2010 பொதுநலவாய விளையாட்டுக்கள்

(2010 பொதுநலவாயம் விளையாட்டுக்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

2010 பொதுநலவாய விளையாட்டுக்கள் பொதுநலவாய நாடுகளிடையே நடைபெறும் பத்தொன்பதாவது மற்றும் பொதுநலவாய விளையாட்டுக்கள் என்ற பெயரில் நடைபெறும் ஒன்பதாவது விளையாட்டுகளாகும். இவை இந்தியாவில் தில்லியில் 2010ஆம் ஆண்டு 3 அக்டோபர் முதல் 14 அக்டோபர் வரை நடைபெற உள்ளன. இதுவே இதுவரை இந்தியா மற்றும் தில்லியில் நடைபெறும் மிகப்பெரும் பல்துறை விளையாட்டுப் போட்டிகள் நிகழ்வாகும். இதற்கு முன்னர் 1951ஆம் ஆண்டிலும் 1982ஆம் ஆண்டிலும் ஆசிய விளையாட்டுகள் நடத்தி உள்ளது. பொதுநலவாய விளையாட்டுகள் 1998ஆம் ஆண்டு மலேசியாவின் கோலாலம்பூர் நகரை அடுத்து இரண்டாவது முறையாக ஆசியாவில் நடைபெறுகிறது.

XIX பொதுநலவாய விளையாட்டுக்கள்
XIX பொதுநலவாய விளையாட்டுக்கள்
2010 பொதுநலவாய விளையாட்டுக்கள் லோகோ
நிகழ் நகரம்டில்லி, இந்தியா
குறிக்கோள்வெளியே வா, விளையாடு
பங்குபெறும் நாடுகள்72 பொதுநலவாயம் அணிகள்
நிகழ்வுகள்17 துறைகளில் 260 நிகழ்வுகள்
துவக்கவிழா3 அக்டோபர்
இறுதி விழா14 அக்டோபர்
முதன்மை விளையாட்டரங்கம்சவகர்லால் நேரு விளையாட்டரங்கம்
இணையதளம்http://www.cwgdelhi2010.org

நிகழிடங்கள்தொகு

போட்டி இடங்கள்தொகு

விளையாட்டுக்களை நடத்த ஏற்கனவே உள்ள விளையாட்டரங்கங்கள் மற்றும் புதியதாக கட்டப்படும் விளையாட்டரங்கங்கள் பயன்படுத்தப்பட உள்ளன:[1]

Jawaharlal Nehru Stadium , New Delhi
விளையாட்டுக்களின் துவக்க மற்றும் இறுதி விழாக்கள் சவகர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெறும்

விளையாட்டுக்களின் துவக்கவிழாவும் இறுதிவிழாவும் தடகளப் போட்டிகள்,பௌலிங்,பாரம் தூக்குதல் ஆகிய போட்டிகள் 75,000 நபர்கள் காணக்கூடியவகையில் புனரமைக்கப்பட்ட சவகர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெற உள்ளன. [2]

புதுதில்லியின் கிழக்குப்பகுதியில் உள்ள இந்திரபிரஸ்தா எஸ்டேட்டில் உள்ள 25,000 நபர்கள் காணக்கூடிய ஆசியாவிலேயே உள்விளையாட்டரங்களில் இரண்டாவதும் இந்தியாவின் மிகப் பெரியதுமான இந்திரா காந்தி மையத்தில் வில்வித்தை,மிதிவண்டி ஓட்டப்பந்தயம்,சீருடற்பயிற்சிகள் மற்றும் மற்போர் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.இம்மையம் பிற அரங்கங்களுடன் தனி பேருந்து வழித்தடங்களால் இணைக்கப்பட்டிருக்கும்.[3]

26 புதிய அரங்கங்களும் புத்துயிர் ஊட்டப்பட்ட சில பழைய விளையாட்டரங்கங்களும் பயன்படுத்தப் படும்.[4]

விளையாட்டுப் போட்டிகள் இல்லாத மையங்கள்தொகு

  • 2010 பொதுநலவாய விளையாட்டுக்கள் தில்லி தலைமையகம்
  • முதன்மை ஊடக மையம்

சந்தைப்படுத்தல்தொகு

இசேரா, 2010 பொதுநலவாயம் விளையாட்டுக்களுக்கான நற்பேறு சின்னம்

விளையாட்டுக்களுக்கான நற்பேறு சின்னமாக மனித உரு கொண்ட புலிச்சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது. புலி என்பதற்கான இந்திச் சொல்லான ஷேர் எனபதைக் கொண்டு ஷேரா என்றழைக்கப்படுகிறது.[5]


பசுமை விளையாட்டுக்கள்தொகு

தில்லி 2010 பொதுநலவாயம் விளையாட்டுக்கள் முதன்முறையாக "பசுமையான பொதுநலவாயம் விளையாட்டுக்கள்" என்பதற்கான சின்னம்.

