இரண்டாம் உதய் சிங்
இரண்டாம் உதய் சிங் (Udai Singh II) (4 ஆகஸ்ட் 1522 - 28 பிப்ரவரி 1572) மேவாரின் ராணாவும் இன்றைய இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்ப்பூர் நகரத்தை நிறுவியவரும் ஆவார். உதய்ப்பூர் இராச்சியத்தின் 12 ஆவது ஆட்சியாளரான இவர் ராணா சங்கா [1] மற்றும் பூந்தியின் இளவரசி இராணி கர்ணாவதியின் நான்காவது மகன்.
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஉதய் சிங் ஆகஸ்ட் 1522 இல் சித்தோர்காரில் பிறந்தார். அவரது தந்தை ராணா சங்காவின் மரணத்திற்குப் பிறகு, [2] இரண்டாம் ரத்தன் சிங் மன்னராக முடிசூட்டப்பட்டார். இரண்டாம் ரத்தன் சிங் 1531 இல் படுகொலை செய்யப்பட்டார். அவருக்குப் பிறகு அவரது சகோதரர் மகாராணா விக்ரமாதித்ய சிங் ஆட்சிக்கு வந்தார். விக்ரமாதித்யாவின் ஆட்சியின் போது, குசராத்தின் முசாபரிட் சுல்தான் பகதூர் ஷா 1535 இல் சித்தூரைக் கைப்பற்றியபோது, உதய் சிங் பாதுகாப்புக்காக பூந்திக்கு அனுப்பப்பட்டார். [1] 1537 இல், வன்வீர் விக்ரமாதித்யனைக் கொன்று அரியணையைக் கைப்பற்றினார். அவர் உதய் சிங்கையும் கொல்ல முயன்றார். ஆனால் உதய்யின் செவிலியர் பன்னா டை தனது சொந்த மகனை இவருக்கு பதிலாக தியாகம் செய்து கும்பல்கருக்கு அழைத்துச் சென்றார். ஆட்சியாளர் ஆஷா ஷா தெபுராவின் (மகேஸ்வரி மஜஹான்) மருமகனாக மாறுவேடமிட்டு இரண்டு ஆண்டுகள் கும்பல்கரில் ரகசியமாக வாழ்ந்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஉதய் சிங்குக்கு 24 மகன்கள் இருந்தனர். இவரது இரண்டாவது மனைவி, சஜ்ஜாபாய் சோலங்கினி மூலம் இவருக்கு சக்தி சிங் மற்றும் விக்ரம் தேவ் சிங் என இரு மகன்கள் பிறந்தனர். இவரது விருப்பமான மனைவி தீர்பாய் பத்தியானி மூலம் ஜக்மல் சிங், குன்வர் அகர் சிங், குன்வர் பச்யாத் சிங் ஆகியோரைப் பெற்றெடுத்தார். தீர்பாய் உதய் சிங்கிற்கு இரண்டு பெண் குழந்தைகளையும் பெற்றெடுத்தார். ராணி வீர்பாய் ஜலா குன்வர் சாகர் சிங் மற்றும் குன்வர் ராய் சிங் ஆகியோரின் தாயுமாவார்.[3]
ஆட்சி
தொகுஉதய்சிங் 1540 இல், மேவார் பிரபுக்களால் கும்பல்கரில் முடிசூட்டப்பட்டார். இவரது முதல் மனைவியான மகாராணி ஜெய்வந்தபாய் சொங்காரா (ஜலோரின் அகீராஜ் சோங்கராவின் மகள்) மூலம் இவரது மூத்த மகன் மகாராணா பிரதாப் அதே ஆண்டில் பிறந்தார்.[4]
1544 இல் சேர் சா சூரி மால்தேவை சம்மல் போரில் தோற்கடித்த பிறகு மேவார் மீது படையெடுத்தார். உதய் சிங் மேவாரில் உள்நாட்டுப் போரைச் சமாளித்தார். மேலும், சூர் பேரரசுடன் போரிடுவதற்கான போதுமான படைகள் இல்லாததால் ஷேர்ஷா மேவார் மக்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை என்ற நிபந்தனைகளின் பேரில் சேர் சா சூரியிடம் சித்தோர்காரை ஒப்படைத்தார். ஷேர்ஷாவும் முற்றுகை நீடித்தால் அதற்கான பின்விளைவுகள் கடினமாக இருக்கும் என்பதால் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டார்.[5] [6]
உதய் சிங் மற்றும் இவரது குழு சித்தோர்கார் போரினால் அடிக்கடி தாக்கப்படுவதால் மிகவும் பாதிக்கப்படக்கூடியது என்று கருதினர். இதனால் மேவாரின் தலைநகரை பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற திட்டமிட்டனர். 1559 ஆம் ஆண்டில் மேவாரின் கிர்வா பகுதியில் பணிகள் தொடங்கப்பட்டன. அதே ஆண்டில் விவசாயத்தை ஊக்குவிக்க ஏரி ஒன்று உருவாக்கப்பட்டது. ஏரி 1562 இல் கட்டி முடிக்கப்பட்டது. மேலும், புதிய தலைநகரம் உதய்ப்பூர் என்று அழைக்கப்பட்டது. [7]
1557 இல், ஹர்மடா போரில் மால்தேவ் ரத்தோரால் உதய் சிங் தோற்கடிக்கப்பட்டார். மேலும் மெர்டாவை அவரிடம் இழந்தார். [7]
1562 இல், மால்வா சுல்தானகத்தின் கடைசி ஆட்சியாளரான பாஸ் பகதூரின் இராச்சியம் அக்பரால் முகலாயப் பேரரசுடன் இணைக்கப்பட்ட காரணத்தால் அவருக்கு உதய்சிங் அடைக்கலம் கொடுத்தார்.
