இபோலா தீநுண்மம்

இபோலா தீநுண்மம் (Ebola virus, (/iˈblə/;[1] EBOV) என்பது தீநுண்ம பேரினங்களில் ஒன்றான இபோலாவைரசினுள் கண்டறியப்பட்ட ஆறு தீநுண்மங்களுள் ஒன்றாகும்.[2][3] அவற்றுள் இபோலா தீநுண்மம் உட்பட நான்கு தீநுண்மங்கள் மனிதன் மற்றும் ஏனைய பாலூட்டிகளின் உயிருக்கு பேராபத்து விளைவிக்கக் கூடிய தீநுண்மக் குருதிப்போக்குக் காய்ச்சலை ஏற்படுத்தக்கூடியன. அக்காய்ச்சல் இபோலா தீநுண்ம நோய் என அழைக்கப்படுகிறது. இபோலா தீநுண்மம் அதிகளவிலான மனித உயிரிழப்பை ஏற்படுத்தியதோடு, 2014ம் ஆண்டு மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவலிற்கும் காரணமாக இருந்தது.[4] 2013-2015 கால கட்டத்தில் ஏற்பட்ட இந்நோய்ப்பரவலினால் 11,310 பேர் உயிரிழந்தனர்.[5]

இபோலா தீநுண்மம்
False color scanning electron microscope image of a single filamentous Ebola virus particle
இலத்திரனியல் நுணுக்குக்காட்டியின் மூலம் உரு பெருப்பிக்கப்பட்ட இபோலா தீநுண்ம அணு
தீநுண்ம வகைப்படுத்தல்
(unranked): தீநுண்மம்
தொகுதி: நெகர்னவிரிகோடா
வகுப்பு: மோன்ஞிவிரிசெடஸ்
வரிசை: மொனோனிகேவைரலஸ்
குடும்பம்: பிலோவிரிடே
பேரினம்: இபோலாவைரஸ்
இனம்:
சையர் இபோலாவைரஸ்
தீநுண்மம்:
இபோலா தீநுண்மம்

தொடக்கத்தில் இத்தீநுண்மத்திற்கும் இதன் பேரினத்திற்கும் சையர் என பெயரிடப்பட்டது. சையர் என்பது காங்கோ மக்கள் குடியரசின் முந்தைய பெயர் ஆகும். இவ்விடத்திலேயே இபோலா தீநுண்மம் முதலில் இணங்காணப்பட்டது.[2] மார்பர்க் தீநுண்மத்தின் புதிய உறுப்பினர் என்றே இத்தீநுண்மம் ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டது.[6][7] எனினும் குழப்பங்களைத் தவிர்க்க 2010ம் ஆண்டில் இத்தீநுண்மத்திற்கு <nowiki>இபோலா தீநுண்மம் என பெயர் மாற்றப்பட்டது. தீநுண்ம வகைப்படுத்தலின் படி இபோலா தீநுண்மம் மொனோனிகேவைரலஸ் வரிசையில் பிலோவிரிடே குடும்பத்தில் இபோலாவைரஸ் பேரினத்தில் உள்ளடங்கும் சையர் இபோலாவைரஸ் இனத்தின் தனித்த உறுப்பினராக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[2][8] இத்தீநுண்ம பரவலுக்கு பழ வௌவால்கள் இயற்கை காரணியாக அமைகின்றன என்று பரவலாகக் கருதப்படுகிறது.[9] இத்தீநுண்மம் மனிதரிலிருந்து மனிதருக்கும், விலங்குகளிலிருந்து மனிதருக்கும் உடல் திரவம் ஊடாக பரவுகிறது.[10]

ஏறத்தாழ 19000 நியூக்ளியோட்டைட் நீளம் கொண்ட தனித்த இழையுடைய இரைபோ கருவமிலமே(ஆர்.என்.ஏ) இபோலா தீநுண்மத்தின் மரபணுத்தொகை ஆகும். இம்மரபணுத்தொகை ஏழு புரத கட்டமைப்பைக் கொண்டது. அவை பின்வருமாறு: நியூக்ளியோபுரோட்டீன் (NP), VP35, VP40, GP, VP30, VP24, L.[11]

இபோலா தீநுண்மத்தின் அதீத இறப்பு வீதத்தைக் (83-90%)[12][13] காரணம் காட்டி உலக சுகாதார அமைப்பு இத்தீநுண்மத்திற்கு அபாயகர நோய்களை ஏற்படுத்தும் காரணிகள் குழுவில் நான்காம் தர நிலையை வழங்கியுள்ளது. மேலும் ஐக்கிய அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்கள் கழகம் இத்தீநுண்மத்தை ஒரு உயிரியல் ஆயுதமாகவும் வகைப்படுத்தியுள்ளது.

