இராணி கர்ணாவதி

ராணி கர்ணாவதி (Rani Karnavati) என அழைக்கப்படும் இராணி கர்மாவதி என்பவர் இந்தியாவின் பூந்தி நகரத்தின் இளவரசியும் மற்றும் தற்காலிக ஆட்சியாளராகவும் இருந்தார். இவர் மேவார் இராச்சியத்தின் தலைநகரான சித்தோர்கரைச் சேர்ந்த ராணா சங்கா என்பவரை மணந்தார். இவருக்கு ராணா விக்ரமாதித்யன் மற்றும் ராணா உதய் சிங் என்ற இரண்டு இளவரசர்கள் இருந்தனர். மேலும் இவர், புகழ்பெற்ற மகாராணா பிரதாப்பின் பாட்டியுமாவார். தனது கணவர் ராணா சங்கா இறந்த பின்னர், சிறிது காலம் 1527 முதல் 1533 வரை தனது மகன் ராணா விக்ரமாதித்யன் சிறுவனாக இருந்ததால் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். இவர் தனது கணவரைப் போலவே கடுமையாக இருந்தார். தவிர்க்க முடியாமல் குசராத் இராணுவத்திடம் விழும் வரை சித்தோரை ஒரு சிறிய படையினருடன் பாதுகாத்தார். இவர் தப்பி ஓட மறுத்து, தனது கௌரவத்தைப் பாதுகாக்க கூட்டுத் தீக்குளிப்பு மூலம் தீயிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

சுயசரிதை

தொகு

கி.பி 1526இல் பாபர் டெல்லி சிம்மாசனத்தை கைப்பற்றிய பின்னர், பாபருக்கு எதிராக ராஜபுத்ர அரசர்களின் கூட்டமைப்பை ராணா சங்கிராம் சிங் என்கிற மேவாரின் ராணா சங்கா வழிநடத்தினார். பின்னர், 1527இல் நடந்த கனுவா போரில், ஒருங்கிணைந்த ராஜபுத்ர படைகள் தோற்கடிக்கப்பட்டன. இந்தப்போரில் காயம்பட்ட ராணா சங்கா சிறிது காலத்திலேயே இறந்தார். தனது கணவர் இறந்ததும், இராணி கர்ணாவதி, சிறுவனாக இருந்த தனது மூத்த மகன் விக்ரமாதித்யனின் பெயரில் ஆட்சியை ஏற்றுக்கொண்டார். இதற்கிடையில், குசராத்தை சேர்ந்த பகதூர் ஷா என்பவரால் மேவார் இரண்டாவது முறையாக தாக்கப்பட்டு வீழ்த்தப்பட்டது. இது ராணிக்கு மிகுந்த கவலையாக இருந்தது.

உள்ளூர் விரோத பிரபுக்கள் விக்ரமாதித்யனுக்காகப் போராடத் தயாராக இல்லை. உடனடி யுத்தம் சிசோடியர்களின் வரலாற்றில் மற்றொரு கறை என்று உறுதியாகத் தெரிந்தது. ராணி கர்ணாவதி சிசோடியர்களின் கௌரவத்திற்காக முன்வருமாறு பிரபுக்களுக்கு கடிதம் எழுதினார். மேலும் விக்ரமாதித்யனுக்காக இல்லாவிட்டாலும் மேவாருக்காக போராட பிரபுக்களை வற்புறுத்தினர். விக்ரமாதித்யனும்ம் உதய் சிங்கும் போரின் போது அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக பூந்தி செல்ல வேண்டும் என்பதே அவர்களின் ஒரே நிபந்தனை. ராணியும் தனது மகன்களை பூந்திக்கு அனுப்பி வைத்தார். ராணி முகலாயப் பேரரசர் உமாயூனிடம் உதவி கேட்டு ஒரு ராக்கி கயிறை அனுப்பினார். இதனால் இவரது பெயர் ரக்சா பந்தன் பண்டிகையுடன் மாற்றமுடியாமல் இணைக்கப்பட்டது.[1][2]

சித்தோரின் வீரர்கள் கடுமையாகப் போராடினார்கள், ஆனால் எதிரிகள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தனர். மேலும் உமாயூனால் சரியான நேரத்தில் உதவிக்கு வர இயலவில்லை [3] பஹதூர் ஷா சித்தோர் நகருக்குள் நுழைந்து இரண்டாவது முறையாக அதைக் வெற்றிக் கொண்டார். தோல்வியடைந்த கர்ணாவதியும் அரசவையின் பிற பெண்களும் கி.பி 1535 மார்ச் 8 அன்று கூட்டுத் தீக்குளிப்பு மூலம் தற்கொலை செய்து கொண்டனர்.[4][5] உமாயூன் தாமதமாக உதவினாலும், 1535இல் பகதூர் ஷாவிடமிருந்து மாண்டுவைக் கைப்பற்றி கர்ணாவதியின் மரணத்திற்குப் பழிவாங்கினார்.

மேற்கோள்கள்

தொகு

குறிப்புகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராணி_கர்ணாவதி&oldid=3932351" இலிருந்து மீள்விக்கப்பட்டது