இராஜ்சிறீ தேஷ்பாண்டே
இராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே (Rajshri Deshpande) ஓர் இந்திய நடிகையும், ஆர்வலரும் ஆவார்.[1] இயக்குநர் பான் நளினின் "ஆங்கிரி இன்டியன் காட்டெஸ்" (கோபமான இந்திய தேவதைகள்) என்ற படத்தில் இலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இவர் சர்வதேச அங்கீகாரம் பெற்றார். இதைத் தொடர்ந்து சனல் குமார் சசிதரனின் "செக்ஸி துர்கா" என்ற படத்தில் துர்காவாக நடித்தார். இது ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் கிவோசு தோசர் விருதை வென்றது. பிபிசி ஒன்னின் மெக்மாஃபியாவில் மஞ்சு என்ற கதாபாத்திரத்திலும் நடித்தார். அனுராக் காஷ்யப் இயக்கிய நெற்ஃபிளிக்சு தொடரான சேக்ரெட் கேம்ஸில் சுபத்ராவாக நடித்ததற்காக விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றார். இவர் நந்திதா தாஸின் மான்டோ படத்தில் ஒருது எழுத்தாளர் இசுமத் சுகதாய் வேடத்தில் நடித்தார்.
இராஜ்சிறீ தேஷ்பாண்டே | |
---|---|
2015இல் இராஜ்சிறீ தேஷ்பாண்டே | |
பிறப்பு | அவுரங்காபாத்து, மகாராட்டிரம், இந்தியா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2011–தற்போது வரை |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஇராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே, மகாராட்டிராவின் அவுரங்காபாத்தில் ஒரு தொழிலாள வர்க்க குடும்பத்தில் மூன்று உடன்பிறப்புகளில் இளையவராகப் பிறந்தார். சிம்பியோசிசு சட்டப் பள்ளியில் சட்டப்படிப்பில் இளங்கலை பட்டமும், சிம்பியோசிசு சர்வதேச பல்கலைக்கழகத்தில் விளம்பரத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். இவர் தன்னை ஆதரிப்பதற்காக விளம்பரத் துறையில் நுழைந்தார். ஆனால் விரைவில் நடிப்பில் ஈர்க்கப்பட்டார். மும்பையில் உள்ள விஸ்லிங் உட்ஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்திலிருந்து திரைப்படத் தயாரிப்பில் சான்றிதழையும் பெற்றுள்ளார்.[2]
தொழில்
தொகு2012ஆம் ஆண்டில் அமீர்கான் நடித்த தலாஷ் படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் தேஷ்பாண்டே பாலிவுட்டில் அறிமுகமானார்.[3] பின்னர் இவர் தொலைக்காட்சிக்குச் சென்று 2013இல் குச் தோ லாக் கஹெங்கே, 24: இந்தியா போன்றத் தொடர்களில் தோன்றினார். சல்மான் கானின் கிக் படத்தில் ஒரு சிறிய பாத்திரத்துடன் பெரிய திரைக்கு திரும்பினார். 2015இல் ஹராம் என்ற மலையாளத் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் தோன்றினார். இந்தி திரையுலகில், பான் நளினின் "ஆங்கிரி இன்டியன் காட்டெஸ்" படத்தில் இலட்சுமியின் சித்தரிப்புதான் இவருக்கு ஒரு பெரிய தளத்தை வழங்கியது. இந்த படம் தொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் மக்கள் தேர்வு விருதையும், உரோம் திரைப்பட விழாவில் மக்கள் தேர்வு விருதையும் வென்றது. சனல் குமார் சசிதரனின் "செக்ஸி துர்கா" என்ற படத்தில் துர்காவாக நடித்தார். இது ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் கிவோசு தோசர் விருதை வென்றது.
சமூக சேவை
தொகுதேஷ்பாண்டே பல மனிதாபிமான காரணங்களுக்காக தனது நேரத்தை ஒதுக்குகிகிறார். 2015 நேபாள நிலநடுக்கத்திற்குப் பிறகு, இவர் ஒரு கிராமத்தில் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்தார். மேலும், 2015ஆம் ஆண்டில், மகாராட்டிராவின் மராத்வாடா பகுதியில் உள்ள பஞ்சாரி என்ற வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராமத்தை இவர் தத்தெடுத்து மழைநீர் சேகரிப்பு திட்டத்தை ஏற்பாடு செய்தார். கழிப்பறைகளை கட்டினார். சுகாதார பரிசோதனைகளையும், சமூக ஊக்குவிப்பு முகாம்களையும் நடத்தினார். அதே கிராமத்தில் சுற்றுச்சூழல் உணர்திறன் கொண்ட பள்ளியையும் கட்டினார்.[4] கிராமத்தில் தனது பணியால் ஏற்பட்ட வெற்றியாலும், சமூக பங்களிப்பாலும் ஊக்குவிக்கப்பட்ட இவர் இப்பகுதியில் மேலும் ஒரு கிராமத்தை தத்தெடுத்தார். 2018ஆம் ஆண்டில், நிலையான கிராம வளர்ச்சிக்கான தனது முயற்சிகளை விரிவுபடுத்துவதற்காக இவர் நபங்கன் அறக்கட்டளையை உருவாக்கினார். கடந்த சில ஆண்டுகளில், பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான் பனிகளில் ஈட்பட்டுவரும் நடிகை ஜூஹி சாவ்லாவின் தன்னார்வ தொண்டு நிறுவனமான சிட்டிசன்ஸ் ஃபார் டுமாரோவின் முக்கிய உறுப்பினராகவும் இருந்தார்.[5]
சான்றுகள்
தொகு- ↑ "Rajshri Deshpande". IMDb. பார்க்கப்பட்ட நாள் 2018-01-19.
- ↑ "Female Idol Blog Series – A Rendezvous With Rajshri Deshpande" (in en-US). WMF இம் மூலத்தில் இருந்து 2018-01-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180120065647/http://www.wmfindia.com/blogs/female-idol-blog-series-an-interview-with-rajshri-deshpande/.
- ↑ Kagti, Reema (2012-11-30), Talaash, Aamir Khan, Kareena Kapoor Khan, Rani Mukerji, பார்க்கப்பட்ட நாள் 2018-01-19
- ↑ "Rajshri's River of Hope" (in en-US). superaalifragilistic. 2016-05-28. https://superaalifragilistic.wordpress.com/2016/05/28/rajshris-river-of-hope/.
- ↑ "Vidya Balan, Milind Soman, Nana Patekar and Rajshri Deshpande – Indian celebrities who have stood up for bringing a change in the society" (in en-US). http://www.bollywoodlife.com/news-gossip/vidya-balan-milind-soman-nana-patekarand-rajshri-deshpande-indian-celebrities-who-have-stood-up-for-bringing-a-change-in-the-society/.