பூந்தி நகரம்
பூந்தி (Bundi) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் பூந்தி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இந்நகரத்தின் மக்கள்தொகை 1,04,457 ஆகும். [1] பூந்தி நகரம் படிக்கிணறு, அரண்மனை மற்றும் கோட்டைக்கும் பெயர் பெற்றது. மேலும் இது முன்னாள் பூந்தி இராச்சியத்தின் தலைநகரம் ஆகும்.
பூந்தி
बूंदी | |
---|---|
நகரம் | |
இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் பூந்தியின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 25°26′N 75°38′E / 25.44°N 75.64°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | இராஜஸ்தான் |
மாவட்டம் | பூந்தி |
பெயர்ச்சூட்டு | பூந்தா மீனா (பழங்குடியினத் தலைவர்) |
ஏற்றம் | 268 m (879 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 1,04,457 [1] |
• அடர்த்தி | 193/km2 (500/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 323001 |
ஐஎசுஓ 3166 குறியீடு | RJ-IN |
பாலின விகிதம் | 922 ♂/♀ |
இணையதளம் | bundi |
புவியியல்
தொகுபூந்தி நகரம், கோட்டாவிலிருந்து 35 கிமீ தொலைவிலும், இராஜஸ்தான் மாநிலத் தலைநகரம் ஜெய்பூரிலிருந்து 210 கிமீ தொலைவிலும் உள்ளது. 25°26′N 75°38′E / 25.44°N 75.64°E பாகையில் அமைந்துள்ள பூந்தி நகரம், கடல் மட்டத்திலிருந்து 368 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்நகரத்தின் மூன்று பக்கங்களிலும் ஆரவல்லி மலைத்தொடர்கள் உள்ளது. நான்கு நுழைவு வாயில்கள் கொண்ட கோட்டைச் சுவர்கள், இந்நகரத்தைச் சுற்றிலும் அமைந்துள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
தொகு2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, பூந்தி நகரத்தின் மக்கள்தொகை 1,04,919 ஆகும். [2][3] பூந்தி நகர மக்கள்தொகையில் ஆண்கள் 54,485 ஆகவும்; பெண்கள் 50,434 ஆகவும் உள்ளனர். [1]சராசரி எழுத்தறிவு 82.04 % ஆகவுள்ளது. பாலின விகிதம், ஆயிரம் ஆண்களுக்கு 926 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகையில் இந்துக்கள் 74.29 % ஆகவும்; இசுலாமியர் 21.47% ஆகவும்; சமணர்கள் 3.12% ஆகவும்; பிற சமயத்தவர்கள் 1.12% ஆகவும் உள்ளனர்.
-
பூந்தி இராச்சிய கர் அரண்மனையின் ஓவியக் கூடம்
-
பழைய பூந்தி நகரத் தெரு
-
பூந்தி நகரப் பெண், ஆண்டு 1986
-
பூந்தி நகரத்தின் தாயும், சேயும்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Provisional Population Totals, Census of India 2011" (PDF). Office of the Registrar General - India. 2011. பார்க்கப்பட்ட நாள் 2013-01-02.
- ↑ Bundi City Census 2011 data
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.