இம்புமலாங்கா

இம்புமலாங்கா (Mpumalanga, /əmˌpməˈlɑːŋɡə/ (கேட்க) (கிழக்கு டிரான்சுவால் என்ற பெயர் ஆகத்து 24, 1995 முதல் மாற்றப்பட்டது), தென்னாப்பிரிக்காவின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றாகும். சுவாசி,சோசா,டெபேலே, சுலு மொழிகளில் இதன் பொருள் கிழக்கு அல்லது நேரடி மொழிபெயர்ப்பாக "சூரியன் உதிக்கும் இடம்" ஆகும். இந்த மாகாணம் தென்னாப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது; குவாசுலு-நதால் மாகாணத்திற்கு வடக்கிலும் சுவாசிலாந்து, மொசாம்பிக் நாடுகளின் எல்லையிலும் அமைந்துள்ளது. இது தென்னாப்பிரிக்காவின் நிலப்பகுதியில் 6.5% ஆகும். வடக்கில் லிம்போபோ, மேற்கில் கடெங், தென்மேற்கில் விடுதலை இராச்சியம் மாகாணங்களுடனும் தெற்கில் குவாசுலு-நதால் மாகாணத்துடன் எல்லைகளைக் கொண்டுள்ளது. இதன் தலைநகரமாக நெல்சுபுரூய்ட் உள்ளது. 1994இல் மாகாணங்கள் சீரமைக்கப்படுவதற்கு முன்னதாக இது டிரான்சுவாலின் அங்கமாக இருந்தது.

இம்புமலாங்கா
இம்புமலாங்கா-இன் கொடி
கொடி
குறிக்கோளுரை: Omnia labor vincit (உழைப்பே அனைத்தையும் வெல்லும்)
Map showing the location of Mpumalanga in the eastern part of South Africa
தென்னாப்பிரிக்காவின் வரைபடத்தில் இம்புமலாங்காவின் அமைவிடம்
நாடுதென்னாப்பிரிக்கா
நிறுவனம்27 ஏப்ரல் 1994
தலைநகரம்நெல்சுபுரூய்ட் (இம்பாம்பேலா)
மாவட்டங்கள்
பட்டியல்
  • கெர்ட் சிபாந்தே
  • கங்கலா
  • எலன்சேனி
அரசு
 • வகைநாடாளுமன்ற முறை
 • பிரதமர்டேவிட் மபூசா (ஆ.தே.கா)
பரப்பளவு
[1]:9
 • மொத்தம்76,495 km2 (29,535 sq mi)
 • பரப்பளவு தரவரிசைதென்னாப்பிரிக்காவில் 8வது
உயர் புள்ளி
2,331 m (7,648 ft)
மக்கள்தொகை
 (2011)[1]:18[2]
 • மொத்தம்40,39,939
 • மதிப்பீடு 
(2015)
42,83,900
 • தரவரிசைதென்னாப்பிரிக்காவில் 6வது
 • அடர்த்தி53/km2 (140/sq mi)
  அடர்த்தி தரவரிசைதென்னாப்பிரிக்காவில் 3வது
மக்களினக் குழுக்கள்
[1]:21
 • கறுப்பர்90.7%
 • வெள்ளையர்7.5%
 • மாநிறத்தவர்0.9%
 • இந்தியர் (அ) ஆசியர்0.7%
மொழிகள்
[1]:25
 • சுவாதி27.7%
 • சுலு24.1%
 • சோங்க10.4%
 • டெபெலே10.1%
 • வடக்கத்திய சோத்தோ9.3%
நேர வலயம்ஒசநே+2 (தென்னாப்பிரிக்க சீர்தர நேரம்)
ஐஎசுஓ 3166 குறியீடுZA-MP
இணையதளம்www.mpumalanga.gov.za

மேற்சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Census 2011: Census in brief. Pretoria: Statistics South Africa. 2012. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780621413885. Archived from the original (PDF) on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2016-02-21.
  2. "Mid-year population estimates, 2015" (PDF). Statistics South Africa. 23 July 2015. பார்க்கப்பட்ட நாள் 6 July 2015.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இம்புமலாங்கா&oldid=3319735" இலிருந்து மீள்விக்கப்பட்டது