donation, safe blood". The Hindu. http://www.thehindu.com/opinion/op-ed/Voluntary-donation-safe-blood/article14420486.ece.
- ↑ "World Blood Donor Day 2016: Blood connects us all". World Health Organization. Archived from the original on 12 June 2016.
- ↑ "ரத்த தானத்துக்கு எதிரான மூடநம்பிக்கைகள் என்னென்ன?". BBC News தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2022-01-24.
- ↑ "Gang of blood suppliers unearthed in Gorakhpur". The Times of India. 2008-03-16. http://timesofindia.indiatimes.com/city/lucknow/Gang-of-blood-suppliers-unearthed-in-Gorakhpur/articleshow/2870623.cms.
- ↑ Carney, Scott (2011-06-06). "Book Excerpt: Exposing India's Blood Farmers" (in en-US). WIRED. https://www.wired.com/2011/06/red-market-excerpt/.
- ↑ Dhiman, Y; Patidar, GK; Arora, S (2020-05-03). "Covid-19 pandemic- response to challenges by blood transfusion services in India: a review report". Vox Sanguinis 15 (4): 365-373. doi:10.1111/voxs.12563. https://onlinelibrary.wiley.com/doi/10.1111/voxs.12563.
- ↑ Arcot, PJ; Kumar, K; Mukhopadhyay, T; Subramanian, A (October 2020). "Potential challenges faced by blood bank services during COVID-19 pandemic and their mitigative measures: The Indian scenario". Transfusion and Apheresis Science 59 (5). doi:10.1016/j.transci.2020.102877.
- ↑ "World Blood Donor Day 2021: Why there is a dip in blood donation due to Covid-19". Financial Express. 2021-06-14.
- ↑ "National Voluntary Blood Donation Day". www.indianredcross.org.
- ↑ "Over 300 join in blood donation awareness program in Delhi". The Times of India இம் மூலத்தில் இருந்து 2016-09-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160927173315/http://timesofindia.indiatimes.com/city/delhi/Over-300-join-in-blood-donation-awareness-programme-in-Delhi/articleshow/52749509.cms.
- ↑ "Maharaja's College students hold blood donation camp". The Hindu. 2016-10-06. http://www.thehindu.com/news/national/karnataka/Maharaja%E2%80%99s-College-students-hold-blood-donation-camp/article15471681.ece.
- ↑ Pinto, Stanley (2014-12-01). "HDFC Bank's 'Blood Donation Drive' on December 5". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/mangaluru/HDFC-Banks-Blood-Donation-Drive-on-December-5/articleshow/45339330.cms.
- ↑ "Access to Safe blood". NACO.
- ↑ First report of the impact on voluntary blood donation by the blood mobile from India. 10. Jan-Jun 2016. p. 59–62. doi:10.4103/0973-6247.164274. பப்மெட்:27011672. பப்மெட் சென்ட்ரல்:4782496. https://www.ajts.org/article.asp?issn=0973-6247;year=2016;volume=10;issue=1;spage=59;epage=62;aulast=Sachdev.
- ↑ "Now, a website for blood banks; 117 banks listed". The Economic Times. 2017-08-12. https://economictimes.indiatimes.com/industry/healthcare/biotech/healthcare/now-a-website-for-blood-banks-117-banks-listed/articleshow/60031902.cms.
- ↑ "Harsh Vardhan launches mobile app to enable people have easy access to blood". The Indian Express. 2020-06-25.
மேலும் வாசிக்க
தொகு- Marwaha N.,Transfusion medicine in India: Expanding horizons, Asian J Transfus Sci 2014;8, Suppl S1:3-5.