இந்தோனேசியாவில் கல்வி

இந்தோனேசியாவில் கல்வி கல்வி மற்றும் கலாச்சார அமைச்சகம் மற்றும் மத விவகாரங்களுக்கான அமைச்சகம் ஆகியவற்றின்பொறுப்பின் கீழ் வருகிறது. இந்தோனேசியாவில், அனைத்து குடிமக்களும் பன்னிரெண்டு ஆண்டுகள் கட்டாயக் கல்வியை மேற்கொள்ள வேண்டும், பள்ளிக்கல்வியானது, தொடக்க நிலையில் ஆறு ஆண்டுகளும், இடைநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி மட்டங்களில் தலா மூன்று ஆண்டுகளும் கொண்டதாகும். இஸ்லாமிய பள்ளிகள் மத விவகார அமைச்சகத்தின் பொறுப்பில் உள்ளன.

பிரமுகா (சாரணர்) சீருடை அணிந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த சீருடை பொதுவாக புதன், வெள்ளி அல்லது சனிக்கிழமைகளில் அணியப்படும்.
மேலே உள்ள மாணவர்கள் கிழக்கு ஜாவாவின் ட்ரோவுலன் அருங்காட்சியகத்தில் ஜாவி கோயிலின் மாதிரியை பார்வையிட்டுக் கொண்டு ஒரு வழிகாட்டியின் விளக்கத்தைக் கேட்கிறார்கள்,

கல்வி என்பது ஒரு ஆய்வுச் சூழலையும் கல்விச் செயல்முறையையும் நிறுவுவதற்கான ஒரு திட்டமிட்ட முயற்சியாக வரையறுக்கப்படுகிறது, இதனால் மாணவர் மத மற்றும் ஆன்மீக நிலையில் தனது திறனை வளர்த்துக் கொள்வது, நனவு, ஆளுமை, நுண்ணறிவு, நடத்தை மற்றும் படைப்பாற்றல் போன்றவற்றில் தனது மற்றும் பிற குடிமக்களின் நிலைமையை வளர்த்துக்கொள்து ஆகியவற்றுக்கான வாய்ப்பை வழங்க வேண்டும். இந்தோனேசியாவில் இரண்டு வகையான கல்வி உள்ளது என்றும் அரசியலமைப்பு குறிப்பிடுகிறது: முறையான கல்வி மற்றும் முறைசாரா கல்வி என்பவையே அவை. முறையான கல்வி மேலும் மூன்று நிலைகளாக, அதாவது, முதல்நிலை, இடைநிலை மற்றும் மூன்றாம் நிலை கல்வி என பிரிக்கப்பட்டுள்ளன.

இந்தோனேசியாவில் உள்ள பள்ளிகள் அரசு (நெகேரி ) அல்லது தனியார் துறைகளால் (ஸ்வஸ்தா ) நடத்தப்படுகின்றன. சில தனியார் பள்ளிகள் தங்களை " தேசிய பிளஸ் பள்ளிகள்" என்று குறிப்பிடுகின்றன, இதன் பொருள் அவர்களின் பாடத்திட்டம் கல்வி அமைச்சினால் நிர்ணயிக்கப்பட்ட தேவைகளைத் தாண்டியும் உள்ளது என்பதைக் குறிப்பதாக உள்ளது. மீறுகிறது, குறிப்பாக ஆங்கிலத்தை கற்பித்தல் மொழியாகப் பயன்படுத்துதல் அல்லது தேசிய பாடத்திட்டத்திற்கு பதிலாக சர்வதேச பாடத்திட்டத்தைக் கொண்டிருத்தல் போன்றவை இத்தகைய பள்ளிகளின் சிறப்பம்சங்களாகக் கூறப்படுகின்றன. இந்தோனேசியாவில் சுமார் 1,70,000 தொடக்கப் பள்ளிகள், 40,000 ஜூனியர்-மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 26,000 உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 84 சதவீதம் தேசிய கல்வி அமைச்சகத்தின் (MoNE) கீழும், மீதமுள்ள 16 சதவீதம் மத விவகார அமைச்சகத்தின் (MoRA) கீழ் உள்ளன.

