இந்தியாவில் ந,ந,ஈ,தி வரலாறு

இந்தியாவில் நங்கை, நம்பி, ஈரர், திருனர் வரலாறு (LGBT history in India )பல்வேறு காலங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. சமீப காலங்களில் நங்கை, நம்பி, ஈரர், திருனர் உரிமைகளை ஊக்குவித்தல் ஆகியவை இந்தியாவில் இவர்கள் தொடர்பான பெரிய அளவிலான ஆராய்ச்சிகளையும் கருத்துப் பரிமாற்றங்களையும் வழங்க வழிசெய்துள்ளது.

கஜுராஹோ கோவில்களில் இரண்டு ஆண்கள் சிற்றின்ப சிற்பங்கள். (மையம்)
கங்கைகொண்டசோழபுரத்தைச் சேர்ந்த சிவன் மற்றும் பார்வதியின் இருபாலிய வடிவமான அர்த்தநாரீஸ்வரர்.

பண்டைய இந்தியா

தொகு

பண்டைய இந்திய நூல்கள் நவீன ந,ந,ஈ,தி விளைவுகளுடன் தொடர்புடையவை. இந்திய பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளை வடிவமைப்பதில் மதம் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. ஓரினச்சேர்க்கையின் அறநெறி மீதான தடைகள் இந்து மதத்தை மையமாகக் கொண்ட மத நூல்களில் வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லை என்றாலும், இந்தியாவின் மிகப்பெரிய மதமான இந்து மதம் இதில் பல்வேறு நிலைப்பாடுகளை எடுத்துள்ளது, இந்த நூல்களில் ஓரினச்சேர்க்கை கதாபாத்திரங்கள் மற்றும் கருப்பொருள்கள் பற்றி நடுநிலையாகவும் , முரண்பாடான கருத்துக்களும் கூறப்பட்டுள்ளன. வாத்சாயனர் எழுதிய காமசூத்திரம் தற்பால்சேர்க்கை நடத்தை பற்றிய ஒரு முழுமையான அத்தியாயத்தை கூறுகிறது.

அர்த்தசாஸ்திரம்

தொகு

கி.மு 2இல் எழுதப்பட்ட அர்தசாஸ்திரம் எனும் ஆய்வுக் கட்டுரையில் ஆண் அல்லது பெண்ணுடன் கல்வியில் ஈடுபடுதல் என்பது சிறிய அளவிலான அபராதத்துடன் தண்டிக்கப்பட்டது. ஓரினச்சேர்க்கை அனுமதிக்கப்படவில்லை என்றாலும், இது ஒரு மிகச்சிறிய குற்றமாக கருதப்பட்டது, மேலும் வேற்றுப் பால் கவர்ச்சியின் பல வகையான பாலின உடலுறவு மிகவும் கடுமையாக தண்டிக்கப்பட்டது.[1]

இடைக்காலம்

தொகு

இடைக்கால இந்து சமுதாயத்தில் ஓரினச்சேர்க்கை மற்றும் ஆண்பாற்புணர்ச்சி அரிதாக இருந்தது அல்-பிருனி இந்துக்கள் அதை பெரிதும் ஏற்கவில்லை என்று கூறினார். இசுலாமியச் சட்ட முறைமை ஓரினச் சேர்க்கையினை தடை செய்திருந்தது.[2][3]

முகலாய பேரரசு

தொகு

முகலாயர்களின் உன்னத வர்க்கம் ஓரினச்சேர்க்கை மற்றும் ஆண்பாற்புணர்ச்சி இரண்டிலும் ஈடுபட்டிருந்தனர். மத்திய ஆசியாவிலிருந்து பரவிய பிந்தையவர்கள் இதனை "தூய அன்பு" என்று கருதினார்கள் . இருப்பினும், இந்தியாவில், இது பரவலாக இல்லை. புர்ஹான்பூரின் ஆளுநர் அவருடன் நெருக்கமாக இருக்க முயன்ற ஒரு ஆண் ஊழியரால் கொல்லப்பட்டார். அலி குலி கான் ஆண்களுடன் ஓரினச்சேர்க்கை உறவு வைத்திருப்பதாக பதிவு செய்யப்பட்டது.[4]

சர்மத் கசானியின் வாழ்க்கை வரலாறு, அவரது ஆலயத்தின் பராமரிப்பாளர்களால் வெளியிடப்பட்டது, அவர் அபாய் சந்த் என்ற இந்துப் பையனிடம் தற்பால் சேர்க்கையில் இருந்ததாகவும், அந்தப் பையனின் தந்தை இறுதியில் அவர்களை ஒன்றாக இருக்க அனுமதித்தாகவும் அதில் கூறப்ட்டுள்ளது.[5]

இடைக்காலத்தின் பிற்பகுதியில் உருது கவிதை "சாப்டி" என்ற வார்த்தையை ஒரே பாலின மக்களிடையே பாலினத்தைக் குறிக்கப் பயன்படுத்தியது. "அமரத் பரஸ்ட்" என்பது இளம் ஆண்களுக்கு விருப்பம் உள்ளவர்களைக் குறிக்கிறது.[6]

