இயன்முறை மருத்துவத்திற்கான உலகக் கூட்டமைப்பு

இயன்முறை மருத்துவத்திற்கான உலகக் கூட்டமைப்பு (ஆங்கிலம்:WCPT) 1951 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது இயன்முறை மருத்துவத்திற்கான உலகின் ஒற்றைக்குரல் ஆகும். இதில் மொத்தம் 110க்கும் மேற்பட்ட உலக நாடுகள் உறுப்பினராக உள்ளன. இதன் மூலம் 450000 இயன்முறை மருத்துவர்கள் உலகமுழுவதும் அறியப்படுகின்றனர்.[1]

இயன்முறை மருத்துவத்திற்கான உலகக் கூட்டமைப்பு
நிறுவப்பட்டது1951
வகைஇலாப நோக்கற்ற அமைப்பு
உறுப்பினர்கள்
உலக நாடுகளின் 110 இக்கும் மேல் அங்கத்துவ அமைப்புகள்
தலைவர்
எம்மா ஸ்டோக்ஸ்
தலைமை நிர்வாக அதிகாரி
ஜோனாதன் குருஜீர்
வலைத்தளம்www.wcpt.org

இயன்முறை மருத்துவத்திற்கான உலகக் கூட்டமைப்பு இயன்முறை மருத்துவ வளர்ச்சிக்கும் உலகளாவிய சுகாதாரத்திற்காகவும் இயங்குகிறது. இக் கூட்டமைப்பு தனி மனித உயரிய தரமான சுகாதாரம் மற்றும் அறிவியல் சார்ந்த மருத்துவ ஆராய்வு, வைத்தியம் வழங்குதல் முதலியவற்றை நெறிப்படுத்துகிறது.[2]

இது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பு ஆகும். மேலும் ஐக்கிய இராஜ்யத்தில் பதிவு பெற்ற கூட்டமைப்பு ஆகும். மேலும் இது 1952 ஆம் ஆண்டு முதல் உலக சுகாதார அமைப்பு மூலம் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாக இருந்து வருகிறது.[3]

வரலாறு மற்றும் வளர்ச்சி தொகு

1951 ஆம் ஆண்டு 11 நிறுவன உறுப்பினர்களான ஆஸ்திரேலியா, கன்னடா, டென்மார்க், பின்லாந்து, பெரிய பிரித்தானியா, நியூஸிலாந்து, நார்வே, தென் ஆப்பிரிக்கா, மேற்கு ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள்[4] ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்து இந்த கூட்டமைப்பை உருவாக்கினர்.

முதல் சர்வதேச கூட்டமும் இரண்டாவது பொதுக்கூட்டமும் 1953 ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியம் நாட்டின் லண்டன் நகரில் நடந்தது. இதில் முதல் செயற்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.

இயன்முறை மருத்துவத்திற்கான உலகக் கூட்டமைப்பு துறை சார்ந்த வளர்ச்சி அறிக்கை மற்றும் கல்வியியல் வழிகாட்டுதல் வழங்குகிறது. இது ஐந்து மண்டல அமைப்புகளாக வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் சர்வதேச இயன்முறை மருத்துவ அமைப்புகளுடன் இணைந்துள்ளது. இதன் துணை அமைப்புகளாக 12 அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் உள்ளன.

கூட்டங்கள் தொகு

இயன்முறை மருத்துவத்திற்கான உலகக் கூட்டமைப்பின் கூட்டங்கள் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இயன்முறை மருத்துவத்திற்கான உலகக் கூட்டமைப்பின் கூட்டம் இயன்முறைமருத்துவத்தின் சர்வதேச அளவில் நடத்தப்படும் பெரிய கூட்டமான இதில் இயன்முறைமருத்துவர்கள், துறை சார்ந்த மருத்துவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மேலாளர்கள் மற்றும் கொள்கை தயாரிப்பாளர்களின் ஒருங்கிணைப்பு ஆகும். மேலும் இது துறை சார்ந்த வளர்ச்சி முன்னேற்றம் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகியன பற்றி விவாதிக்கும் கூட்டம் ஆகும். இயன்முறை மருத்துவத்திற்கான உலகக் கூட்டமைப்பின் கூட்டம் 2021 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் உள்ள துபாய் நகரில் நடைபெற உள்ளது.[5]

முந்தைய கூட்டங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "WCPT Member Organisations".
  2. "What is WCPT?".
  3. "World Health Organization membership profile".
  4. "WCPT 60th Anniversary publication" (PDF).
  5. ""அடுத்த கூட்டம்".