இரவிபேரூர்
இரவிபேரூர் (Eraviperoor) என்பது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். திருவல்லை தாலுக்காவின் ஒரு பகுதியாவும் ஆறன்முளா சட்டப்பேரவைத் தொகுதியின் ஒரு பகுதியாகவும் இரவிபேரூர் கிராமம் உள்ளது. [1]
இரவிபேரூர் | |
---|---|
கிராமம் | |
Country | இந்தியா |
State | கேரளம் |
District | பத்தனம்திட்டா |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 26,038 |
மொழிகள் | |
• அலுவலக | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
அ.கு.எண் | 689542 |
வாகனப் பதிவு | KL-27 |
மக்கள்தொகை பரம்பல்
தொகு2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி இந்நகரின் மக்கள் தொகை 26,038 ஆகும். இம்மக்கள் தொகையில் 12,324 நபர்கள் ஆண்கள் மற்றும் 13,714 நபர்கள் பெண்கள்[1] ஆவர். மத்திய கேரளத்தில் பத்தனம் திட்டா மாவட்டத்தின் நிர்வாகப்பிரிவுக்குள் ஒரு கிராமமாகவும் ஆறன்முளா சட்டப்பேரவைத் தொகுதியிலும் இரவிபேரூர் அமைந்துள்ளது.
பெயர்க்காரணம்
தொகுஇரவிபேரூர் என்பதன் பொருள் இரவியின் நிலம் என்பதாகும். இப்பகுதியை ஆட்சிபுரிந்த அரசன் பெயர் இரவி என்பதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் இப்பெயர் இரவிபேரூர் என மாறியது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Census of India: Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.