இயேசுவின் திரு இதய பசிலிக்கா, பாரிஸ்

இயேசுவின் திரு இதய பசிலிக்கா, பாரிஸ் (Basilica of the Sacred Heart of Paris) எனவும் பொதுவாக திரு இதய பசிலிக்கா (Sacré-Cœur Basilica) எனவும் சுருக்கமாக திரு இதயம் (Sacré-Cœur; பிரெஞ்சு மொழி: Basilique du Sacré-Cœur, [sakʁe kœʁ]) எனவும் அழைக்கப்படுவது பாரிசில் உள்ள ஒரு கத்தோலிக்க திருச்சபை கோயிலும் சிறிய பசிலிக்காவும் ஆகும். இது இயேசுவின் திரு இதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது ஒரு முக்கிய நிலக் குறியாக நகரத்தின் உயர் புள்ளியில் அமைந்துள்ளது. திரு இதயம் அரசியல், கலாச்சார நினைவிடமாகவும் திகழ்கிறது.[1] அத்துடன் இயேசுவின் திரு இதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இது கிறித்துவின் அன்பையும் இரக்கத்தையும் தெரிவிப்பதாகவும் அமைந்துள்ளது.[2] நினைவுச்சின்னம் தினமும் காலை 6:30 மணி முதல் இரவு 10:30 மணி வரை திறந்திருக்கும்.[3]

இயேசுவின் திரு இதய பசிலிக்கா
Basilique du Sacré-Cœur (பிரெஞ்சு)
இயேசுவின் திரு இதய பசிலிக்கா
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்பாரிஸ், பிரான்சு
புவியியல் ஆள்கூறுகள்48°53′12.1″N 2°20′34.8″E / 48.886694°N 2.343000°E / 48.886694; 2.343000
சமயம்கத்தோலிக்க திருச்சபை
மாகாணம்பாரிஸ் மறைமாவட்டம்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு1919
நிலைசிறிய பசிலிக்கா
இணையத்
தளம்
Basilica of the Sacré Cœur

குறிப்புகள்

தொகு
  1. An amendement that would have specified that the undertaking "was not solely a protestation of the taking up of arms by the Commune, but a sign of appeasement and concord" was rejected. (David Harvey, "Monument and Myth" Annals of the Association of American Geographers 69.3 (September 1979, pp. 362–381) p 377).
  2. Raymond Anthony Jonas, France and the cult of the Sacred Heart: an epic tale for modern times, (University of California) 2000, ch. "Building the Church of the National Vow".]]
  3. "Sacré-Cœur". Archived from the original on 17 பிப்ரவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 18 February 2023. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unfit URL (link)

வெளி இணைப்புகள்

தொகு