இரவி சோப்ரா
இரவி சோப்ரா ( Ravi Chopra ) (27 செப்டம்பர் 1946-12 நவம்பர் 2014) ஓர் இந்திய திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளரும் ஆவார். மகாபாரதம் (1988 ) என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை இயக்கியதற்காக நன்கு அறியப்பட்டவர்.
இரவி சோப்ரா | |
---|---|
பிறப்பு | லாகூர், பஞ்சாப், பிரித்தானிய இந்தியா | 27 செப்டம்பர் 1946
இறப்பு | 12 நவம்பர் 2014 மும்பை, மகாராட்டிரம், இந்தியா | (அகவை 68)
கல்வி | புனித சேவியரின் கல்லூரி, மும்பை (இளங்கலை) |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1969–2009 |
வாழ்க்கைத் துணை | ரேணு (தி. 1975) |
பிள்ளைகள் | 2 |
வாழ்க்கை.
தொகுஇரவி சோப்ரா தயாரிப்பாளரும் மற்றும் இயக்குனருமான பி. ஆர். சோப்ராவின் மகனும், யஷ் சோப்ராவின் மருமகனும் ஆவார். ஆதித்யா சோப்ரா மற்றும் உதய் சோப்ரா ஆகியோர் இவரது உறவினர்களாவர்.
1975 ஆம் ஆண்டு முதல் ரேணு என்பவரை மணந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தொலைக்காட்சி தொழில்
தொகு1988-1990 ஆம் ஆண்டில் ஒளிபரப்பப்பட்ட மிகவும் வெற்றிகரமான மகாபாரதம் எனும் தொலைக்காட்சித் தொடரையும் , 2002 இல் ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சி குறுந்தொடரான இராமாயணத்தையும் ரவி இயக்கியிருந்தர். பாகவதத்தை அடிப்படையாகக் கொண்டு விஷ்ணு புராணம் மற்றும் மா சக்தி போன்ற புராண நிகழ்ச்சிகளையும் இயக்கினார். இவரது ஆப் பேட்டி என்ற தொலைக்காட்சித் தொடர் மிகவும் பிரபலமான ஒன்றாகும்
கதைத் திருட்டு சர்ச்சை
தொகுஇரவி சோப்ரா இயக்கியிருந்த பந்தா யே பிந்தாஸ் ஹை என்ற படம் 20ஆம் சென்சுரி பாக்ஸ் என்ற திரைப்பட நிறுவனம் தனது தயாரிப்பான அகாதமி விருது பெற்ற மை கசின் வின்னி என்ற படத்தைத் திருடி வெளியிட்டதாக குற்றம் சாட்டி 2009 ஆம் ஆண்டில் ஒரு சட்ட அறிவிப்பை வழங்கியது.[1][2] சோப்ராவும் தயாரிப்பு நிறுவனமான பி. ஆர். பிலிம்சும் மே 2009 இல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை மறுத்தனர். மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் படத்தின் வெளியீடு ஜூன் 2009 வரை தாமதப்படுத்தப்பட்டது.[3][4]
20வது செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனம், தங்கள் பட உரிமையை வாங்காமல் நகலெடுத்ததற்காக $14 லட்சம் இழப்பீடு கோரி பி. ஆர். பிலிம்ஸ் மீது வழக்குத் தொடர்ந்தது.[4][5] இறுதியில் படத்தின் தயாரிப்பாளரிடமிருந்து $200,000 பெற ஒப்புக்கொண்டது.[6] 2014 இல் ரவி சோப்ரா இறந்ததிலிருந்து, இது திரையரங்குகளில் வெளியிடப்படவில்லை.[7][8]
இறப்பு
தொகுநுரையீரல் புற்றுநோய் பாதிக்கப்பட்ட இரவி வேலூர், கிருத்தவ மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.[9] பின்னர்,12 நவம்பர் 2014 அன்று மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் தனது 68 வயதில் இறந்தார்.[10][11][12]
விருதுகள்
தொகு1985 ஆம் ஆண்டில், இரவி சோப்ரா தனது ஆஜ் கி ஆவாஜ் (1984) படத்திற்காக 32 வது பிலிம்பேர் விருதுகளில் சிறந்த இயக்குனருக்காக பரிந்துரைக்கப்பட்டார்.[13]
2004 ஆம் ஆண்டில், பாக்பன் (2003) படத்திற்காக சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் மற்றும் ஸ்கிரீன் விருதுகளிலும் சிறந்த இயக்குனர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார்.[14][15]
மேற்கோள்கள்
தொகு- ↑ "B R Films settles plagiarism charges with Fox". இந்தியன் எக்சுபிரசு. 8 August 2009 இம் மூலத்தில் இருந்து 3 December 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20121203065039/http://www.expressindia.com/latest-news/b-r-films-settles-plagiarism-charges-with-fox/499691/.
