அர்ஜுன் (பாடகர்)
அர்ஜுன் எனும் மேடைப் பெயரால் அறியப்பட்ட அர்ஜுன் குமாரசாமி (Arjun Coomaraswamy) ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த ஒரு பாடகரும், இசைக்கலைஞரும், நடிகரும் ஆவார்.[1] இவர் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டதுடன் தனது நான்காம் வயதில் ஐக்கிய இராச்சியத்தில் குடியேறினார்.[2]
அர்ஜுன் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | அர்ஜுன் குமாரசுவாமி |
பிற பெயர்கள் | அர்ஜுன் |
பிறப்பு | 23 செப்டம்பர் 1990சான்று தேவை] இலண்டன், ஐக்கிய இராச்சியம் | [
இசை வடிவங்கள் | ரிதம் அண்ட் புளூஸ், பொப்பிசை |
தொழில்(கள்) | பாடகர். பாடலாசிரியர், இசைக்கலைஞர், நடிகர் |
இசைக்கருவி(கள்) | பாடல், கிட்டார், கிளபம், நூதன முரசு, புல்லாங்குழல் |
இசைத்துறையில் | 2010—இன்று |
இணைந்த செயற்பாடுகள் | குரு ரந்தாவா, அனிருத் ரவிச்சந்திரன், சார்லசு பொஸ்கோ, ஆண்ட்ரியா ஜெரெமையா, ஜொனிதா காந்தி, வித்யா வாக்சு, சுக்பீர் |
இணையதளம் | arjunofficial |
2019 இல் இவர் பாடி வெளியிட்ட "கடைசியாக ஒரு முறை" (One Last Time) என்ற ஆங்கிலப் பாடல் மில்லியனுக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டது. இப்பாடலை அவர் 2018 இல் இறந்த தனது நத்தாசா சந்து என்ற தனது மனைவியின் நினைவாக வெளியிட்டார்.
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஅர்ஜுன் இலங்கையில், கொழும்பு நகரில் தமிழ்த் தந்தைக்கும், சிங்களத் தாய்க்கும் பிறந்தார்.[3] தந்தை இந்திரஜித் குமாரசுவாமி இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநராகப் பணியாற்றியவர். மனைவி நத்தாசா சந்து ஒரு மருத்துவர். அர்ஜுனின் விளம்பரதாரராகவும், அவரது இசை வாழ்க்கையின் ஒரு பகுதியாகவும் இருந்து செயல்பட்டவர். 2018 செப்டம்பரில் மனைவி மாரடைப்பினால் இறந்தார்.[4][5] 2019 திசம்பர் 3 இல், மனைவியின் நினைவாக One Last Time என்ற பாடலை வெளியிட்டார். 2020 இல், இளம் வயதினரிடையே திடீர் மாரடைப்பு குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்காக அர்ஜுன், "இளம் வயதினருக்கு இருதய ஆபத்து" (Cardiac Risk in the Young, C.R.Y) என்ற அமைப்பின் பிரபல தூதராக நியமிக்கப்பட்டார். இந்த நோக்கத்திற்கான ஆதரவின் ஒரு பகுதியாக, அர்ஜுன் தனது மறைந்த மனைவியின் நினைவாக "நத்தாசாவிற்காக" என்ற தொண்டு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்.[6]
இசைத்துறையில்
தொகுசிறுவயதிலேயே பல இசைக்கருவிகளைக் கற்றுக்கொண்ட அர்ஜுன் தனது பதின்ம வயதுக் காலத்தில் பாடல்களைப் பாடுவதிலும் இயற்றுவதிலும் கூடிய கவனம் செலுத்தத் தொடங்கினார். 2011ம் ஆண்டு வெளியாகிய வொய் திஸ் கொலவெறி டி பாடலை மீளாக்கம் செய்து ரிதம் அண்ட் புளூஸ் பாணியில் ஆங்கிலப் பாடலாக வெளியிட்டு பலர் மத்தியில் அறியப்பட்டார். இது 2013 சனவரியில் சுமார் எட்டு மில்லியன் பார்வைகளைக் கொண்டிருந்தது.[7][8][9]
அர்ஜுன் சமகால மேற்கத்திய, கிழக்கு இசைகளின் இணைவுக்காகவும், தெற்காசிய இசையின் கூறுகளுடன் R&B ஐ இணைத்தமைக்காகவும் பரவலாக அறியப்பட்டார்.[10][11][12]