கட்டமைப்பு

தொகு
 
இவ்இபோலா மற்றும் மார்பர்க் தீநுண்ம படிவளர்ச்சியைக் காட்டும் வரைபு.

முழுமையானதொரு இபோலா தீநுண்மம் நீண்ட உருளை அல்லது குழாய் வடிவத்திலிருக்கும். இதன் மேற்பரப்பில் கிளைக்கோப்புரதத்திலாலான முட்கள் பரவி காணப்படும். தீநுண்ம உறையால் மூடிய இத்தீநுண்மத்தினுள் எதிர் ஆர்.என்.ஏ மற்றும் சில புரதங்கள் உள்ளடங்கியிருக்கும். பொதுவாக இவ்வுருளை வடிவத்தின் விட்டம் 80 நானோ மீட்டர்களாகவும், நீளம் 800-1000 நானோ மீட்டர்களாகவும் இருக்கும். புரதத்தாலான முட்கள் 7-10 நானோ மீட்டர் உயரம் கொண்டதாகவிருக்கும். முழுமையான இபோலா தீநுண்மத்தின் மேற்பரப்பிலிருக்கும் முட்கள் மனித அல்லது விலங்கு கலத்தினுள் சென்று கலத்திலிருந்து தீநுண்ம உறையை உருவாக்கி தீநுண்மத்தை மூடுகிறது. தீநுண்ம உறைக்கும் தீநுண்ம கருவோட்டிற்குமிடையில் VP40, VP24 ஆகிய தீநுண்ம புரதங்கள் அமைந்துள்ளன.[14] இத்தீநுண்ம அமைப்பின் மையத்தில் சில புரதங்களினாலான கருவோடு அமைந்துள்ளது. இதனுள் திருகுசுழல் வடிவிலான ஆர்.என்.ஏ உடன் NP, VP35, VP30, L ஆகிய புரதங்கள் பிணைந்துள்ளன. திருகுசுழல் ஆர்.என்.ஏ வின் விட்டம் 80 நானோமீட்டர்கள் ஆகும்.[15][16][17]

பொதுவாக உருளை வடிவத்தில் இத்தீநுண்மம் இருந்தாலும் இதன் தோற்றம் பல்வேறு வகையான வடிவங்களில் காணக் கிடைக்கின்றன. எளிமையான உருளை வடிவத்தை விட கிளை, எண் ஒன்பது, வளையம் போன்ற வடிவத்திலேயே அதிகம் அவதானிக்கப்படுகிறது.[18][19]

மரபணுத்தொகை

தொகு

அனைத்து இபோலா தீநுண்மமும் 18,959 முதல் 18,961 நியூக்ளியோட்டைட்டுகள் அளவு நீளமுடைய தனி இழை ஆர்.என்.ஏ மூலக்கூறைக் கொண்டிருக்கும்.[20] இத்தீநுண்மத்தின் மரபணுத்தொகை எட்டு புரத கட்டமைப்புகளை குறிமுறைப்படுத்தும். அவற்றில் ஏழு தீநுண்ம கட்டமைப்பினுள் உள்ளதும் மீதமுள்ள புரதம் மனித விலங்கு கலத்திலிருந்து எடுக்கப்பட்டதுமாகும். இபோலா தீநுண்மத்தின் மரபணு வரிசை பின்வருமாறு இருக்கும்: 3′ – தலை – புரதம் NP – புரதம் VP35 – புரதம் VP40 – புரதம் GP/sGP – புரதம் VP30 – புரதம் VP24 – புரதம் L – வால் – 5'. இதன் தலை மற்றும் வால்பகுதியில் தீநுண்ம படியெடுப்பு, புதிய தீநுண்மத்திற்கு தேவையான மரபணுவைக் கட்டுப்படுத்தல் ஆகியவற்றுக்கான சமிக்ஞைகள் அடங்கியிருக்கும். 

இலக்கியங்களில்

தொகு
  • வில்லியம் குளோஸ் என்பவர் எழுதி 1995 மற்றும் 2002ல் வெளியாகிய இபோலா எனும் புதினம் 1976 சையரில் பரவிய இபோலா தீநுண்ம பரவலை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது.[21][22][23][24]
  • ரிச்சட் பிரெஸ்ட்டனின் த ஹாட் சோன் எனும் நூலும் இபோலா தீநுண்மத்தைப் பற்றிய தரவுகளைக் கொண்டிருக்கிறது.[25]

