இந்திரா சக்ரவர்த்தி

இந்திரா சக்ரவர்த்தி (Indira Chakravarty) என்பவர் இந்திய பொதுச் சுகாதார நிபுணர், அறிஞர், சுற்றுச்சூழல் நிபுணர் ஆவார்.[1] இவர் 2014ஆம் ஆண்டு இந்திய அரசின் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மசிறீ விருதினை பொதுச் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் ஆற்றிய பங்களிப்பிற்காகப் பெற்றார்.[2]

இந்திரா சக்ரவர்த்தி
பிறப்புஇந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்இராசபசார் அறிவியல் கல்லூரி, கொல்கத்தா பல்கலைக்கழகம்
பணிபொதுச் சுகாதார நிபுநர்
விருதுகள்பத்மசிறீ
எடோர்டோ சவுமா விருதை
இந்திரா காந்தி பிரியதர்சினி தேசிய விருது
உலகளாவிய தலைமை விருது

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

சக்ரவர்த்தி மேற்கு வங்காளம் மாநிலத்தினைச் சார்ந்தவர். இவர் உயிர்வேதியியலில் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் அதனைத் தொடர்ந்து அறிவியல் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.[1][3] இவர் இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையிலும் உலகளாவிய சுகாதாரத்திலும் தீவிர செயற்பாட்டாளராக உள்ளார். இவர் 30க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி திட்டங்களில் பங்கேற்றுள்ளார்.[4] உலக சுகாதார அமைப்பின் குழந்தைகளுக்கான உலக உச்சி மாநாடு மற்றும் பசி திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களிலும் பங்கேற்றுள்ளார்.[1]

சக்கரவர்த்தி சில ஆய்வுகளை, கொல்கத்தாவின் தெருவோர வியாபாரிகளிடம் நடத்தினார். இதன் மூலம் கொள்கை மாற்றங்கள் மற்றும் புதிய முயற்சிகள் இந்திய அரசினால் மேற்கொள்ள வழிவகுத்தன.[5] பன்னாட்டு மகளிர் அருங்காட்சியகத்தின் உலகளாவிய குழு உறுப்பினர் உள்ளிட்ட பல முக்கியப் பதவிகளைச் சக்கரவர்த்தி வகித்துள்ளார்.[1] இவற்றில் குறிப்பிடத்தக்கவைகளாக 1) தலைமை ஆலோசகர் - பொதுச் சுகாதார பொறியியல் துறை, மேற்கு வங்க அரசு[3][6][7] 2) உறுப்பினர் - தேசிய குடிநீர் மற்றும் சுகாதாரம் குழு, இந்திய அரசு[3] 3) வாரிய உறுப்பினர்- சர்வதேச சுகாதார நிறுவனம், ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம்[1][3][8] 4) முன்னாள் உறுப்பினர் - இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், இந்திய அரசு [1] [3] 5) முன்னாள் மண்டல இயக்குநர், தெற்காசியா - நுண்ணூட்டச்சத்து முயற்சி - பன்னாட்டு மேம்பாட்டு ஆராய்ச்சி மையம்[1][3] 6) முன்னாள் இயக்குநர் மற்றும் தலைவர்- அகில இந்திய ஆரோக்கியம் மற்றும் பொதுச் சுகாதாரம் நிறுவனம், இந்திய அரசு[1][3] 7) முன்னாள் இயக்குநர் - சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனம், இந்திய அரசு[1][3] 8) முன்னாள் மண்டல ஆலோசகர் ஊட்டச்சத்து (சட்டம்) - தென்கிழக்கு ஆசியாவுக்கான மண்டல அலுவலகம், உலக சுகாதார அமைப்பு[1][3] 9) மண்டல ஒருங்கிணைப்பாளர் - தெரு உணவுகள் குறித்த ஆசிய மண்டல மையம் - உணவு மற்றும் விவசாய அமைப்பு [1] 10) கவுரவ அறிவியல் ஆலோசகர் - சமூக ஆதரவு மற்றும் மேம்பாட்டுக்கான அறக்கட்டளை[1][9] மற்றும் 11) ஆலோசகர் - குழந்தைகளுக்கான உலக உச்சி மாநாடு - உலக சுகாதார அமைப்பு [1] ஆகியன அடங்கும்.

