இந்தியா டுடேயின் 60 மகத்தான இந்தியர்கள்
இந்திய நாடு விடுதலை பெற்று 60 ஆண்டுகள் நிறைவானதை முன்னிட்டு 2008 ஆம் ஆண்டின் ஏப்ரல் 23 தேதியிட்ட இந்தியா டுடே இதழ் ஒரு சிறப்பிதழாக வெளிவந்தது. அந்த இதழில் இந்திய நாட்டின் 60 சிறப்புமிக்கவர்களைக் குறித்தக் கட்டுரைகள் வெளிவந்தன.[1] இந்தச் சிறப்பிதழுக்காக இணையம், குறுஞ்செய்தி ஊடகங்கள் வழியே எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் பெறப்பட்ட 18928 வாக்குகளில் பகத் சிங், சுபாஷ் சந்திர போஸ், மகாத்மா காந்தி ஆகியோருக்கு முறையே 37%, 27%%, 13% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆயுதப் போராட்டத்தை பகத் சிங், சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் தெரிவு செய்திருந்தனர் என்பதும், மகாத்மா காந்தி அறப்போராட்டத்தை முன்னெடுத்தார் என்பதும் இங்கு குறிக்கத்தக்கது. மேலும், 60 பேரில் பத்து பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.[2]
- பி. ஆர். அம்பேத்கர்
- கா. ந. அண்ணாதுரை
- சுபாஷ் சந்திர போஸ்
- இந்திரா காந்தி
- மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
- ராம் மனோகர் லோகியா
- சரோஜினி நாயுடு
- இ. எம். எஸ். நம்பூதிரிபாட்
- ஜவகர்லால் நேரு
- ஜெய பிரகாஷ் நாராயண்
- சர்தார் வல்லபாய் பட்டேல்
- ராஜேந்திர பிரசாத்
- சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
- பி. சி. ராய்
- பகத் சிங்
- பால கங்காதர திலகர்
- அடல் பிகாரி வாஜ்பாயி
- திருபாய் அம்பானி
- பி. சி. மஹால்லோபிஸ்
- ஜே. ஆர். டி. டாடா
- அமார்த்ய சென்
- ஹோமி பாபா
- எஸ். எஸ். பட்னாகர்
- ஜே. சி. போஸ்
- ஏ. பி. ஜே. அப்துல் கலாம்
- சி. வி. இராமன்
- ராஜா ராமண்ணா
- இராமானுசன்
- மொன்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன்
- விக்ரம் சாராபாய்
- பாபா ஆம்தே
- ராம்நாத் கோயங்கா
- வர்கீஸ் குரியன்
- எஸ். எச். எஃப். ஜெ. மானேக்சா
- இராசாராம் மோகன் ராய்
- அன்னை தெரேசா
- விஸ்வநாதன் ஆனந்த்
- தியான் சந்த்
- பிரகாஷ் பதுகோனே
- மில்கா சிங்
- சச்சின் டெண்டுல்கர்
- பேகம் அக்தர்
- முல்க்ராஜ் ஆனந்த்
- ருக்மிணி தேவி அருண்டேல்
- பீம்சென் ஜோஷி
- ராஜ் கபூர்
- பிஸ்மில்லா கான்
- லதா மங்கேஷ்கர்
- ஜூபின் மேத்தா
- சூர்யகாந்த் திரிபாதி நிராலா
- ஆர். கே. நாராயண்
- தண்டிராஜ் கோவிந்த் பால்கே
- முன்ஷி பிரேம்சந்த்
- சத்யஜித் ரே
- பிமல் ராய்
- ரவி ஷங்கர்
- அம்ரிதா ஷெர்கில்
- ரவீந்திரநாத் தாகூர்
- ராஜா ரவி வர்மா
- லக்மி விஸ்வநாதன்