- ↑ Adarsh, Taran (29 April 2009). "Banda Yeh Bindaas Hai in deep trouble". ஒன்இந்தியா. Archived from the original on 9 February 2021. பார்க்கப்பட்ட நாள் 20 February 2010.
- ↑ "Banda Yeh Bindaas Hai: stuck in copyright row, release on hold for multiplex stir". இந்தியன் எக்சுபிரசு. 21 May 2009 இம் மூலத்தில் இருந்து 9 February 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210209145540/http://archive.indianexpress.com/news/banda-yeh-bindaas-hai-stuck-in-copyright-row-release-on-hold-for-multiplex-stir/463253/.
- ↑ 4.0 4.1 Vyas, Hetal (16 June 2009). "Ravi Chopra's film in legal trouble". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 11 August 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110811071050/http://articles.timesofindia.indiatimes.com/2009-06-16/news-interviews/28167088_1_ravi-chopra-substantial-reproduction-br-films.
- ↑ Pradhan, Bharathi S. (19 July 2009). "Goodbye to copy cat days". தி டெலிகிராஃப் இம் மூலத்தில் இருந்து 13 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131213111046/http://www.telegraphindia.com/1090719/jsp/7days/story_11254743.jsp.
- ↑ Wax, Emily (29 August 2009). "Hollywood Finally Challenging India's Booming Bollywood Over Knockoffs". தி வாசிங்டன் போஸ்ட் இம் மூலத்தில் இருந்து 9 February 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210209145841/https://www.washingtonpost.com/wp-dyn/content/article/2009/08/25/AR2009082503104.html.
- ↑ Srivastava, Sumeysh (28 March 2018). "'Raabta', 'Partner', 'Kaante': How Bollywood has dealt with plagiarism cases". Scroll.in. Archived from the original on 9 February 2021. பார்க்கப்பட்ட நாள் 30 April 2018.
- ↑ "After It's My Life, 15 More Delayed Films That Deserve a TV or OTT Release!". ஜீ5. 5 November 2020. Archived from the original on 9 February 2021. பார்க்கப்பட்ட நாள் 11 January 2021.
- ↑ "Noted filmmaker Ravi Chopra discharged from Mumbai hospital". The Times of India. 2 Nov 2012. பார்க்கப்பட்ட நாள் 2014-11-13.
- ↑ "Filmmaker Ravi Chopra Dies at 68". NDTV Movies. 12 November 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-11-13.
- ↑ "Baghban director Ravi Chopra dies at 68". Hindustan Times. 12 November 2014. Archived from the original on 21 January 2015. பார்க்கப்பட்ட நாள் 2014-11-13.
- ↑ "Mahabharat co-director Ravi Chopra dies". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
- ↑ "Filmfare Awards 1985". IMDb.
- ↑ "Kal Ho Naa Ho leads IIFA nominees". https://www.screendaily.com/kal-ho-naa-ho-leads-iifa-nominees/4018041.article.
- ↑ Screen Award for Best Director