நூல் வெளியீடு

தொகு

சக்கரவர்த்தி புத்தகம் ஒன்றினையும் 250க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைத் தேசிய அளவிலான மன்றக் கூட்டங்கள் மற்றும் பன்னாட்டு ஆய்விதழ்களில் வெளியிட்டுள்ளார்.[1][10][5][6][7]

விருதுகள் மற்றும் கவுரவங்கள்

தொகு

பொதுச் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் சக்ரவர்த்தியின் பங்களிப்பினை அங்கீகரிக்கும் விதமாக இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ விருதினை வழங்கியது.[2]

 
பத்மசிறீ விருது

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு சக்கரவர்த்திக்கு எடோர்டோ சவுமா முதல் விருதை வழங்கியது.[4] இவர் அனைத்திந்திய இந்தியத் தேசிய ஒற்றுமை குழுவின் இந்திரா காந்தி பிரியதர்சினி தேசிய விருதினையும்[4] மிக உயர்ந்த பன்னாட்டுக் கவுரவமான தென் புளோரிடா பல்கலைக்கழகத்தின் உலகளாவிய தலைமை விருதினையும் பெற்றார்.[5] இன்றைய உலகில் பெண்களின் பல்லூடக கலைக்களஞ்சியத்தில் இவர் அதிக அளவில் இடம்பெற்றுள்ளார்.[9] 2014ஆம் ஆண்டு குடியரசு தினத்தில் இவரைப் பங்குபெறச் செய்ததன் மூலம் இந்திய அரசு இவரது சேவைகளை அங்கீகரித்தது.[2]

இதையும் பார்க்கவும்

தொகு
  • நுண்ணூட்டச்சத்து முன்முயற்சி
  • குழந்தைகளுக்கான உலக உச்சி மாநாடு
  • சர்வதேச மகளிர் அருங்காட்சியகம்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 "International Museum of Women". International Museum of Women. 2014. Archived from the original on 2 November 2014. பார்க்கப்பட்ட நாள் 2 November 2014.
  2. 2.0 2.1 2.2 "Padma 2014". Press Information Bureau, Government of India. 25 January 2014. Archived from the original on 8 February 2014. பார்க்கப்பட்ட நாள் 28 October 2014.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 3.8 "BIS" (PDF). BIS. 2014. Archived from the original (PDF) on 2 November 2014. பார்க்கப்பட்ட நாள் 2 November 2014.
  4. 4.0 4.1 4.2 "United Nations University". United Nations University. 2014. Archived from the original on 2 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 2 November 2014.
  5. 5.0 5.1 5.2 "University of South Florida". University of South Florida. 8 August 2009. பார்க்கப்பட்ட நாள் 2 November 2014.
  6. 6.0 6.1 "Britannia" (PDF). Britannia. 2014. பார்க்கப்பட்ட நாள் 2 November 2014.
  7. 7.0 7.1 "Food and Agriculture Organization (UN)" (PDF). Food and Agriculture Organization (UN). 2014. பார்க்கப்பட்ட நாள் 2 November 2014.
  8. "United Nations University". United Nations University. 2014. Archived from the original on 2 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 2 November 2014.
  9. 9.0 9.1 {{cite book}}: Empty citation (help)
  10. Indira Chakravarty, R K Sinha (2002). "Prevalence of micronutrient deficiency based on results obtained from the national pilot program on control of micronutrient malnutrition.". Nutr. Rev. 6 (5): 553–558. http://www.pubfacts.com/detail/12035859/Prevalence-of-micronutrient-deficiency-based-on-results-obtained-from-the-national-pilot-program-on-. 

மேலும் படிக்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திரா_சக்ரவர்த்தி&oldid=3705548" இலிருந்து மீள்விக்கப்பட்டது