இந்தியாவில் முடி நறுக்குதல் சம்பவங்கள்
ஜூன் 2017 முதல் இந்தியாவில் விவரிக்கப்படாத முடி நறுக்குதல் (Hair chopping incidents in India) அல்லது சடை நறுக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஜூன் 23, 2017 அன்று முதல் இது போல பரவலாகப் புகார்கள் பெறப்பட்டுள்ளன.: ஏபிபி நியூஸ் ராஜஸ்தானின் பிகானேரைச் சேர்ந்த ஒரு பெண் தூங்கும்போது அவரது தலைமுடியை ஒரு 'சூனியக்காரி' வெட்டினார் என செய்தி வெளியிட்டது. இந்தியா முழுவதும், குறிப்பாக வட மாநிலங்களான டெல்லி, பீகார், ஹரியானா, உத்தரகண்ட், உத்தரபிரதேசம் மற்றும் காஷ்மீர் போன்ற இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளன.
இந்தியா
தொகுராஜஸ்தான்
தொகுஜூன் 23, 2017 அன்று ஏபிபி நியூஸ் ராஜஸ்தான் பிகானேரைச் சேர்ந்த ஒரு பெண் தூங்கும்போது அவரது தலைமுடியை ஒரு 'சூனியக்காரி' வெட்டினார் என்று கூறியது. [1] கூடுதல் முடி நறுக்குதல் சம்பவங்கள், மற்றும் தொற்றுநோய் பற்றிய அச்சங்கள் அதிகரித்தது குறிப்பாக ராஜஸ்தானில் இது அதிகமாக இருந்தது. இது போன்ற சம்பவங்கள் இரவில் மட்டுமல்லாது பகலிலும் நடந்தது.
ஜூன் 23 நிகழ்வுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு, இதே போன்ற ஒரு சம்பவம் ஜோத்பூரில் உள்ள பிபாட் சிட்டியில் பதிவாகியுள்ளது, அங்கு காலையில் எழுந்தபோது ஒரு பெண்ணின் தலைமுடி வெட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது. [2] இந்த செய்தியை முதலில் அறிவித்தது தைனிக் பாஸ்கர் . காணாமல் போன முடியுடன், சிறுமி தனது உடலின் மற்ற பகுதிகளில் காயங்களைக் காட்டினார். [எந்த பாகங்கள்? ] காவல் துறை அதிகாரிகள் விசாரித்தபோது, சிறுமியின் தலைமுடி வள்ளேட்டினால் வெட்டப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர். எனினும், அவர்களால் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஜூலை 6, 2017 அன்று ஹிந்துஸ்தான் டைம்ஸ், ராஜஸ்தானைச் சேர்ந்த 13 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகள் இருவர் இதே நிகழ்வினால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிவித்தது.
ஜூலை 8, 2017 அன்று பிபிசி பிகானேர், நாகூர், ஜெய்சால்மர், பார்மர், ஜோத்பூர் மற்றும் ஜாலோர் உள்ளிட்ட பல மேற்கு நகராட்சிகள் இந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது. [3]
உத்தரப் பிரதேசம்
தொகு2017 ஆகஸ்ட் தொடக்கத்தில், அலிகார் மற்றும் மொரதாபாத்தில் இருந்து இரண்டு வழக்குகள் இதுபோல் பதிவாகியுள்ளன. புலந்தசகரில் நான்கு வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால் பின்னர் உத்தரபிரதேச (உபி) காவல்துறையும் தில்லி காவல்துறையும் இந்த சம்பவங்கள் வெறும் வதந்திகள் என்று தெளிவுபடுத்தின. [4] தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி சேனலின் படி, வட இந்தியா முழுவதும் இதுபோல் சுமார் முப்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. [5]
ஆகஸ்ட் 2 ஆம் தேதி, ஆக்ராவில் 62 வயது மூதாட்டி பெண் குழந்தைகளின் ஜடையை வெட்டிய "சூனியக்காரி" என்று குற்றம் சாட்டப்பட்ட அவரை கிராம மக்கள் தாக்கியதால் கொல்லப்பட்டார். என்டிடிவி இந்தியா இந்த செய்தியை ஆகஸ்ட் 3, 2017 அன்று வெளியிட்டது. [6] இறந்த அந்த முதியவரின் அண்டை வீட்டார் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.
தில்லி
தொகுஆகஸ்ட் 1, 2017 அன்று, கங்கன் ஹெரியிலிருந்து ஒருவருக்கொருவர் முன்பின் தெரியாத 50 முதல் 60 வயதுக்குட்பட்ட மூன்று பெண்கள் ஒரே நாளில் முடி நறுக்கும் சம்பவங்களால் பாதிக்கப்பட்டதாக புகார் தெரிவித்தனர். பெண்கள் யாரும் தங்கள் குற்றவாளியைப் பார்க்கவில்லை என்றும், அவர்கள் மயங்கி விழுந்து பின்னர் எழுந்தபோது, அவர்களின் தலைமுடி வெட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். [7]
அரியானா
தொகுஅரியானா மாநிலத்தில் பதினைந்து முடிவெட்டும் வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வகையான சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் தாங்கள் "கடவுளின் பிள்ளைகள்", "மந்திரவாதிகள்" மற்றும் "பூனை போன்ற உயிரினங்களை" பார்த்ததாகக் கூறினர். இந்தனை காவல்துறை அதிகாரிகள் ஏற்க மறுத்தனர்.[சான்று தேவை]
சான்றுகள்
தொகு- ↑ "रात में लोगों की बाल काटने वाली 'चुड़ैल' का वायरल सच" (in en-US). ABP News. 2017-06-23 இம் மூலத்தில் இருந்து 2017-08-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170821122219/http://abpnews.abplive.in/videos/viral-sach-is-there-a-witch-who-chops-off-people-s-hair-while-they-are-asleep-642035.
- ↑ "रात में बाल काटने की अफवाह या सच्चाई, पुलिस के लिए पहेली" (in hi). dainikbhaskar. 2017-06-20. https://m.bhaskar.com/news/RAJ-JOD-HMU-MAT-latest-jodhpur-news-043016-2841137-NOR.html.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ राठौड़, सुमेर सिंह (2017-07-08). "अफ़वाहों से परेशान हैं राजस्थान की महिलाएं" (in en-GB). BBC हिंदी. http://www.bbc.com/hindi/india-40542956.
- ↑ "Fresh cases of mysterious hair-chopping surface in Aligarh, Moradabad and Bulandshahr" (in en-US). The Indian Express. 2017-08-05. http://indianexpress.com/article/india/fresh-cases-of-mysterious-hair-chopping-surface-in-aligarh-moradabad-and-bulandshahr-uttar-pradesh-delhi-4783182/.
- ↑ "Fresh cases of mysterious hair-chopping surface in Aligarh, Moradabad and Bulandshahr" (in en-US). The Indian Express. 2017-08-05. http://indianexpress.com/article/india/fresh-cases-of-mysterious-hair-chopping-surface-in-aligarh-moradabad-and-bulandshahr-uttar-pradesh-delhi-4783182/.
- ↑ "Woman Branded Witch, Killed In UP Amid 'Braid Cutting' Scare". m.ndtv.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-08-24.
- ↑ "A mysterious "braid-chopper" is cutting off women’s hair in northern India" (in en-US). Quartz. https://qz.com/1046374/a-mysterious-braid-chopper-is-cutting-off-womens-hair-in-northern-india/.