வரலாறு தொகு

இசுலாமிய அரசுகளின் சகாப்தம் தொகு

இந்தோனேசியாவில் இசுலாமிய அரசின் தோற்றம் இசுலாமிய மற்றும் இந்து-புத்த மரபுகளின் பண்பாட்டு இணக்கத்தால் குறிப்பிடப்படுகிறது. இந்த நேரத்தில், போன்டோக் பேசான்ட்ரன் என்ற இசுலாமிய உறைவிட பள்ளிகளின் ஒரு வகை அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வகைப் பள்ளிகல் பல நிறுவப்பட்டன இருந்தது. பெசன்ட்ரனின் இருப்பிடம் பெரும்பாலும் நகரத்தின் பரபரப்பான கூட்ட நெருக்கடியிலிருந்து வெகு தொலைவில் அமைந்திருந்தது.

காலனித்துவ சகாப்தம் தொகு

இந்தோனேசியாவில் தொடக்கக் கல்வியானது டச்சுக்காரர்களால் காலனித்துவ காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. டச்சு கல்வி முறை என்பது காலனியின் மக்கள்தொகையின் சமூக நிலையை அடிப்படையாகக் கொண்ட கல்வி கிளைகளின் தொடராகும். இது ஐரோப்பிய மக்களுக்காக தனியாக அமைக்கப்பட்ட சிறந்த நிறுவன அமைப்பாகும்.

1870 ஆம் ஆண்டில், கான்ராட் தியோடர் வான் டெவென்டர் உருவாக்கிய டச்சு நெறிமுறைக் கொள்கையின் வளர்ச்சியுடன், டச்சுக்காரர்களால் நிறுவப்பட்ட சில பள்ளிகள் இந்தோனேசிய பூர்வ குடிகளுக்கான கதவுகளைத் திறந்தன. அவை தான் செகோலா ரக்ஜத் (நாட்டுப்புறப் பள்ளி) என்று அழைக்கப்பட்ட, தற்போதுசெகோலா தாசர் (தொடக்கப்பள்ளி) என்று அழைக்கப்படுகிறது.[1] 1871 ஆம் ஆண்டில் டச்சு பாராளுமன்றம் ஒரு புதிய கல்விச் சட்டத்தை ஏற்றுக்கொண்டது, இது தீவுக்கூட்டம் முழுவதும் மிகவும் சிதறிய மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட சுதேச கல்வி முறைகளை ஒரே மாதிரியாக மாற்றவும், காலனித்துவ நிர்வாகத்தின் மேற்பார்வையின் கீழ் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்தவும் முயன்றது. பொதுப் பள்ளிப்படிப்புக்கான நிதி ஒதுக்கீடு 1864 ஆம் ஆண்டில் 300,000 கில்டர்கள் என்ற அளவில தொடங்கி 1890 களின் ஆரம்பத்தில் சுமார் 3 மில்லியன் கில்டர்கள் வரை சென்றது. இருப்பினும், பெரும்பாலும், கல்வி வளர்ச்சிக்கு நிதியுதவி கிடைக்காமல் பள்ளிக்கல்வித்துறை சில தருணங்களில் வாடிக் கிடந்தது. பல டச்சு அரசியல்வாதிகள் கல்வியை விரிவுபடுத்துவது இறுதியில் காலனித்துவ எதிர்ப்பு உணர்வுக்கு வழிவகுக்கும் என்று அஞ்சினர்.[2] கல்விக்கான நிதியாது 1920 களில் காலனித்துவ வரவு செலவுத் திட்டத்தின் மொத்த செலவினங்களில் 6% மட்டுமே. 1930 வாக்கில் பூர்வீக மக்களுக்கான அரசு மற்றும் தனியார் தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை 3,108 ஆகவும், நூலகங்கள் 3,000 ஆகவும் அதிகரித்தன.[3] இருப்பினும், 1930 ல் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலைக்குப் பின்னர் கல்விக்கான நிதி ஒதுக்கீடு கடுமையாகக் குறைந்தது.

மேற்கோள்கள் தொகு

  1. "Nicht verfügbar". Infocondet.com. Archived from the original on 16 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 1 November 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Why was the Dutch legacy so poor? Educational development in the Netherlands Indies, 1871-1942".
  3. http://indonesia-dutchcolonialheritage.nl/Special%20Subjects/Education%20in%20Dutch%20East-India.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தோனேசியாவில்_கல்வி&oldid=3543853" இலிருந்து மீள்விக்கப்பட்டது