இரண்டாம் யசுவந்த்ராவ் ஓல்கர்

இரண்டாம் யசுவந்த்ராவ் ஓல்கர் (Yeshwant Rao II Holkar) (1908 செப்டம்பர் 6 - 1961 திசம்பர் 5) இவர் மராட்டியர்களின் ஓல்கர் வம்சத்தைச் சேர்ந்த இந்தோரின் மகாராஜா ஆவார்.( இந்தூர் அரசு ).

இரண்டாம் யசுவந்த்ராவ் ஓல்கர்
Bernard Boutet de Monvel 001.jpg
பெர்னார்ட் பூட்டெட் டி மோன்வெல் வரைந்த உருவப்படம் 1934
இந்தோரின் ஓல்கர் மகாராஜா
ஆட்சிக்காலம்1926 பிப்ரவரி 26 – 1948 மே 28
முடிசூட்டுதல்1926 மார்ச் 11, இந்தோரின் ஜுனா ராஜவாடா அரண்மனை
முன்னையவர்மூன்றாம் துகோஜிராவ் ஓல்கர்
பின்னையவர்மன்னராட்சி ஒழிக்கப்பட்டு இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது
இந்தோரின் ஓல்கர் மகாராஜா என்ற பட்டம்
Pretendence1948 ,ஏ 28 – 1961 திசம்பர் 5
பின்னையவர்உஷாதேவி ஓல்கர்
பிறப்புசெப்டம்பர் 6, 1908(1908-09-06)
இந்தோர், இந்தூர் அரசு, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு5 திசம்பர் 1961(1961-12-05) (அகவை 53)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
துணைவர்மகாராணி சன்யோகிதா பாய் ஓல்கர்
மகாராணி மார்கரெட் ஓல்கர்
மகாராணி இயூபீமியா ஓல்கர்
குடும்பம்உறுப்பினர்இளவரசன் சிவாஜிராவ் ஓல்கர்
மகாராணி உஷாதேவி ஓல்கர்
மரபுஓல்கர் வம்சம்
தந்தைமூன்றாம் துகோஜிராவ் ஓல்கர்
தாய்சரசுவதி பாய்
மதம்இந்து சமயம்

சுயசரிதைதொகு

இவர் ஆக்சுபோர்டில் உள்ள சீம் பள்ளி, சார்ட்டர்ஹவுஸ் மற்றும் கிறித்துவ தேவாலயப் பள்ளி ஆகியவற்றில் கல்வி பயின்றார் .

 
மகாராஜா யசுவந்த்ராவ், 1930

இவர் தனது தந்தை மூன்றாம் துகோஜிராவ் ஓல்கருக்குப் பின் பதவியேற்றார். துகோஜிராவ் 1926 பிப்ரவரி 26 அன்று இவருக்கு ஆதரவாக பதவி விலகினார். யசுவந்த்ராவ் 1926 மார்ச் 11 அன்று ஒரு ஆட்சிமன்றக் குழுவின் கீழ் அரியணையில் அமர்ந்தார். பின்னர், இவர் 1930 மே 9 அன்று முழு அதிகாரங்களுடன் ஆட்சி புரிந்தார். 1935 சன்வரி 1 அன்று இவர் இந்திய பேரரசின் நட்சத்திரத்தின் ஒழுங்கு ஆனார். இவர் இந்தோர் மாநிலத்திற்காக ஒரு சட்டமன்றத்தை அமைத்து, ஒரு பிரதமர் மற்றும் மூன்று அமைச்சர்களுடன் ஒரு அமைச்சரவையை உருவாக்கினார். இந்தோரின் பிரிட்டிசு அரசப்பிரதிநிதி கே.எஸ். பிட்ஜ், மகாராஜா யசுவந்த் வெளிநாட்டில் அதிக காலம் செலவளித்ததாக குறிப்பிட்டுள்ளார். கிறிஸ்டியின் கலை இயக்குனர் அமின் ஜாபர் இதை மஹாராஜாவின் கலாச்சாரம் மேற்கு நோக்கி திரும்புவதை எடுத்துக்காட்டுவதாக கூறினார்.கிறார். [1]