விளையாட்டுகள் அமைப்பாளர்கள், விளையாட்டு அரங்கங்களை கட்டும்போதும் புனரமைக்கும்போதும், சூழலியல் கொள்கைகளை கருத்தில்கொண்டு "தன்னிறைவு விளையாட்டுக்கள்" (sustainable games) நடத்திட தங்கள் முனைப்பைக் காட்டிடுவதாக ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிட்டுள்ளது. தியாகராசர் விளையாட்டரங்கம் சுற்றுச்சூழல் கொள்கைகளுக்கேற்ப கட்டப்பட்ட அரங்கதிற்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கும்.

எடுத்துக்கொண்ட நோக்கத்திற்கு மாறாக பல சூழலியல் சச்சரவுகள் ஏற்பட்டுள்ளன; சுற்றுச்சூழலை மிகமோசமாக பாதிக்கக்கூடிய பலவற்றை நகர மக்கள் எடுத்துக்காட்டி போராட்டங்கள் நடத்தினர். [6][7] சிரி கோட்டை வளாகத்தில் விளையாட்டுக்களுக்கான வசதிகள் செய்யும்பொருட்டு பாரம்பரியமிக்க மரங்களை வெட்டியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடப்பட்டது. இதனை ஆய்வு செய்ய உச்சநூதிமன்றம் நியமித்த கட்டிட வடிவமைப்பாளர் சார்லசு கொரியா வடிவமைப்பில் சூழலியல் சார்ந்த பல குறைகளை சுட்டிக்காட்டினார்.[8] இருப்பினும், ஏப்ரல் 2009இல் "காலம் கடந்தமை" மற்றும் "சூழலியல் பாதிப்புகளை மீட்கவியலாது" என்ற காரணங்களால் கட்டமைப்புப்பணித் தொடர அனுமதித்தது.[9][10]

விளையாட்டுக்களில் பங்குபெற வரும் வீரர்களுக்கான விளையாட்டுக்கள் சிற்றூரிலும் சூழலியல் குறித்த சர்ச்சைகள் எழுந்துள்ளன.[11]


நிகழ்ச்சிநிரல்தொகு


2010 பொதுநலவாய விளையாட்டுக்களுக்கான அலுவல்முறை நிகழ்ச்சிநிரல் பின்வருமாறு:[12]

   ●    துவக்கவிழா    ●    போட்டி நிகழ்வுகள்    ●    இறுதி விழா
அக்டோபர்   3      4     5     6     7     8     9     10     11     12     13     14   நிகழிடம்
விழாக்கள் சவகர்லால் நேரு விளையாட்டரங்கம்
நீர் விளையாட்டுக்கள் எஸ்பிஎம் நீச்சல்குள வளாகம்
வில்வித்தை யமுனா விளையாட்டு வளாகம்
தட கள விளையாட்டுக்கள் சவகர்லால் நேரு விளையாட்டரங்கம் & இந்தியா வாயில் (India Gate)
பூப்பந்தாட்டம் சிரி கோட்டை விளையாட்டரங்கம்
குத்துச்சண்டை தல்கடோரா விளையாட்டரங்கம்
மிதிவண்டி ஓட்டப்பந்தயம் இந்திரா காந்தி மையம், இந்தியா வாயில் (India Gate)
சீருடற்பயிற்சிகள் இந்திரா காந்தி மையம்
வளைதடிப் பந்தாட்டம் தியான் சந்த் தேசிய விளையாட்டரங்கம்
புல்தரை பௌலிங் சவகர்லால் நேரு விளையாட்டரங்கம்
வலைப் பந்தாட்டம் தியாகராஜ் விளையாட்டரங்கம்
எழுவர் ரக்பி தில்லி பல்கலைக்கழகம்
சுடுதல் (விளையாட்டு) முனைவர். கர்ணிசிங் சுடுதல் வெளி
ஸ்குவாஷ் சிரி கோட்டை விளையாட்டரங்கம்
மேசைப்பந்தாட்டம் யமுனா விளையாட்டு வளாகம்
டென்னிசு ஆர்கே கண்ணா டென்னிஸ் வளாகம்
ஒலிம்பிக் பாரம் தூக்குதல் சவகர்லால் நேரு விளையாட்டரங்கம்
மற்போர் இந்திரா காந்தி மையம்
அக்டோபர் 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 நிகழிடம்

