இந்திரஜித் குமாரசுவாமி

இந்திரஜித் குமாரசுவாமி (Indrajit Coomaraswamy, பிறப்பு: ஏப்ரல் 3, 1950) இலங்கைத் தமிழ் பொருளியலாளர் ஆவார். இவர் இலங்கை மத்திய வங்கியின் 14-வது ஆளுநராக 2016 முதல் 2019 வரை பணியாற்றினார்.[2] இவர் பொதுநலவாய தலைமைச் செயலக பொருளாதார விவகாரங்களுக்கான முன்னாள் பணிப்பாளராகப் பணியாற்றியவர்.

இந்திரஜித் குமாரசுவாமி
Indrajit Coomaraswamy
இலங்கை மத்திய வங்கி ஆளுநர்
பதவியில்
2 சூலை 2016 – 20 திசம்பர் 2019
முன்னையவர்அர்ஜுனா மகேந்திரன்
பின்னவர்டபிள்யூ. டி. லக்சுமன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 ஏப்ரல் 1950 (1950-04-03) (அகவை 74)
கொழும்பு, இலங்கை
துணைவர்தாரா[1]
உறவுகள்செல்லப்பா குமாரசுவாமி, ராதிகா குமாரசுவாமி
பிள்ளைகள்இம்ரன், அர்ஜுன்
பெற்றோர்ராஜேந்திரா குமாரசுவாமி, விஜயமணி
தொழில்பொருளியலாளர்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

இந்திரஜித் 1950 ஏப்ரல் 3 இல் கொழும்பு நகரில்,[3][4] ராஜேந்திரா குமாரசுவாமி, விஜயமணி ஆகியோருக்குப் பிறந்தார்.[5][6][7] ராதிகா குமாரசுவாமி இவருடன் உடன்பிறந்தவர்.[5][6] இவரது தந்தை வழி பேரனார் செல்லப்பா குமாரசுவாமி மேலவை உறுப்பினராக இருந்தவர். தாய்வழிப் பேரனார் எஸ். கே. விஜயரத்தினம் நீர்கொழும்பு நகரசபைத் தலைவராக இருந்தவர். விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியை நிறுவியவர்.[5][7][8]

கொழும்பு றோயல் கல்லூரி, இங்கிலாந்து ஹரோ பள்ளி ஆகியவற்றில் கல்வி கற்று பின்னர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டம் பெற்றார். பின்னர் இங்கிலாந்து சசெக்சு பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றார். 1973 முதல்; 1989 வரை இலங்கை மத்திய வங்கியில் பணியாற்றினார். 1990 முதல் 2008 வரை பொதுநலவாய தலைமைச் செயலத்தில் பொருளாதாரப் பிரிவின் பணிப்பாளராகவும், பொதுச் செயலாளர் பிரிவில் துணைப் பணிப்பாளராகவும் பணியாற்றினார்.

துடுப்பாட்டம்

தொகு

1971, 1972 களில் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழக துடுப்பாட்ட அணியில் சேர்ந்து முதல்-தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார்.[9] அத்துடன் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் ரக்பி அணியிலும் விளையாடினார்.[1] 1974 ஆசியாத் போட்டிகளில் இலங்கை ரக்பி அணிக்குத் தலைமை தாங்கினார்.[1] கொழும்பு தமிழ் யூனியன் கழகத்திற்காகவும் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார்.[8][10][11]

குடும்பம்

தொகு

குமாரசுவாமி தாரா டி பொன்சேகா என்பவரைத் திருமணம் புரிந்தார்.[11] இவர்களுக்கு இம்ரன், அர்ஜுன் என இரு பிள்ளைகள் உள்ளனர்.[11]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "The man who led Sri Lanka to its rugby glory". சண்டே டைம்சு. 5 செப்டம்பர் 2004. பார்க்கப்பட்ட நாள் 2 சூலை 2016. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "Dr. Indrajit Coomaraswamy new Central Bank Governor". டெய்லி நியூஸ். 2 சூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 2 சூலை 2016.
  3. "Indrajit Coomaraswamy". ESPNcricinfo.
  4. "Indrajit Coomaraswamy". The Cricketer. Archived from the original on 2016-08-17. பார்க்கப்பட்ட நாள் 2016-07-04.
  5. 5.0 5.1 5.2 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon (PDF). p. 43.
  6. 6.0 6.1 Weerakoon, Bradman (31 சூலை 2005). "Remembering Raju Coomaraswamy". தி ஐலண்டு (இலங்கை). http://www.island.lk/2005/07/31/features12.html. 
  7. 7.0 7.1 Balachandran, P. K. (2 சூலை 2016). "Coomaraswamy is compromise choice for Lankan Central Bank Governorship". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. http://www.newindianexpress.com/world/Coomaraswamy-is-compromise-choice-for-Lankan-Central-Bank-Governorship/2016/07/02/article3510551.ece1. 
  8. 8.0 8.1 Ladduwahetty, Ravi (13 டிசம்பர் 2012). "‘Dr Manmohan Singh was committed to non-interference with Asian economies’". தி ஐலண்டு (இலங்கை) இம் மூலத்தில் இருந்து 2018-12-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181201135217/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=68154. 
  9. Indrajit Coomaraswamy, கிரிக்கின்ஃபோ
  10. Wijesekera, Bernie (4 செப்டம்பர் 2005). "Indrajith still a humble soul". சண்டே டைம்சு. http://www.sundaytimes.lk/050904/sports/11.html. 
  11. 11.0 11.1 11.2 David, Anusha (19 March 2015). "Indrajit Coomaraswamy". life.lk. http://www.life.lk/article/11408/indrajit-coomaraswamy. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திரஜித்_குமாரசுவாமி&oldid=3543809" இலிருந்து மீள்விக்கப்பட்டது