இரங்கு சௌரியா

இந்திய சமூக சேவகர்

இரங்கு சௌரியா (Rangu Souriya) இந்தியாவைச் சேர்ந்த சமுக ஆர்வலராகவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சமூக சேவகராகவும் அறியப்படுகிறார். டார்ச்சிலிங்கு, வடகிழக்கு இந்தியா மற்றும் நேபாளத்தில் பாலியல் கடத்தல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட சிலிகுரியை தளமாகக் கொண்ட ஓர் இலாப நோக்கற்ற அமைப்பான கஞ்சன்சங்கா உத்தர் கேந்திராவை இவர் நிறுவினார். இவருக்கு 2011 ஆம் ஆண்டில் காட்ஃப்ரே பிலிப்சு தேசிய வீரதீர விருது வழங்கப்பட்டது. .

இரங்கு சௌரியா
Rangu Souriya
தேசியம்இந்தியர்
பணிசமுக செயற்பாட்டாளர்]]
விருதுகள்காட்ஃப்ரே பிலிப்சு தேசிய வீரதீர விருதுகள்

வேலை தொகு

2004 ஆம் ஆண்டில், அனுராதா கொய்ராலா மற்றும் மைதி நேபாள குழுவிடம் வழிகாட்டுதலைப் பெற சூரியா சௌரியா காத்மாண்டு நகரத்திற்குச் சென்றார். அவர்களுடன் உரையாடி, கற்றுக்கொண்ட பிறகு, இவர் மீண்டும் டார்ச்சிலிங்கிற்கு வந்து கஞ்சன்சங்கா உத்தர் கேந்திராவைத் தொடங்கினார். [1] அதிலிருந்து இவரும் அமைப்பில் இருந்த மற்றவர்களும் பாட்னா, டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் இருந்து 1100 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட சிறுமிகளை மீட்டுள்ளனர் . [2] [3]

அங்கீகாரம் தொகு

2011 ஆம் ஆண்டில் காட்ஃப்ரே பிலிப்சு தேசிய வீரதீரச் செயலுக்கான விருதை சௌரியா வழங்கப்பட்டது இவருக்கான ஓர் அங்கீகாரமாகும். 2009 ஆம் ஆண்டில் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சம்மேளனத்தின் பெண் சாதனையாளர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. மேலும், இவரின் சேவைகளுக்காக இருபதுக்கும் மேற்பட்ட பிராந்திய அமைப்புகள் இவரை கௌரவித்துள்ளன. [3]

2016 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் (இந்தியா) 100 சிறந்த பெண்கள் தேர்ந்தெடுப்பதற்கான முன்முயற்சியின் ஒரு பகுதியாக இவர் பட்டியலிடப்பட்டார். இப்பட்டியல் நாடு முழுவதும் தங்கள் சமூகங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் 100 பெண்களை அங்கீகரித்து கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, [4] [5] ] [6]

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "An interview with founder member of 'Kanchanjunga Uddhar Kendra' – Ms. Rangu Souria". DarjeelingTimes.com. பார்க்கப்பட்ட நாள் 25 January 2016.
  2. "Rescuing poor girls from traffickers' traps". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 24 January 2016.
  3. 3.0 3.1 "Rangu Souriya - Saviour for Trafficked Girls". The New Indian Express. Archived from the original on 31 January 2016. பார்க்கப்பட்ட நாள் 25 January 2016.
  4. "'#100Women Initiative' launched by the Union Ministry of Women and Child Development in collaboration with Facebook to recognize 100 women achievers across India". Press Information Bureau, Government of India. பார்க்கப்பட்ட நாள் 25 January 2016.
  5. "National Honour for GORKHA ICON – Rangu Souriya". DarjeelingTimes.com. பார்க்கப்பட்ட நாள் 25 January 2016.
  6. "National Honour for GORKHA ICON – Rangu Souriya". DarjeelingTimes.com. பார்க்கப்பட்ட நாள் 25 January 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரங்கு_சௌரியா&oldid=3901751" இலிருந்து மீள்விக்கப்பட்டது