பங்குபெறும் நாடுகள்தொகு

2010 பொதுநலவாய விளையாட்டுகளில் பங்குபெற தற்போது 72 நாடுகள் திட்டமிட்டுள்ளன. பொதுநலவாய நாடுகளிலிருந்து பிஜி விலக்கப்பட்டிருப்பதால் விளையாட்டுகளில் பங்குபெற தடை செய்யப்பட்டுள்ளது.[13] ருவாண்டா 2009ஆம் ஆண்டு பொதுநலவாயத்தில் இணைந்ததை யடுத்து இவ்விளையாட்டுகளில் பங்கேற்க தனது அணியை அனுப்புகிறது.[14]

 
2010 விளையாட்டுகளில் பங்கேற்கவுள்ள நாடுகள்

சர்ச்சையில் இப்போட்டிதொகு

கட்டமைப்புக் குறைபாடுகள்தொகு

21 அக்டோபர் 2010 மைதானத்திற்கு வெளியே உள்ள நடை மேம்பாலம், இடிந்து நொறுங்கியதில் 27 தொழிலாளர்கள் பலத்த காயம் அடைந்தனர்.இதன் தொடர்ச்சியாக 22 அக்டோபர் 2010 இம்மைதானத்தில் உள்ள பளுதூக்குதல் மையத்தின் அலங்கார மேற்கூரை இடிந்து விழுந்ததுகடந்த 3 நாட்களில் 3 வது முறையாக மைதானத்தில் சில பகுதிகள் இடிந்து விழுந்ததால், காமன்வெல்த் போட்டிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தங்குவதற்கான குடியிருப்பு வளாகம், விளையாட்டு கிராமம் என்று அழைக்கப்படுகிறது.இந்த அடுக்குமாடி குடியிருப்பில் போதிய வசதிகள் இல்லை என்றும், வீரர், வீராங்கனைகள் தங்க இயலாத அளவுக்கு இருப்பதாக பல்வேறு நாடுகள் குற்றம் சாட்டின.இதனால் போட்டி நடத்துவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது [15]

இந்த ஆடுகளத்தினை செப்பனிடுவதில் ஈடுபட்டிருந்த PNR Infra(http://www.pnr.in) என்ற நிறுவனத்தை கருப்பு பட்டியலில் சேர்த்தது அரசு.[16]

பாதுகாப்பு கவலைகள்தொகு

சம்மு காசுமீர் கலவரங்கள், பாபர் மசூதி தீர்ப்பினால் எழக்கூடிய கலவரங்கள்,வெளிநாட்டுத் தீவிரவாதிகள் மும்பை சம்பவம் போன்ற தாக்குதல் நடத்தக்கூடிய வாய்ப்பு எனப் பல காரணங்களால் பங்கேற்கும் நாடுகள் கவலையடைந்துள்ளன.பாதுகாப்பு பிரச்னை காரணமாக காமன்வெல்த் போட்டியில் இருந்து இங்கிலாந்தின் "டிரிபிள் ஜம்ப்' வீரர் பிலிப்ஸ் இடோவு விலகியுள்ளனர். இதே போல ஒலிம்பிக் 400 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்ற இங்கிலாந்தின் தடகள வீராங்கனை கிறிஸ்டியன் ஒகுருகு, மெல்போர்ன் காமன்வெல்த், 1500 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்ற லிசா டோப்ரிஸ்கி ஆகியோரும் விலகியுள்ளனர்.[17]

மேற்கோள்கள்தொகு

புற இணைப்புகள்தொகுமுன்னர்
மெல்பெர்ன்
பொதுநலவாயம் விளையாட்டுக்கள்
நிகழ்நகரம்
XIX பொதுநலவாயம் விளையாட்டுக்கள்
பின்னர்
கிளாஸ்கோ