வங்காளத்தில் வாழ்ந்த முகலாயர்களிடையே ஆண் ஓரினச்சேர்க்கை இருந்தது பற்றி டச்சு பயணி ஜோஹன் ஸ்டாவோரினஸ் கூறினார், மேலும் அவர்கள் விலங்குகளுடனான பாலுறவு கொண்டிருந்ததாகவும் குறிப்பாக ஆட்டுடன் பாலுறவு கொண்டிருந்ததாகவும் கூறியுள்ளார்.[7][8]

முகலாயப் பேரரசின் ஃபதாவா-இ-ஆலம்கிரி ஓரினச்சேர்க்கைக்கு பொதுவான தண்டனைகளை வழங்கினார். இதில் ஒரு அடிமைக்கு 50 சவுக்கடி, சமய நம்பிஉக்கை அற்றவர்களுக்கு 100 சவுக்கடியும் அல்லது கல்லால் அடித்து கொல்லுதல் ஆகியன தண்டனைகளாக வழங்கப்பட்டன [9][10][11][12][13][14][15]

இந்திய குடியரசு (c. 1947 CE - தற்போது)

தொகு

1977 இல் சகுந்தலா தேவி இந்தியாவில் ஓரினச்சேர்க்கை பற்றிய ஆய்வினை வெளியிட்டார்.[16][17][18] பிரிவு 377 இன் கீழ் குற்றவாளிகள் அரிதாகவே இருந்தனர். [சான்று தேவை] எயிட்சு தடுப்பு ஆர்வலர்கள் மற்றும் பாலியல் தொழிலாளர்கள், ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள் மற்றும் பிற ந,ந,ஈ,தி குழுக்களை துன்புறுத்துவதற்கு இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. [19] இந்த குழு 2006 இல் நான்கு பேரையும் 2001 இல் மேலும் நான்கு பேரையும் லக்னோவில் கைது செய்ததை ஆவணப்படுத்துகிறது  .

சான்றுகள்

தொகு
  1. Vanita & Kidwai 2001
  2. Eraly, Abraham (Apr 1, 2015). The Age of Wrath: A History of the Delhi Sultanate. Penguin UK. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789351186588. பார்க்கப்பட்ட நாள் Aug 15, 2019.
  3. Vanita, Ruth (Oct 20, 2008). Same-Sex Love in India. Penguin Books Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788184759693. பார்க்கப்பட்ட நாள் Aug 15, 2019.
  4. Eraly, Abraham (Jul 17, 2007). The Mughal World. Penguin Books Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788184753158. பார்க்கப்பட்ட நாள் Aug 15, 2019.
  5. Vanita, Ruth (Oct 20, 2008). Same-Sex Love in India. Penguin Books Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788184759693. பார்க்கப்பட்ட நாள் Aug 15, 2019.
  6. Sondy, Amanullah De (Nov 7, 2013). The Crisis of Islamic Masculinities. A&C Black. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781780936932. பார்க்கப்பட்ட நாள் Aug 15, 2019.
  7. [Johan Stavorinus, Voyages to the East Indies, G G. Robinson (London), 1798, pp. 455-56. Cited in Grcenberg, p. 180.]
  8. Greenberg, David F. (Oct 29, 2008). The Construction of Homosexuality. University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780226219813. பார்க்கப்பட்ட நாள் Aug 15, 2019.
  9. Baillier, Neil B. E. (1875). "A digest of the Moohummudan law". pp. 1–3. பார்க்கப்பட்ட நாள் May 10, 2021.
  10. "How did the Mughals view homosexuality?". History Stack Exchange.
  11. Khalid, Haroon (17 June 2016). "From Bulleh Shah and Shah Hussain to Amir Khusro, same-sex references abound in Islamic poetry". Scroll.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 7 September 2018.
  12. "Sarmad Kashani Tomb in Jami Masjid, New Delhi, India - Archive - Diarna.org". archive.diarna.org.
  13. V. N. Datta (2012-11-27), Maulana Abul Kalam Azad and Sarman, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788129126627, Walderman Hansen doubts whether sensual passions played any part in their love [sic]; puri doubts about their homosexual relationship
  14. "Of Genizahs, Sufi Jewish Saints, and Forgotten Corners of History - UW Stroum Center for Jewish Studies". 1 March 2016.
  15. Kugle, Scott A (1 Sep 2011). Sufis and Saints' Bodies: Mysticism, Corporeality, and Sacred Power in Islam. Univ of North Carolina Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780807872772. பார்க்கப்பட்ட நாள் 20 September 2017.
  16. Subir K Kole (2007-07-11). "Globalizing queer? AIDS, homophobia and the politics of sexual identity in India". Globalization and Health 3: 8. doi:10.1186/1744-8603-3-8. பப்மெட்:17623106. : "The first academic book on Indian homosexuals appeared in 1977 (The World of Homosexuals) written by Shakuntala Devi, the mathematics wizkid who was internationally known as the human computer. This book treated homosexuality in a positive light and reviewed socio-cultural and legal situation of homosexuality in India and contrasted that with the then gay liberation movement in USA."
  17. Shakuntala Devi. The World of Homosexuals. Vikas Publishing House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780706904789.
  18. Jeffrey S. Siker. Homosexuality and Religion. Greenwood Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780313330889.: "In her 1977 book, mathematician Shakuntala Devi interviewed..."
  19. "India: Repeal Colonial-Era Sodomy Law". Human Rights Watch. January 11, 2006. Archived from the original on April 13, 2008. பார்க்கப்பட்ட நாள் March 3, 2020.