இமயமலை நியூட்

ஒரு வகை சாலமாண்டர்

இமயமலை நியூட் (Himalayan newt ) என்பது இந்தியாவில் தென்படும் ஒரே வகை சாலமாண்டர் ஆகும். இவை இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகின்றன.

விளக்கம்

தொகு

இவை பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றன. 20 செமீ நீளம்வரை வளரக்கூடியவை. இதன் நாக்கு சிறியது இதன் பற்கள் சாய்ந்த வரிசையில் அமைந்து வாயின் முன்பக்கமாக சந்திக்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் மண்டை ஓடு தடித்த எலும்புகளால் ஆனவை.இவற்றிற்கு கால்களில் ஐந்து விரல்கள் கொண்டுள்ளன.இதன் தட்டையான வால் இவை நன்கு நீந்த உதவுகின்றன.

உணவு

தொகு

இவை சிலந்தி, புழுக்கள், தேள், மெல்லுடலிகள் போன்ற பூச்சிகளை உண்டு வாழ்கின்றன.[2]

நில எல்லை

தொகு

இவை சீனாவின் யுன்னான் மலைகள், சிக்கிம், மணிப்பூர், வடக்கு பர்மா[3] வடக்கு மற்றும் கிழக்கு வடக்கு தாய்லாந்து. இந்தியவின் டார்ஜிலிங் ஆகிய இடங்களில் காணப்படுகின்றது. இது வியட்நாமில் அழிந்து இருக்கலாம் என கருநப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Peter Paul van Dijk, Guinevere Wogan, Michael Wai Neng Lau, Sushil Dutta, Tej Kumar Shrestha, Debjani Roy & Nguyen Quang Truong (2009). "Tylototriton verrucosus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 4 January 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)CS1 maint: multiple names: authors list (link)
  2. Devi, N. T. (2005). "The food of the Himalayan Newt (Tylototriton verrucosus Anderson): A preliminary study". Journal of the Bombay Natural History Society 102 (2): 166–168. 
  3. The Myanmar Herpetological Survey Project
"https://ta.wikipedia.org/w/index.php?title=இமயமலை_நியூட்&oldid=2068783" இலிருந்து மீள்விக்கப்பட்டது