இமயமலை காட்டுப் பூனை

Teleostomi

இமயமலை காட்டுப் பூனை (Felis chaus affinis)(பெலிசு சாசு அபினிசு) என்பது காட்டுப்பூனையின் துணையினமாகும்.[1] 1830ஆம் ஆண்டில் இங்கிலாந்து விலங்கியல் நிபுணர் ஜான் எட்வர்ட் கிரே தாமசி கார்ட்விக்கின் விளக்கப்படத்தின் அடிப்படையில் இதனை விவரித்தார்.

இமயமலை காட்டுப் பூனை
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பூனைக் குடும்பம்
பேரினம்:
பெலிசு
இனம்:
துணையினம்:
F. c. affinis
முச்சொற் பெயரீடு
Felis chaus affinis
கிரே, 1830
வேறு பெயர்கள் [1]
  • பெ. சா. பிராதெரி போகாக், 1939
  • பெ. சா. குதாசு பியர்சன், 1832

வகைப்பாட்டியல்

தொகு

தாமசு கார்ட்விக்கின் இந்திய வனவிலங்குகளின் விளக்கப்படங்களின் தொகுப்பில், இமயமலை காட்டுப் பூனையின் படத்தை உள்ளடக்கியது. இதனை இங்கிலாந்து விலங்கியல் நிபுணர் ஜான் எட்வர்ட் கிரே 1830-ல்[2] “துணை பூனை" பெலிசு அபினிசு என்று பெயரிட்டார்.

19ஆம் நூற்றாண்டில், இந்தியாவில் பல காடுகளில் பூனை மாதிரிகள் துணையினங்களாக முன்மொழியப்பட்டன:

  • 1832ஆம் ஆண்டில், மேற்கு வங்காளத்தில் உள்ள மிட்னாபூர் காட்டில் பிடிபட்ட பூனை போலி வடிவினை வங்காள ஆசியச் சங்கத்தின் கூட்டத்தில் விவாத மாதிரியாகக் காட்டப்பட்டது. இந்த மாதிரியை நன்கொடையாக வழங்கிய பியர்சன், இது பெலிசு சாசு நிறத்திலிருந்து வேறுபட்டது என்று விவரித்து இதற்கு பெலிசு குடாசு என்ற பெயரை முன்மொழிந்தார்.[3]
  • 1852ஆம் ஆண்டில், இலங்கையின் இயற்கையியலாளர் எட்வர்ட் பிரடெரிக் கெலார்ட், வட இலங்கையிலிருந்து பெறப்பட்ட பெலிசு சாசு தோலை விவரித்தார். இவர், "சதுப்புநில லினக்சு" உடன் இதன் நெருங்கிய ஒற்றுமையை விவரித்தினார்.[4]

1930களில், போகாக் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் காட்டுப் பூனை தோல்கள் மற்றும் பிரித்தானிய இந்தியா மற்றும் அருகிலுள்ள நாடுகளிலிருந்து பெறப்பட்ட பூனைகளின் மண்டையோடுகளை மதிப்பாய்வு செய்தார். உரோமத்தின் நீளம் மற்றும் நிறத்தில் உள்ள வேறுபாடுகளின் அடிப்படையில் இவர் சிந்துவிலிருந்து ஆறு பெரிய தோல்களை பெலிசு சாசு பிரடெரி என்ற பெயரில் தொகுத்தார். இவர் இலங்கை மற்றும் தென்னிந்தியாவிலிருந்து பெலிசு சாசு கெளார்ட்டியின் கீழ் உள்ள மாதிரிகளை வரிசைப்படுத்தினார். ஆனால் வட இந்தியா மற்றும் இமயமலையிலிருந்து பெலிசு சாசு அபினிசு கீழ் வகைப்படுத்தினார்.[5]

2017 முதல், இந்த மூன்று பெயர்களும் பெ. சா. அபினிசு உடன் ஒத்ததாகக் கருதப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Kitchener, A. C., Breitenmoser-Würsten, C., Eizirik, E., Gentry, A., Werdelin, L., Wilting A., Yamaguchi, N., Abramov, A. V., Christiansen, P., Driscoll, C., Duckworth, J. W., Johnson, W., Luo, S.-J., Meijaard, E., O’Donoghue, P., Sanderson, J., Seymour, K., Bruford, M., Groves, C., Hoffmann, M., Nowell, K., Timmons, Z. & Tobe, S. (2017). "A revised taxonomy of the Felidae: The final report of the Cat Classification Task Force of the IUCN Cat Specialist Group". Cat News (Special Issue 11). http://www.catsg.org/fileadmin/filesharing/5.Cat_News/5.3._Special_Issues/5.3.10._SI_11/CN_Special_Issue_11_Revised_taxonomy_of_the_Felidae.pdf. 
  2. Gray, J. E. (1830-1832). Illustrations of Indian Zoology; chiefly selected from the collection of Major-General Hardwicke. Vol. 1. Treuttel, Wurtz, Treuttel, jun. and Richter, London, Paris, Strasbourg.
  3. Pearson, J. T. (1832) A stuffed specimen of a species of Felis, native of the Midnapure jungles. The Journal of the Asiatic Society of Bengal. Vol. I: 75.
  4. Kelaart, E. F. (1852). Prodromus Faunæ Zeylanicæ: Being Contributions to the Zoology of Ceylon. Printed for the author, Colombo.
  5. Pocock, R. I. (1939). "Felis chaus Güldenstädt". The Fauna of British India, including Ceylon and Burma. Mammalia. – Volume 1. London: Taylor and Francis Ltd. pp. 290–305.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இமயமலை_காட்டுப்_பூனை&oldid=3927740" இலிருந்து மீள்விக்கப்பட்டது