பி. ஆர். சோப்ரா

இந்தியத் திரைப்பட இயக்குனர் (1914-2008)

பல்தேவ் ராஜ் சோப்ரா ( Baldev Raj Chopra ) (22 ஏப்ரல் 1914-5 நவம்பர் 2008) பி. ஆர். சோப்ரா எனவும் அறியப்படும் இவர் பாலிவுட் திரைப்படத் துறை மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் முன்னோடியாக அறியப்பட்ட இயக்குநரும் மற்றும் தயாரிப்பாளரும் ஆவார்.[1] அஃப்சானா, ஏக் ஹி ராஸ்தா, நயாதௌர், சாதனா, கனூன், கும்ரா, ஹம்ராஸ், துண்ட், பதி பத்னி அவுர் வோ, இன்சாஃப் கா தாராசு மற்றும் நிகா போன்ற குறிப்பிடத்தக்க படங்களை இயக்கியதற்காக இவர் அறியப்படுகிறார்.[2][3][4] தூல் கா பூல், வக்த், இட்டெபாக், ஆத்மி அவுர் இன்சான், சோட்டி சி பாத், தி பர்னிங் ரயில், ஆஜ் கி ஆவாஸ், பாக்பன் மற்றும் தொலைக்காட்சி தொடரான மகாபாரதம் உள்ளிட்ட வெற்றிப் படங்களையும் இவர் தயாரித்தார்.[5][6] 1998 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மிக உயர்ந்த திரைப்பட விருதான தாதாசாகெப் பால்கே விருது, 2001 ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த சிவில் விருதான பத்ம பூசண் ஆகியவை இவருக்கு வழங்கப்பட்டது.

பி. ஆர். சோப்ரா
2013 இல் வெளியிடப்பட்ட அஞ்சல் தலையில் சோப்ரா
பிறப்புபல்தேவ் ராஜ் சோப்ரா
(1914-04-22)22 ஏப்ரல் 1914
ரகோன், பஞ்சாப், பிரித்தானிய இந்தியா (தற்போதைய பஞ்சாப், இந்தியா)
இறப்பு5 நவம்பர் 2008(2008-11-05) (அகவை 94)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணி
  • திரைப்படத் தயாரிப்பாளர்
  • இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1944–2006
வாழ்க்கைத்
துணை
பிரகாஷ்
பிள்ளைகள்இரவி சோப்ரா உட்பட மூவர்
புகழ்ப்பட்டம்

இவரது இளைய சகோதரர் யஷ் சோப்ரா, மகன் இரவி சோப்ரா மற்றும் மருமகன்கள் ஆதித்யா சோப்ரா மற்றும் கரண் ஜோஹர் ஆகியோரும் பாலிவுட் துறையில் இயக்குநர்களாக உள்ளனர். இவரது மருமகன் உதய் சோப்ரா ஒரு நடிகரும் மற்றும் தயாரிப்பாளரும் ஆவார்.

இறப்பு

தொகு

பி. ஆர். சோப்ரா தனது 94 வயதில் மும்பை 5 நவம்பர் 2008 அன்று இறந்தார்.[7][8]

 
நயா தௌர் திரைப்படத்தின் இசை வெளியீட்டில் கலந்து கொண்ட பி. ஆர். சோப்ரா (இடதுபுறம் அமர்ந்திருக்கிறார்.) மற்றும் யாஷ் சோப்ரா

கௌரவம்

தொகு

இந்திய அஞ்சல் துறை 2013இல் வெளியிட்ட அஞ்சல் தலையில் இடம் பெற்றுள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Filmmaker B R Chopra passes away. Press Trust of India via NDTV. 5 November 2008
  2. "Legend Dilip Kumar Passes Away At 98". Box Office India. 7 July 2021. பார்க்கப்பட்ட நாள் 9 November 2022.
  3. "Worth Their Weight in Gold! - Box Office India : India's premier film trade magazine". Archived from the original on 15 September 2017. பார்க்கப்பட்ட நாள் 24 October 2015.
  4. "Blockbusters Of Twenty-Five Years (1973-1997)". 13 October 2023.
  5. "Baghban – Movie". Box Office India.
  6. B.R.Chopra made socially relevant films தி இந்து, 6 November 2008.
  7. Filmmaker B.R. Chopra dead. Thaindian.com (5 November 2008). Retrieved on 2018-11-09.
  8. Bollywood producer BR Chopra dies. BBC News, 5 November 2008.
தொகு
 
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ஆர்._சோப்ரா&oldid=3914106" இலிருந்து மீள்விக்கப்பட்டது