செப்டம்பர் 1567 இல், இவரது மகன் சக்தி சிங் தௌல்பூரிலிருந்து இவரிடம் வந்து சித்தோர்காரைக் கைப்பற்றும் அக்பரின் திட்டத்தைக் கூறினார். [8] கவிஞர் சியாமல்தாஸின் கூற்றுப்படி, உதய் சிங் போர்க் குழுவை அழைத்தார். பிரபுக்கள் சித்தோர்கரரில் ஒரு காவற்படையை விட்டு மலைகளில் இளவரசர்களுடன் தஞ்சம் புகுமாறு அறிவுறுத்தினர். அக்டோபர் 23, 1567 இல் அக்பர் சித்தூர் அருகே தனது முகாமை அமைத்தார். சித்தோர்காரை இவரது விசுவாசமான தலைவர்களான ராவ் ஜெய்மல் மற்றும் பட்டாவின் கைகளில் ஒப்படைத்துவிட்டுச் சென்றார். உதய் சிங் கோகுண்டாவிற்கு சென்று தங்கினார் (பின்னர் இது இவரது தற்காலிக தலைநகராக மாறியது) அக்பர் 23 பிப்ரவரி 1568 அன்று நான்கு மாத கால முற்றுகைக்குப் பிறகு சித்தோர்கார் அக்பர் வசம் சென்றது. முற்றுகையினால் நகரம் மோசமாக தாக்கப்பட்டது. சித்தோர்காரின் கோட்டை அழிக்கப்பட்டது. மேலும், 25-40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். [9] [10] சித்தோர்கார் முகலாயர்களிடம் வீழ்ந்ததால், உதய் சிங் பின்னர் தனது தலைநகரை உதய்ப்பூருக்கு மாற்றினார்.
இறப்பு
தொகுஉதய் சிங் 1572 இல் கோகுண்டாவில் இறந்தார். இவரது மரணத்திற்குப் பிறகு, ஜக்மல் அரியணையைக் கைப்பற்ற முயன்றார். ஆனால் மேவார் பிரபுக்கள் ஜக்மலை வெற்றிபெற விடாமல் தடுத்தனர். மேலும், 1 மார்ச் 1572 அன்று மகாராணா பிரதாப் சிங்கை அரியணையில் அமர்த்தினர் [4]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 Tod, James (1829, reprint 2002).
- ↑ Mahajan V.D. (1991, reprint 2007) History of Medieval India, Part II, S. Chand, New Delhi, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-219-0364-5, p.11
- ↑ Rana 2004, p. 28
- ↑ 4.0 4.1 Tod, James (1829, reprint 2002). பிழை காட்டு: Invalid
<ref>
tag; name "tod1" defined multiple times with different content - ↑ History of Medieval India: From 1000 A.D. to 1707 A.D. By Radhey Shyam Chaurasia pg.181
- ↑ The Cambridge History of India pg.55
- ↑ 7.0 7.1 Hooja, Rima (2006). A History of Rajasthan, Section:The State of Mewar, AD 1500- AD 1600. Rupa & Company. pp. 462–463. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788129108906. பார்க்கப்பட்ட நாள் 1 May 2021.Hooja, Rima (2006).
- ↑ Rana 2004, p.31
- ↑ Richards, John F. (1995) [1993].
- ↑ Chandra, Satish (2007-07-30). Medieval India : from Sultanat to the Mughals. Har-Anand Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-241-0522-7.