இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

இராசபாளையம் ஊராட்சி ஒன்றியம் (Rajapalayam Block) தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். இராசபாளையம் ஊராட்சி ஒன்றியம் 36 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இராசபாளைத்தில் இயங்குகிறது.

—  இராசபாளையம் ஊராட்சி ஒன்றியம்  —
இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம்
இருப்பிடம்: இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 9°27′05″N 77°33′16″E / 9.4515145°N 77.5543812°E / 9.4515145; 77.5543812
மாவட்டம் விருதுநகர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் வீ ப ஜெயசீலன், இ. ஆ. ப [3]
ஒன்றியக்குழு தலைவர்
மக்கள் தொகை 1,56,460 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மக்கள் வகைப்பாடு தொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,56,460 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 45,492 ஆகவும் மற்றும் பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 243 ஆகவும் உள்ளது.[4]

கிராம ஊராட்சி மன்றங்கள் தொகு

இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 36 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்:[5]

  1. அருள்புத்தூர்
  2. அயன்கொல்லன்கொண்டான்
  3. சத்திரப்பட்டி
  4. சொக்கநாதன்புத்தூர்
  5. தளவாய்புரம்
  6. இளந்திரைக்கொண்டான்
  7. கணபதிசுந்தரநாச்சியார்
  8. கோபாலபுரம்
  9. கிளவிக்குளம்
  10. கொருக்கம்பட்டி
  11. கிருஷ்ணாபுரம்
  12. குறிச்சியார்பட்டி
  13. மீனாட்சிபுரம்
  14. மேலபட்டக்கரிசல்குளம்
  15. மேலூர் துரைசாமிபுரம்
  16. மேலராஜகுலராமன்
  17. முகவூர்
  18. முத்துசாமிபுரம்
  19. நக்கனேரி
  20. நல்லமநாயக்கன்பட்டி
  21. புத்தூர்
  22. எஸ். இராமலிங்கபுரம்
  23. சாம்சிகாபுரம்
  24. சோழபுரம்
  25. சிவலிங்கபுரம்
  26. சோலச்சேரி
  27. சுந்தரநாச்சியார்புரம்
  28. சுந்தரராஜபுரம்
  29. தெற்கு தேவதானம்
  30. தெற்கு வெங்கநல்லூர்
  31. தென்கரை
  32. வடக்கு தேவதானம்
  33. வடகரை
  34. ஜமீன் கொல்லான்கொண்டான்
  35. ஜமீன் நல்லமங்கலம்
  36. ஜமீன் நத்தம்பட்டி

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு