இந்திரா காந்தி மையம்

இந்திரா காந்தி அரங்கம் (ஆங்கில மொழி: Indira Gandhi Arena) அல்லது இந்திரா காந்தி உள்விளையாட்டரங்கம் என்பது புது தில்லியின் கிழக்குப் பகுதியில் உள்ள இந்திரப்பிரஸ்தா வளாகத்தில் அமைந்துள்ள இந்தியாவிலேயே மிகப்பெரும் உள்விளையாட்டு அரங்கமாகும்.[1] ஆசியா மற்றும் உலகளவில் இரண்டாவது மிகப்பெரும் விளையாட்டு வசதியாகவும் விளங்குகிறது. 1982 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுகளில் உள்ளரங்க விளையாட்டுகளுக்காக இந்திய அரசால் கட்டமைக்கப்பட்ட இது 102 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஆசிய விளையாட்டுகளுக்குப் பிறகு பல்வேறு போட்டிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. 14,500 நபர்கள்[2] அமரக்கூடிய இவ்வரங்கம் முன்னாள் பிரதம மந்திரியாக இருந்த இந்திரா காந்தியின் பெயரைத் தாங்கியுள்ளது.

பலமுறை சீரமைக்கப்பட்டுள்ள இந்த அரங்கம் 2010 பொதுநலவாயம் விளையாட்டுக்கள் காரணமாக 240 கோடி செலவிடப்பட்டு, ஒலி சிதறா செயற்கைச்சுவர்கள், நவீன ஒளி/ஒலி அமைப்புகள் நிறுவப்பட்டு மீண்டும் சீரமைக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Indira Gandhi Sports Complex". Archived from the original on 2015-01-15. பார்க்கப்பட்ட நாள் 2016-04-22.
  2. "Indira Gandhi Arena". Archived from the original on 14 ஜனவரி 2009. பார்க்கப்பட்ட நாள் 27 August 2008. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  3. "Dr M S Gill to inaugurate Indira Gandhi Indoor Stadium". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-04-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திரா_காந்தி_மையம்&oldid=3927705" இலிருந்து மீள்விக்கப்பட்டது