அர்ஜுன் இணைய நாடகம் ஒன்றில் நடிகராவும் நடித்து வருகின்றார். இதைவிட தற்போது அர்ஜுன் தென்னிந்திய இசையமைப்பாளர்களான அனிருத் போன்றவர்களுடன் இணைந்து வணக்கம் சென்னை போன்ற திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.[13]
அர்ஜுன் ICC கிரிக்கெட் உலகக் கோப்பை 2011 க்கான அதிகாரப்பூர்வ தீம் பாடலைப் பாத்தியா மற்றும் சந்துஷுடன் இணைந்து பாடத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2012 ஆகத்தில், 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பைக்கான அதிகாரபூர்வக் கருத்திசைப் பாடலை பாத்தியா, சந்தூசுடன் இணைந்து பாடத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[14] 2012 ஆகத்து மாதத்தில் கொழும்பு சுகததாச அரங்கில் நடைபெற்ற இலங்கைப் பிரீமியர் இலீகு போட்டிகளின் ஆரம்ப நிகழ்வுக்கான இசையை அர்ஜுன் தயாரித்து வழங்கியிருந்தார்.[15]
மேற்கோள்கள்
தொகு- ↑ Kyriazis, Stefan (9 March 2016). "Arjun strips down in a World Video Exclusive. Zayn who? Meet the UK's HOTTEST new star". Express.co.uk.
- ↑ "London's R&B Sensation: Arjun". TamilCulture.ca. Archived from the original on 31 மார்ச் 2013. பார்க்கப்பட்ட நாள் 11 சூலை 2016.
{{cite web}}
: Check date values in:|archivedate=
(help) - ↑ de Mel, Chirusha (8 October 2013). "Arjun Coomaraswamy: Sri Lankan born R&B Artist in UK". Uslanka.net. பார்க்கப்பட்ட நாள் 31 August 2018.
- ↑ Baddhan, Raj (29 September 2018). "Arjun releases statement on loss of wife Natasha Sandhu". BizAsialive.com. பார்க்கப்பட்ட நாள் 3 November 2018.
- ↑ "Arjun shares heartfelt post after wife Natasha Sandhu's death | Pakistan Today". Pakistantoday.com.pk. பார்க்கப்பட்ட நாள் 2019-01-22.
- ↑ ARJUN Interview | on Mere Naal Nachna, New Album, Overcoming Tragedy, & His BIG 2021 Plans (Ep. 43) (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2021-04-02
- ↑ Tharany, R. (22 December 2011). "Why this Kolaveri Di?". ஏசியன் டிரிபியூன். http://www.asiantribune.com/news/2011/12/22/why-kolaveri-di.
- ↑ "Lankan takes 'Kolaveri di' to another level - Sunday Leader" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2012-05-12. பார்க்கப்பட்ட நாள் 2019-01-22.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "Why this kolaveri di: a universal tune?". Rnw.org.
- ↑ [1][தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Brit Asia Music Awards Nominees - DESIblitz". 5 September 2011.
- ↑ "Arjun 101: Introduction to the R&B sensation". 20 February 2015.
- ↑ Kumar, S. R. Ashok (10 August 2013). "Audio beat: Vanakkam Chennai - Take a welcome break". Thehindu.com.
- ↑ "ICC World Twenty20 2012 Theme Song (International Version) - BnS, Arjun, Randhir & Umaria". யூடியூப். 5 September 2012.
- ↑ "Cricket - Sri Lanka Premier League Opening Ceremony - SPORTZPICS Photography". Sportzpics.photoshelter.com.