1947 ஆகத்து 11 அன்று இவர் இந்தியாவுடன் இணையும் ஆவணத்தில் கையெழுத்திட்டார். இந்தோர் மாநிலம் 1948 மே 28 இல் இந்திய ஒன்றியத்துடன் சேர்க்கப்பட்டது. 1956 அக்டோபர் 31 வரை இந்த புதிய மாநிலத்தின் இரண்டாவது ராஜபிரமுகராகப் பணியாற்றினார். பின்னர், இவர் ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றினார்.

மாணிக்கத் தோட்டம்தொகு

1930 ஆம் ஆண்டில் இந்தோரில் மாணிக்கத்தோட்டம் என்ற ஒரு அரண்மனையை நிர்மாணித்தார். ஜெர்மனியைச் சேர்ந்த எக்கார்ட் முத்தீசியஸ் (1904-1989) என்றக் கட்டிடக் கலைஞர் இதை வடிவமைத்தார். அந்த காலத்தில் மகாராஜா இளம் வயதில் இருந்தார். அரண்மனைக்கு வெளியேயும் உள்ளேயும் பணிகள் தாமதமாக எழில்படுக் கலை மற்றும் சர்வதேச கட்டிடக்கலை மற்றும் நவீன பாணியில் கட்டப்பட்டன. [2]

திருமணம்தொகு

 
பெர்னார்ட் பூட்டெட் டி மோன்வெல் வரைந்த இந்தோரின் மகாராணி (1934)

1924 ஆம் ஆண்டில் இவர் சன்யோகிதா பாய் என்பவரை மணந்தார். யசுவந்த் ராவ் மற்றும் இவரது மனைவி சன்யோகிதா இருவரும் இங்கிலாந்தில் படித்தனர். [3] இருவரும் சேர்ந்து ஐரோப்பாவுக்குப் பயணம் செய்தனர். மேலும் 1927 இல் மேன் ரேவ் என்ற அமெரிக்கப் புகைப்படக் கலைஞர் இவர்கள் இருவரையும் புகைப்படம் எடுத்தார். 1929 மற்றும் 1934 ஆம் ஆண்டுகளில் பெர்னார்ட் பூட்டெட் டி மோன்வெல் என்பவர் இவர்களது உருவப்படத்தை வரைந்தார். [4]

இவரது மனைவி சுவிட்சர்லாந்தில் இருக்கும்போது உடல்நலமின்மை காரணமாக தனது 22 வயதிலேயே காலமானார். [5] [6] [7] 1938 ஆம் ஆண்டில் யசுவந்த் மார்கரெட் லாலர் என்பவரை இரண்டாவதாக மணந்தார். பின்னர், இவர்களுக்கிடியே ஏற்பட்ட விவாகரத்துக்குப் பிறகு, லாஸ் ஏஞ்சலஸின் யூபீமியா வாட் என்பவரை மணந்தார்.

இறப்புதொகு

இவர் 1961 திசம்பர் 5 அன்று மும்பை மருத்துவமனையில் காலமானார்.

மேலும் காண்கதொகு

குறிப்புகள்தொகு

  • Jackson, Anna; Jaffer, Amin (1 September 2009), Maharaja, London: V & A Publishing, ISBN 978-1-85177-573-6, 21 January 2014 அன்று பார்க்கப்பட்டது Jackson, Anna; Jaffer, Amin (1 September 2009), Maharaja, London: V & A Publishing, ISBN 978-1-85177-573-6, 21 January 2014 அன்று பார்க்கப்பட்டது Jackson, Anna; Jaffer, Amin (1 September 2009), Maharaja, London: V & A Publishing, ISBN 978-1-85177-573-6, 21 January 2014 அன்று பார்க்கப்பட்டது

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Yashwant Rao Holkar II
என்பதின் ஊடகங்கள் உள்ளன.