குறிப்புகள்

தொகு
  1. வார்ப்புரு:Cite LPD
  2. 2.0 2.1 2.2 Kuhn, Jens H.; Becker, Stephan; Ebihara, Hideki; Geisbert, Thomas W.; Johnson, Karl M.; Kawaoka, Yoshihiro; Lipkin, W. Ian; Negredo, Ana I et al. (2010). "Proposal for a revised taxonomy of the family Filoviridae: Classification, names of taxa and viruses, and virus abbreviations". Archives of Virology 155 (12): 2083–103. doi:10.1007/s00705-010-0814-x. பப்மெட்:21046175. 
  3. WHO. "Ebola virus disease".
  4. Ebola outbreak in Western Africa 2014: what is going on with Ebola virus?. 
  5. "Ebola virus disease outbreak". பார்க்கப்பட்ட நாள் 4 December 2016.
  6. Pattyn. Isolation of Marburg-like virus from a case of haemorrhagic fever in Zaire. 
  7. Bowen. Viral haemorrhagic fever in southern Sudan and northern Zaire. Preliminary studies on the aetiological agent. 
  8. WHO. "Ebola virus disease".
  9. Quammen. "Insect-Eating Bat May Be Origin of Ebola Outbreak, New Study Suggests".
  10. Angier. "Killers in a Cell but on the Loose - Ebola and the Vast Viral Universe". https://www.nytimes.com/2014/10/28/science/ebola-and-the-vast-viral-universe.html. 
  11. Nanbo, Asuka; Watanabe, Shinji; Halfmann, Peter; Kawaoka, Yoshihiro (4 Feb 2013). "The spatio-temporal distribution dynamics of Ebola virus proteins and RNA in infected cells". Scientific Reports 3: 1206. doi:10.1038/srep01206. பப்மெட்:23383374. பப்மெட் சென்ட்ரல்:3563031. Bibcode: 2013NatSR...3E1206N. http://www.nature.com/srep/2013/130204/srep01206/full/srep01206.html. 
  12. "Ebola virus disease Fact sheet N°103". March 2014. பார்க்கப்பட்ட நாள் 12 April 2014.
  13. Virus taxonomy classification and nomenclature of viruses; 8th report of the International Committee on Taxonomy of Viruses. 2005.
  14. Feldmann, H. K. (1993). "Molecular biology and evolution of filoviruses". Archives of Virology. Supplementum 7: 81–100. பன்னாட்டுத் தர தொடர் எண்:0939-1983. பப்மெட்:8219816. 
  15. Lee, Jeffrey E. "Ebolavirus glycoprotein structure and mechanism of entry". Future Virology 4 (6): 621–635. பன்னாட்டுத் தர தொடர் எண்:1746-0794. பப்மெட்:20198110. 
  16. Falasca, L. "Molecular mechanisms of Ebola virus pathogenesis: focus on cell death". Cell Death and Differentiation 22 (8): 1250–1259. பன்னாட்டுத் தர தொடர் எண்:1350-9047. பப்மெட்:26024394. 
  17. Swetha, Rayapadi G.. "Ebolavirus Database: Gene and Protein Information Resource for Ebolaviruses". Advances in Bioinformatics 2016: 1–4. பன்னாட்டுத் தர தொடர் எண்:1687-8027. பப்மெட்:27190508. 
  18. Klenk, H-D; Feldmann, H (editor) (2004). Ebola and Marburg Viruses: Molecular and Cellular Biology. Horizon Bioscience. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-904933-49-6. {{cite book}}: |author= has generic name (help)CS1 maint: multiple names: authors list (link)
  19. Hillman, H. (1991). The Case for New Paradigms in Cell Biology and in Neurobiology. Edwin Mellen Press.
  20. Zaire ebolavirus isolate H.sapiens-wt/GIN/2014/Makona-Kissidougou-C15, complete genome, GenBank
  21. Close, William T. (1995). Ebola: A Documentary Novel of Its First Explosion. New York: Ivy Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0804114325. இணையக் கணினி நூலக மைய எண் 32753758. At Google Books.
  22. Grove, Ryan (2006-06-02). "More about the people than the virus". Review of Close, William T., Ebola: A Documentary Novel of Its First Explosion. பார்க்கப்பட்ட நாள் 2014-09-17.
  23. Close, William T. (2002). Ebola: Through the Eyes of the People. Marbleton, Wyoming: Meadowlark Springs Productions. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0970337115. இணையக் கணினி நூலக மைய எண் 49193962. At Google Books.
  24. Pink, Brenda (2008-06-24). "A fascinating perspective". Review of Close, William T., Ebola: Through the Eyes of the People. பார்க்கப்பட்ட நாள் 2014-09-17.
  25. Richard Preston. "The Hot Zone". richardpreston.net. பார்க்கப்பட்ட நாள் 4 December 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இபோலா_தீநுண்மம்&oldid=4169584" இலிருந்து மீள்விக்கப்பட்டது